வாய்ப்புண் தொந்தரவால் பலர் அடிக்கடி
அவதியுறுபவர். அனைவருக்குமுள்ள ஒரு பொதுவான விஷயம் என்றாலும் அவதி... அவதிதான்.
தெரியாதவர்கள் "இதுக்கு போயி பெரிசா அலட்டிக்கிறே!" என்றால் "வாய்ப்புண் உனக்கு
வந்தா தெரியும்!" என்பர். பாதிப்படைந்த சிறிய பகுதி என்றாலும் அந்த அளவிற்கு
முகத்தை வாட வைக்கும் இந்த வாய்ப்புண் பற்றிச் சில விஷயங்களைத் தெரிந்து வைத்துக்
கொண்டால் நமக்கு மட்டுமின்றி, பாதிப்படைந்தவர்களுக்கும் உதவிடலாமே? இது,
சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்காக சகோ. அபூஸாலிஹா ஆக்கியளித்த மருத்துவக்
கட்டுரை.
பயனுள்ள பத்தொன்பது வகையான, எளிய மருத்துவக் குறிப்புகளை,
சகோதரி (கல்லை) நூர்ஜஹான் அவர்கள் தொகுத்து நமக்கு அனுப்பியுள்ளார். நோய்களுக்கு
அல்லாஹ் நிவாரணம் அளிக்க வேண்டிப் பிரார்த்தனைகளோடு வாசகர்கள் பயனடைவதற்காக அவற்றை
இங்குத் தருவதில் மகிழ்கிறோம்! -
சத்தியமார்க்கம்.காம்.
(01)
மாரடைப்பு
நடுமார்பில் வலி, மார்பில் இறுக்கிப்பிடித்ததுபோல்
உணர்வு, மார்புப் பகுதியிலிருந்து இடது தோள்பட்டைவரை வலி பரவுதல், பின் மார்பின்
நடுப்பகுதியில் வலி ஏற்பட்டு, கழுத்து வரைக்கும் பரவுதல், அதிக வியர்வை, வாந்தி,
மயக்கம் ஆகியவை மாரடைப்புக்கான முக்கிய அறிகுறிகளாகும். அதிகப் பதட்டம், மன
அழுத்தம் உள்ளவர்கள், புகை-மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான
வாய்ப்புகள் அதிகம்.
வெப்பக்காலங்களில் உடலிலிருந்து அதிகபட்ச நீர்
வியர்வை மூலமாக வெளியேறுவதால் பலருக்கு உடல் தளர்ந்து விடும் நிலை ஏற்படுவதுண்டு.
வேண்டாத நோய்கள் உள்ளவர்களுக்கும் முதியோர்களுக்கும் இதன் பாதிப்பு அதிகமாக
இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக