ஏனைய இணைப்புகள்<><> இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது.

செவ்வாய், 20 டிசம்பர், 2011

மனஅழுத்தத்திற்கு மருந்தாகும் கவா கவா பானம்


மருத்துவம்

மனஅழுத்தத்திற்கு மருந்தாகும் கவா கவா பானம்

மனஅழுத்தத்திற்கு மருந்தாகும் கவா கவா பானம்
பசிபிக் தீவுகளில் இயற்கையாக காணப்படும் கவா கவா தாவரம் அங்கு வாழும் பழங்குடியின மக்களின் சடங்கு சம்பிரதாயங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தென் பசுபிக் நாடுகளான பிஜி, ஹவாய், டோங்கா, நியூகினியா உள்ளிட்ட தீவுகளில் இது மருந்துப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இத்தாவரத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பானம் திருமணம், பிறப்பு, மரணம் மற்றும் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பானமாக பருகுகின்றனர்.இந்த கவா கவா பானத்தை குடிப்பவர்கள் கடவுளுக்கு சமமாக கருதப்படுகின்றனர்.

மருத்துவ குணம்

1886 ஆம் ஆண்டில் இருந்து இதன் மருத்துவ குணம் உலகிற்கு தெரியவந்தது.இத்தாவரத்தின் வேர் நரம்பு மண்டல நோய்களை போக்கும், தசை நோவுகளை குணப்படுத்தும். மருத்துவ குணம் நிறைந்த இந்த தாவரம், அமெரிக்கா, மற்றும் ஆஸ்திரோலியாவில் மருந்திற்காக பயிரிடப்படுகிறது. சதைப்பற்றுடைய தண்டும், இதய வடிவிலான இலைகளையும் கொண்ட இத்தாவரம் என்றும் பசுமையுடன் இருக்கும். இத்தாவரத்தின் தண்டின் அடிப்பகுதியும், வேரும் மருத்துவ குணம் உடையவை.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

கவா கவா தாவரத்தின் வேரில் காணப்படும் கவாலோக்டோன்கள், கருவய்ன், அல்கலாய்டு பிப்பெரிடைன், பைபர் மெதி சிடிசைன், ஆகியவை மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாக உள்ளன.

உடல் வலுவேற்றும்

வேரில் இருக்கும் வேதிப்பொருட்கள் ஊக்குவியாகவும், வலுவேற்றியாகவும், செயல்பட வைக்கும். இது அதீத படபடப்பு மற்றும் கவலைகளைப் போக்கும். இது வலி போக்குவி. நன்றாக தூக்கத்தை தூண்டும். சிறுநீர்ப்பை கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.

மனஅழுத்த மருந்து

தென் கடல் தீவுகளில் மன அமைதி மற்றும் உணர்ச்சி தூண்டும் பொருளாக கவா கவா மருந்து பயன்படுத்தப்படுகிறது. இது அதிக அளவில் உட்கொள்ளப்படும் போது நன்னிலை உணர்வினை தருகிறது. இதனால் பால் உணர்வு தூண்டுவியாக கருதப்படுகிறது. இதில் காணப்படும் கவாலேக்டேக்டோன்கள் எனப்படும் வேதிப்பொருட்கள் மைய நரம்பு மண்டல அழுத்தத்தினை குறைப்பதுடன் வலிப்புக்கு எதிராக செயல்படுகின்றன.

கவாகவா மருந்து மன அழுத்தத்தை போக்குகிறது. இது மயக்கம் அளிப்பதில்லை. இருப்பினும், தசை இருக்கம் மற்றும் மன கிளர்ச்சி அழுத்தங்களை குணப்படுத்த உதவுகிறது.

தோல் வறட்சி நீங்கும்

இந்த கவா கவா மருந்தை வாராத்திற்கு மூன்று முதல் நான்கு நாட்கள் உட்கொண்டால் மது குடித்து ஈரல் கெட்டுப்போனவர்களுக்கு குணம் தெரியும் என்கின்றனர் மருத்துவர்கள். தோல் வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது சிறந்த மருந்தாகும். இந்த மருந்து வாய்ப்புண், மற்றும் பல்வலி ஆகியவற்றில் கொப்பளிப்பாகப் பயன்படுகிறது.

 

மாரடைப்பு ஏற்படாமல் நீண்ட காலம் வாழ்வதற்கு தேவையான பத்து உணவு வகைகள்:

 மாரடைப்பு ஏற்படாமல் நீண்ட காலம் வாழ்வதற்கு தேவையான பத்து உணவு வகைகள்:
1. ஒலிவ் எண்ணெய்: Olive என்பதிலேயே Live என்று ஆசிர்வாதம் செய்வதும் பொதிந்துள்ளது. 40 வருடங்கள் மேலைநாடுகளில் செய்த ஆராய்ச்சிகளில் ஒலிவ் எண்ணெயில் செறிவற்ற கொ...

கர்ப்பத்திற்கான அறிகுறிகள்

கர்ப்பத்திற்கான அறிகுறிகள்
1. கர்ப்பத்திற்கான அறிகுறிகள் திருமணம் ஆன எல்லாத் தம்பதியரும் ஆவலோடு எதிர்பார்ப்பது ஒரு குழந்தையைத்தான். . ஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி...

தொடர்ந்து 4 மாதங்கள் குறைந்த சக்தி தரும் உணவை சாப்பிட்டால் நீரிழிவு குணமாகும்; புதிய ஆய்வில் தகவல்

தொடர்ந்து 4 மாதங்கள் குறைந்த சக்தி தரும் உணவை சாப்பிட்டால் நீரிழிவு குணமாகும்; புதிய ஆய்வில் தகவல்
தற்போது உலகம் முழுவதும் நீரிழிவு நோயினால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அதற்கான மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வருகின்றனர். அவைகளை தவிர்த்து...

தினமும் 2 அல்லது 3 கப் காபி குடித்தால் புற்றுநோய் ஏற்படாமல் தப்பிக்கலாம்

தினமும் 2 அல்லது 3 கப் காபி குடித்தால் புற்றுநோய் ஏற்படாமல் தப்பிக்கலாம்
தினமும் 2 அல்லது 3 கப் காபி குடித்தால் புற்றுநோய் ஏற்படாமல் தப்பிக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் ஹார்வர்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஊ...

ஞாபக மறதியிலிருந்து விடுபடுவதற்கு

ஞாபக மறதியிலிருந்து விடுபடுவதற்கு
ஜேர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பேராசிரியர் போரிஸ் ஷிமிட் தலைமையில் அல்சைமர் என்று அழைக்கப்படும் நினைவிழத்தல் நோய் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகி...

உடல் எடையை குறைக்க சுலபமான வழி......

உடல் எடையை குறைக்க சுலபமான வழி......
* உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர் ஏராளம். கொஞ்சம் குண்டாக வேண்டும் என்று ஆசைப்படுவோர் கூட, உடல் எடை அதிகமுள்ளவரின் அவஸ்தைகளைக் கேட்டால் கொஞ்சம் அர...

வாய்புண்களை குணமாக்கும் மாம்பூ கசாயம்

வாய்புண்களை குணமாக்கும் மாம்பூ கசாயம்
முக்கனிகளில் ஒன்றாக போற்றப்படும் மாம்பழம் எண்ணற்ற மருத்துவப் பயன்களை கொண்டுள்ளது. வைட்டமின் சத்துக்களும், தாது உப்புகளும் கொண்டுள்ள மாம்பழத்தைப் போலவே...

புற்றுநோயைக் குணப்படுத்தும் அதிசய மருந்து கண்டுபிடிப்பு: 5 ஆண்டுகளில் பயன்பாடு

புற்றுநோயைக் குணப்படுத்தும் அதிசய மருந்து கண்டுபிடிப்பு: 5 ஆண்டுகளில் பயன்பாடு
புற்றுநோயைக் குணப்படுத்தும் அதிசய மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மருந்து இன்னும் சில கொடிய வியாதிகளைக் குணப்படுத்த வ...
பக்கம் 1 - மொத்தம் 4 இல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக