-
ஹா லிவுட் திரைப்படங்களுக்கு உலகளவில் என்றுமே மவுசு அதிகம். அதிக பொருட்செலவிலும், பிரம்மாண்டமாகவும் வித்தியாசமான கதை ...
-
இ ணையம் என்பது அனைத்துமே கொட்டி கிடக்கும் தகவல் களஞ்சியம். இணையத்தில் இந்த விஷயம் கிடைக்கவில்லை என்று குறை கூறினால் நீங்கள் சரியாக இணைய...
-
ஆன் லைனில் தொலைகாட்சி சானல்களை கண்டுகளிக்க பல்வேறு இணைய தளங்கள் உள்ளன. இவற்றில் தனிச்சிறப்பு மிக்கதாய் இத்தளம் விளங்குகிறது . இத்தளத்தி...
-
த மிழில் 2011 ம் வருடம் 120 படங்கள் ரிலீசாகின. ஆனால் மிகக் குறைந்த படங்களே தயாரிப்பாளர்களுக்கு லாபம் ஈட்டின. சிறு பட்ஜெட் படங்கள் பெரிய அ...
-
நா ம் இணையத்தில் பல எண்ணற்ற வீடியோக்களை காண்கிறோம். நமக்கு பிடித்த பாடல்கள், படங்கள், நகைச்சுவை மற்றும் தொழில்நுட்பம் இப்படி ஏராளமான வீட...
-
உ லகிலேயே மிகக் குறைந்த விலையில் அமைந்த ஆகாஷ் டேப்ளட் பிசி இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டது. மத்திய அமைச்சர் கபில் சிபல் இதனை வெள...
-
அமீர்கான், மாதவன் நடித்த `3 இடியட்ஸ்' இந்தி படம் வெற்றிகரமாக ஓடியது. இப்படம் தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், `நண்பன்' என்...
-
ஒவ்வொரு தொகுதி எம் எல் ஏக்கும் ஒரு "ஈ மெயில் ஐடி" கொடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் உங்கள் " நியாமான " கோரிக்கைகளை நீங்கள்...
-
இ ன்று உலகில் கம்ப்யூட்டர் இல்லாத துறையே இல்லை எனலாம். அந்த அளவிற்கு கணினி நம்மிடம் வளர்ச்சி அடைந்துள்ளது. இப்பொழுது கம்ப்யூட்டர் ரூபாய் ...
-
ராஜபாட் டை நடிகர் : விக்ரம் நடிகை : தீக்ஷா ஷெத் இயக்குனர் :சுசீந்திரன் க லை படங்களையும், கமர்ஷி
சனி, 31 டிசம்பர், 2011
திரைப்படங்களை தமிழில் இலவசமாக காண சிறந்த 10 தளங்கள்
இணையத்தின் வேகத்தை இலகுவாக அதிகரிக்கும் - மென்பொருள்
இணையத்தின் வேகத்தை இலகுவாக அதிகரிக்கும் - மென்பொருள்
- Friday, 30 December 2011 09:19

இணையத்தை பயன்படுத்தும் ஏராளமானோருக்கு அதன் வேகத்தை அதிகரிப்பதற்கு
எவ்வாறான நடவடிக்கைகளை கணினியில் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
Auslogics Internet Optimizer என்ற மென்பொருளின் மூலம் சாதரண பாவனையாளரும் கூட இணைய வேகத்தை அதிகரிப்பதற்கான
ஆட்டோ ஆப்டிமைசேஷன் செயற்பாடுகளை மேற்கொள்ளலாம்.
Auslogics Internet Optimizer கணினியில் நிறுவிய பின்னர் முதலில்
உங்கள் இணைய வேகத்தை தேர்வு செய்து
Analyze ஐ அழுத்துங்கள். இதன் மூலம் இணைய வேகம் பரீசிலிக்கப்பட்டு மாற்றங்கள் செய்ய வேண்டிய செட்டிங்குகளின் விபரங்கள் திரட்டப்பட்டு பட்டியலிடப்படும்.

அதில் விரும்பிய அல்லது அனைத்தையும் தேர்வு செய்து
Optimize ஐ அழுத்துங்கள்.
அதன் பின்னர் கணினியை ரீ ஸ்டார்ட் செய்தல் வேண்டும்.

Manual Optimization ஐ தேர்வு செய்து விரும்பிய செட்டிங்குகளை மட்டும் மாற்றிக்கொள்ளலாம்

தரவிறக்கம் செய்ய - http://www.auslogics.com/en/
அல்லது இங்கே
பயர்பாக்ஸில் யூடியூப் வீடியோ தெரியவில்லை - சரி செய்வது எப்படி?
டாப் டவுண்லோட்ஸ் 2011 - 4தமிழ்மீடியாவின் பார்வையில்.
இணையத்தில் நத்தார் வாழ்த்துக்கள் அனுப்புவது எப்படி?
அழிக்கப்பட்ட கோப்புக்களை ரீகவர் செய்ய, மற்றும் முழுவதுமாக நீக்கும் மென்பொருள்.
இச்செய்தி தொடர்பில் நீங்கள் நினைப்பது என்ன?
நாகரீகமான வார்த்தைகளில் உங்கள் கருத்துக்களைத்
கீழேயுள்ள பாக்ஸில் தெரிவியுங்கள். அவற்றிக்கு கருத்தாளர்களே உரித்துடையவர்கள்.
அனுமதித்த பின்னரே வெளியாகும். கருத்துக்கள் தெரிவிப்பதற்கான முறை மற்றும் தமிழில் எழுத, உதவிக்கு
அழுத்துக!..
உங்கள் கருத்து இங்கே
மேலும் முக்கிய செய்திகள்:
- இந்தியாவை கேலி செய்யும் பிபிசியின் அறிவிப்பாளர் : மீண்டுமொரு ஊடக இனவெறி தாக்குதல்?!
- ஜனவரி மாதம் யாழ் விஜயம் மேற்கொள்ளும் டாக்டர்.அப்துல் கலாம்!
- நீங்களாக ஏற்கும் வரை!
- சமந்தாவின் கொடியும் கோடியும்!
- அடுத்து அமையவுள்ள மத்திய அரசில் அதிமுக முக்கிய பங்கெடுக்கும் : ஜெயலலிதா
- லோக்பால் மசோதா நிறைவேற்றப்படாமலே மாநிலங்களவை ஒத்திவைப்பு
- தேனி மாவட்ட விவசாயிகளே நடிக்க இருக்கும் அணை 555!
- துவம்சம் செய்த 'தானே' புயல் : தமிழ்நாடு, புதுச்சேரியில் 27 பேர் பலி?!
- 2011 இல் உலகம் : முக்கிய நிகழ்வுகளின் புகைப்பட தொகுப்பு : பகுதி 2
- விரைவில் ஒராங்குட்டான் குரங்குகளும் தமது நண்பர்களுடன் வீடியோ சேட்டிங்கில் இணைகின்றன!
- 'தானே' புயல் காற்று : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 6 பேர் பலி
- யாழில் கட்டப்படவிருக்கும் இந்திய கலாச்சார மையத்தின் திறப்பு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அழைப்பு?!
- கனவுகள்
- வே.பிரபாகரனின் உருவப்பட தபால் முத்திரைகள் பிரான்ஸில் வெளியீடு?!
- இணையத்தின் வேகத்தை இலகுவாக அதிகரிக்கும் - மென்பொருள்
- இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம்
- வடகொரிய முன்னாள் தலைவரின் மரண சடங்கு ஊர்வலம் போட்டோஷாப் செய்யப்பட்டதா?! : புதிய சர்ச்சை
- இலவச மின்சாரம் 600 மெகா வாட்டும்,மின் கட்டணக் குறைப்பும்!
- கோ ஹிந்தி ரீமேக் வில்லனாக பிக் பி!
- போராளிகள் எரிய வேண்டாம்! - சீமான் அறிக்கை!
வெள்ளி, 30 டிசம்பர், 2011
வாழ்க்கை ஒரு போராட்டம் !
வாழ்க்கை ஒரு போராட்டம் !
போராட்டத்தைச்
சந்திக்காத எந்த உயிரும் பூமியில் வாழ முடியாது . நாம் பிறந்தது முதல் இறப்பது வரை
போராட்டம் இருந்துகொண்டே தான் இருக்கிறது . ஏன் நாம் பிறப்பதே ஒரு போராட்டம் தானே .
லட்சக்கணக்கான விந்தணுக்களுடன் சண்டையிட்டு , போராடி தான் நமக்கான இருப்பை ,
பிறப்பை உறுதி செய்துள்ளோம் .போராட்டத்தில் பிறந்து , போராட்டத்தில் வளர்ந்து ,
போராட்டத்தில் மடிவது தான் நம் வாழ்க்கை . நாம் இன்று போராட்டமே இல்லாத வாழ்க்கையை
மட்டுமே வாழ நினைக்கிறோம் . இது எப்போதும் சாத்தியமில்லை . பிறப்பதற்கே
லட்சக்கணக்கான அணுக்களை வென்ற நம்மால் வாழ்வதற்கான போராட்டத்தில் வெல்ல முடியாதா
என்ன ?!
நல்லதை நினைத்தே போராடுவோம் !
வீதியில் நின்று போராடுவதும் , நாட்டுக்காக போராடுவதும்
மட்டும் போராட்டம் அல்ல . உயிர் வாழ்வதற்கான போராட்டம் தான் உண்மையான போராட்டம் .
இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும் .கடந்த வாரம் Discovery யில் ஒரு நிகழ்வை
ஒளிபரப்பினார்கள் . அலாஸ்காவில் வாழும் பனிக்கரடிகளையும் , சாலமன் மீன்களைப் பற்றிய
ஒளிபரப்பு அது . பனி காலம் முடிந்த நிலையில் தங்களுக்கு வேண்டிய ( பிடித்தமான )
உணவைப்பெற நதிக்கரைக்கு வருகின்றன கரடிகள் . சாலமன் மீன்கள் , கரடிகள் இருக்கும்
இந்த நதிப்பகுதியைக் கடந்தால் தான் தங்களது இனப்பெருக்கத்தை நடத்த முடியும் .
இல்லையென்றால் கரடிகளுக்கு உணவாக வேண்டியது தான் .
ஒரே
நதிக்கரை இரண்டு இனங்களின் வாழ்க்கைப் போராட்டம் . கரடிகள் வருகின்றன மீன்களைப்
பிடிக்கின்றன , பனிக்காலத்திற்கு வேண்டிய கொழுப்பைச் சேமிக்கின்றன . குட்டிகளுடன்
வரும் பெண் கரடிகள் , குட்டிகளை ஒளித்து வைத்துவிட்டு ஆண் கரடிகள் இல்லாத இடத்தில்
சாலமன் மீன்களை தனக்காகவும் , தன் குட்டிகளுக்காகவும் வேட்டையாடுகின்றன . ஆண் கரடி
பார்த்து விட்டால் உறவுக்கு கட்டாயப் படுத்தும் . இடையுறாக இருக்கும் குட்டிகளையும்
கொன்று விடும் . அதனால் பெண் கரடிகள், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய
காலகட்டம் இது . கரடிகளிடமிருந்து தப்பித்த சாலமன் மீன்கள் உகந்த இடத்திற்குச்
சென்று தங்கள் இனப்பெருக்கதைச் செய்கின்றன . பெண் மீன், தன் வால் பகுதியால் பள்ளம்
தோண்டி முட்டையிடுகிறது . ஆண் மீன், முட்டைகளின் மீது விந்துவைப் பீய்ச்சி
அடிக்கிறது . உரிமையில்லாத மற்றொரு ஆண் மீனும் முட்டைகளின் மீது விந்துவைப்
பீய்ச்சி அடிக்கிறது . கொஞ்ச காலம் அடை காக்கும் பெண் மீன் பிறகு இறந்து விடுகிறது
. பிறகு முட்டைகளிலிருந்து குஞ்சுகள் பிறந்து தங்கள் போராட்டத்தைத் தொடருகின்றன
.
வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம்
தான் . நேர்மையாக இல்லாமல் இருப்பதும் ஒரு போராட்டம் தான் . ஏனென்றால் எல்லா
நேரங்களிலும் நேர்மையாக இருப்பதற்கான சூழலும் , எல்லா நேரங்களிலும் நேர்மையாக
இல்லாமல் இருப்பதற்க்கான சூழலும் யாருக்கும் அமைவதில்லை .தங்கள் கொள்கைகளை
நிலைநிறுத்திக்கொள்ள போராட வேண்டிய கட்டாயம் இருக்கிறது . அதற்கான பலன்கள் நல்லதாக
இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் அவர்கள் மட்டுமே அடைவர் . உண்மைக்காக , நீதிக்காக
, நேர்மைக்காக , உரிமைக்காக,மண்ணுக்காக என்று நாம் போராட வேண்டியுள்ளது .
சமீபத்தில் இங்கிலாந்தில் 11 வயதில் கடத்தப்பட்டு
ஒருவனிடம் 16 ஆண்டுகளாக செக்ஸ் அடிமையாக இருந்து மீட்கப்பட்ட பெண்ணிடம் , "எப்படி
இவ்வளவு கொடுமைகளையும் சகித்து கொண்டீர்கள் ? " என்று கேட்டதற்கு " எப்படியாவது
உயிர் பிழைக்க வேண்டும் என்ற நினைப்பு தான் காரணம் . அவ்வப்போது நான் இருக்கும்
கொடுமையான சூழ்நிலையை மறந்து விடுவேன் " என்று கூறினார் . இத்தனைக்கும் சரியான உணவு
கிடையாது . 14 வயதிலேயே தனது பிரசவத்தை தானே பார்த்துக்கொண்ட கொடுமை வேறு . தன்
குழந்தை தனக்கு மிகவும் ஆறுதலாக இருந்ததாகவும் குறிப்பிட்டார் . மறதி தான் ,நம்
வாழ்கையின் பெரும் துயர்களை மறக்கச் செய்கிறது .எத்தனையோ போராட்டங்கள் இருந்தாலும்
உயிர் வாழ்வதற்கான போராட்டம் ,மற்ற அனைத்து போராட்டங்களையும் வென்று விடுகிறது .
நல்லதை நினைத்தே போராடுவோம் !
jselvaraj.blogspot.com நன்றி
மானிடன்
Showing posts with label M .R. ராதா -
M.R.Radha. Show all posts
Showing posts with label M .R. ராதா -
M.R.Radha. Show all
posts
Monday, June 20, 2011
M.R.ராதா அவர்களின் சிறிய வாழ்க்கைக் குறிப்பு ( ஒலி வடிவில் ) !


M.R.ராதா, "பெரியாரின் போர்வாள்" என்று
அழைக்கப்பட்டவர் . தனது கூர்மையான வசனங்கள் மூலம் பகுத்தறிவு கருத்துகளைப்
பரப்பியவர் . உண்மையான அஞ்சா நெஞ்சனாக இருந்தவர் . "திரையுலகில் எனது வழிகாட்டி ,
M.R.ராதா அண்ணன் " என்று ( MGR , M.R.ராதாவால் சுடப்பட்ட பிறகும் ) MGR ஆல்
புகழப்பட்டவர் . மொத்தத்தில் சிறந்த நடிப்பாற்றல் கொண்ட ஒரு உன்னதமான கலைஞர் .
அவரது சிறு வாழ்க்கைக் குறிப்பு .
பாகம் 1 :
பாகம் 2 :
பாகம் 3 :
உண்மையான கழ(ல)கக்காரர் !
மேலும் கேட்க :
Wednesday, June 1, 2011
M.R.ராதாவின் சிறந்த பேச்சு !


M.R.ராதா , ஈடு இணையில்லாத உன்னதமான கலைஞர் ,
எதற்கும் , யாருக்கும் அஞ்சாத மகா துணிச்சல்காரர் , பெரியாரின் வழி நடந்த பெரியார்
. தனது நாடகங்கள் மூலம் பகுத்தறிவு கருத்துகளை பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில்
பரப்பியவர் . நடிப்பில் யாரும் தொட முடியாத உயரத்தைத் தொட்டவர் . இப்படி
சொல்லிக்கொண்டே போகலாம் . ஒரு முறை மலேசியா சென்ற போது அவர் பேசியதைக் கேளுங்கள்
.
எவ்வளவு விசயங்களைப் பேசி இருக்கிறார் என்று
பாருங்கள் . எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பேச்சு .அரசியல் , மதம் , சினிமா ,
MGR , சினிமாக்காரர்கள் , கூத்தாடிகள் , மன்னர்கள் , பெரியார் , ஜெயில் , கடவுள்
என்று நிறைய பேசி இருக்கிறார் .
சுயமரியாதை மிக்க ஒளிவு மறைவற்ற தமிழனின் பேச்சைக்
கேட்ட திருப்தி!
மேலும் பார்க்க :
நீயா நானா ? கோபிநாத்தின் ஆவேசம் !
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ...!
MGR அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள் !
.................................
மேலும் பார்க்க :
நீயா நானா ? கோபிநாத்தின் ஆவேசம் !
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ...!
MGR அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள் !
.................................
உயிர்மை
- 2011 (1)
- M .R. ராதா - M.R.Radha (2)
- அரசியல் -Politics (19)
- இசை -Music (2)
- கட்டுரை - Essay (13)
- கவிதை மாதிரி - Poem (1)
- காணொளி - video (11)
- காமராஜர் - Kamaraj (1)
- கிரிக்கெட் -cricket (5)
- சினிமா - Cinema (5)
- சுற்றுச்சூழல் - Environment (8)
- நகைச்சுவை - tamil comedy (3)
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் -pattukkottai (9)
- மலேசியா வாசுதேவன் - malaysia vasudevan (1)
- வாழ்க்கை - Life (10)
- விஜயகாந்த் - captain vijayakanth (1)
காலச்சுவடு
- ▼ 2011
(70)
- ► December (11)
- வரவு எட்டணா செலவு பத்தணா !
- 2011 ம் வருடமும் சாமானியனும் !
- ஜம்புலிங்கமே ஜடாதரா ...!
- என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே !
- ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு !
- மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !
- பொறக்கும் போது பொறந்த குணம் !
- மெதுவான எளிய வாழ்க்கை !
- மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி !
- உண்மையான கொண்டாட்டம் !
- மட்டமான பேச்சு !
- ▼ June (9)
- செல்போன் சேவை நிறுவனங்களின் பகல் கொள்ளை !
- M.R.ராதா அவர்களின் சிறிய வாழ்க்கைக் குறிப்பு ( ஒலி...
- சிவில் சர்வீசஸ் தேர்வில் கேள்விகள் தமிழிலும் இருக...
- சென்னையில் மீண்டும் பறவைகளின் சங்கீதம் !
- நானே ராஜா நானே மந்திரி - விஜயகாந்த்
- எந்தக் குளியல் சோப் நல்லது ?
- வேடந்தாங்கலில் ஒரு நாள் !
- முக்கிய பிரச்சனைகளும் ஆளுநர் உரையும் !
- M.R.ராதாவின் சிறந்த பேச்சு !
- ► April (13)
- குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ....
- " புலியை எந்தக் கூண்டில் அடைத்தாலும் உறுமத்தான் செ...
- 5 ரூபா -குறும்படம் !
- உலக புத்தக தினம் !
- பூமியைக் காப்போம் வாருங்கள் !
- அமேசான் - அனைவருக்கும் 5 GB மெமரி இலவசம் !
- தமிழகத்தின் முதல் 10 முக்கியப் பிரச்னைகள்
- தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !
- ஏப்ரல் 13 ன் கதாநாயகர்களுக்கு !
- சூரியன் - உலக சக்திகளின் மையம்
- ► December (11)

தீரா நதி
-
முழுநீள நகைச்சுவைத் திரைப்படங்களை அவ்வளவு எளிதில் நம்மால் மறக்க முடியாது .1972 ஆண்டு வெளிவந்த " காசேதான் கடவுளடா ", AVM நிறுவனம் தயாரித்த ஒ...
-
மக்களே மக்களுக்கு மக்களே , நாம் YouTube மூலம் எவ்வளவோ வீடியோ பார்க்கிறோம் . இந்த வீடியோவையும் கொஞ்சம் பார்க்கலாமே . கோபிநாத் அவர்கள் எவ்வளவ...
-
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , பொதுவுடைமை கருத்துக்களை மையமாக கொண்ட பாடல்களை மட்டும் எழுதவில்லை . கற்பனை வளம் ததும்பக் கூடிய நிறைய பாடல்கள...
-
போராட்டத்தைச் சந்திக்காத எந்த உயிரும் பூமியில் வாழ முடியாது . நாம் பிறந்தது முதல் இறப்பது வரை போராட்டம் இருந்துகொண்டே தான் இருக்கிறது . ஏன...
-
1967 ஆம் ஆண்டு கே .பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான முழுநீள நகைச்சுவைத் திரைப்படமான " பாமா விஜயம் " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம் பெற்...
-
காமராஜர் , தமிழகத்தின் தலைசிறந்த மக்கள் தலைவர் , தன்னலமில்லாத அரசியல்வாதி , பதவியில் இருப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்...
-
1957 ஆம் ஆண்டு வெளிவந்த " மகாதேவி " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம் பெற்றுள்ளது . இந்தப்படத்தில் MGR , வீரப்பா மற்றும் பலர் நடித்திருந்...
-
ஒரு சாமானியனின் கவலைகள் என்பதா ,கேள்விகள் என்பதா ,ஆதங்கம் என்பதா அல்லது இயலாமை என்பதா தெரியவில்லை . ஆட்சிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன . ஆ...
-
சூரியன் இல்லாத உலகத்தை நம்மால் கற்பனை செய்யவே முடியாது . உலக சக்திகளின் பிறப்பிடம் சூரியன் தான் . சூரிய ஒளி பூமியை வந்தடைய 8 நிமிடங்கள் 20 ...
-
உலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்விடங்களில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஒலித்து கொண்டிருக்கும் குரல் மலேசியா வாசுதேவனுடையது . தமிழ்நாட்...
பெண்கள் விடுதி ! :- வேண்டியதும், வேண்டாததும்…
பெண்கள் விடுதி ! :- வேண்டியதும், வேண்டாததும்…
ஆனந்தத்தையும் அச்சத்தையும் ஒரு மூட்டையாய்க்
கட்டிப் போட்டால் எப்படி இருக்கும். அப்படியான ஒரு அனுபவம் என்று சொல்லலாம் ஹாஸ்டல்
வாழ்க்கையைப் பற்றி. இதில் பள்ளி, கல்லூரி காலத்தைய ஹிட்லர் கட்டுப்பாடுகளுடன்
இருக்கும் ஹாஸ்டல்கள் ஒருவகை. அந்தக் கட்டுப்பாடுகளை மீறி அத்து மீறல்
சமாச்சாரங்களைச் செய்து திரியும் வசீகரத் திமிர் கல்விக் கால இளமையின்
சொத்து.
அந்தக் காலகட்டத்தையெல்லாம் தாண்டி சமூகத்துக்கு
வரும்போது இன்னொரு வகையான ஹாஸ்டல்கள் உதவிக்கு வருகின்றன. வீட்டை விட்டு
வெளியூர்களில் தனியே வேலை செய்பவர்களுக்கும், வேலை தேடுபவர்களுக்கும் இத்தகைய
ஹாஸ்டல்கள் தான் ஆபத்பாந்தவன்கள். ஆண்களுக்கு பெரும்பாலும் மேன்ஷன்கள் கை
கொடுக்கின்றன. பெண்களுக்கு ஹாஸ்டல்கள் தான். லேடீஸ் ஹாஸ்டல், விமன் ஹாஸ்டல்,
வர்க்கிங் விமன் ஹாஸ்டல் என பல பெயர்களில் பல வகைகளில் ஹாஸ்டல்கள் முகம்
காட்டுகின்றன.
சென்னை போன்ற பெரு நகரங்களில், சாதாரண
மக்களுக்குக் கிடைக்கும் வருமானத்தை வைத்துக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுவதே
கழைக்கூத்தாடியின் கயிற்று நடை போன்றது. அதிலும் ஒரு தனி வீட்டை வாடகைக்கு எடுக்க
வேண்டுமென்றால் அவ்வளவு தான். கிடைக்கும் சம்பளமே போதாது ! தனியே பர்சனல் லோன் தான்
வாங்கி வாடகையே கட்டவேண்டியிருக்கும். அப்படிப்பட்ட திகிலூட்டும் விலைவாசிக்கு
கொஞ்சம் ஆறுதல் நிழலாய் வந்து நிற்பது இந்த ஹாஸ்டல்கள் தான்.
செலவு கம்மி. நிறைய பெண்கள் சேர்ந்திருப்பார்கள்
என்பதால் கொஞ்சம் பாதுகாப்பு உணர்வு. பொழுதும் போகும். உணவுக்காக வெளியே அலைய
வேண்டிய அவசியம் இல்லை இப்படி ஏகப்பட்ட வசதிகள் ஹாஸ்டல்களில் உண்டு. அதேபோல ஹாஸ்டல்
வாழ்க்கை நிறைய நல்ல விஷயங்களையும் கற்றுக் கொடுக்கும். குறிப்பாக நண்பர்களோடு
சேர்ந்து வாழ்வது. பகிர்ந்து வாழ்வது, இருக்கும் வசதிகளைக் கொண்டு “அட்ஜஸ்ட்” பண்ணி
வாழ்வது, சில விஷயங்களில் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பது என ஏகப்பட்ட நல்ல
விஷயங்கள் இங்கே உண்டு. ஒரு வகையில் பெண்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்
இடங்களில் ஒன்று இந்த ஹாஸ்டல் எனலாம்.
அதே நேரம் தற்கொலைகள், ராகிங்கள், ரகசிய தவறுகள்
என ஏகப்பட்ட சிக்கல்களும் விடுதி வாழ்க்கையில் புதைந்து கிடக்கின்றன. இதனால்
ஹாஸ்டலில் தங்குபவர்கள் பல விஷயங்களில் முன்னெச்சரிக்கையாய் இருக்க வேண்டிய அவசியம்
ஏற்படுகிறது.
ஒரு ஹாஸ்டலில் போகும்முன் அதன் வரலாறைக் கொஞ்சம்
புரட்டிப் பாருங்கள். அதை நடத்துபவர்கள் யார் ? நம்பகத் தன்மை உடையவர்கள் தானா ?
ஏதேனும் மதம் சார்ந்த பின்னணியா ? என்பதையெல்லாம் அலசுங்கள். இணையத்தில் அந்த
ஹாஸ்டலின் பெயர் அடிபடுகிறதா ? மக்கள் அதைப்பற்றி என்னென்ன சொல்கிறார்கள்
என்பதையெல்லாம் கவனித்தால் விடுதி பற்றி பல விஷயங்கள் சடுதியில் உங்களுக்குக்
கிடைக்கும். அந்தத் தகவல்கள் எல்லாம் இருந்தால் ஒரு நல்ல ஹாஸ்டலைக் கண்டுபிடிப்பது
உங்களுக்கு எளிது !
ஹாஸ்டல் அமைந்திருக்கும் ஏரியாவையும்
கவனியுங்கள். ரொம்பத் தனிமையான இடமா ? ஆறுமணிக்கு மேல மருந்துக்குக் கூட ஆள்
நடமாட்டம் இருக்காத இடமா ? அமானுஷ்யமான ஒரு சூழலா ? பக்கத்துலேயே டாஸ்மாக் டான்ஸ்
தெரு இருக்கிறதா ? இப்படிப்பட்ட இடங்களை ஒதுக்கிட்டு வேற இடம் தேடறது உங்களுக்கு
நல்லது. பாதுகாப்பான, வெளிச்சமான, அதிக ஆள் நடமாட்டமுடைய, டீசண்டான
இடத்திலிருக்கும் ஹாஸ்டல்கள் உங்களுடைய முதல் தேர்வாய் இருக்கட்டும்.
ஹாஸ்டலில் சேர்ந்தாச்சா ! முதல் வேலை உங்கள்
ரூமில் இருக்கும் நபர்களைப் பற்றி தெரிந்து கொள்வது. ரூமுக்குள்ள போனதும் போகாததுமா
உங்களுடைய புராணங்களை அவிழ்த்து விட ஆரம்பிக்காதீர்கள். ரூமில் இருக்கும் நபர்
எப்படிப்பட்டவர் ? பூர்வீகம் எங்கே ? எங்கே வேலை செய்கிறார் ? அவருடைய குணாதிசயம்
எப்படி என எல்லா விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள். அதுவரைக்கும் கொஞ்சம்
அமைதியாகவே உங்களுடைய ஹாஸ்டல் நாட்கள் ஓடட்டும். “பத்து நிமிஷம் பேசினேன்
அதுக்குள்ள ஒண்ணுக்குள்ளே ஒண்ணாயிட்டோம்” டைப் நட்புகள் பலவும் பாதியிலேயே கரையும்
என்பதை நான் சொல்லத் தேவையில்லை !
ஹாஸ்டல்களில் ஒரு சிக்கல் உண்டு. “மன்னார் அண்ட்
மன்னார்” கம்பெனியில வேலை பார்க்கிறேன் என்று சொல்லிக் கொண்டு திருடும் நோக்கத்தோடு
சிலர் தங்கியிருக்கக் கூடும். கைக்குக் கிடைப்பதைக் கொஞ்சம் கொஞ்சமாய் சுருட்டும்
அத்தகைய பேர்வழிகளிடம் ரொம்ப எச்சரிக்கை தேவை. உங்கள் உடமைகளையெல்லாம் ரொம்பப்
பாதுகாப்பாய் வைத்திருங்கள். உங்க சொத்து, சுகம், வங்கி, சொங்கி விஷயங்களையெல்லாம்
எல்லாரிடமும் சொல்லிட்டுத் திரிய வேண்டாம். நுணலும் தன் வாயால் கெடும் எனும்
பழமொழியை மனசுக்குள் எழுதி வைத்திருங்கள்.
ஹாஸ்டல்களுக்கு வரும்போது வீட்ல இருக்கிற நகை
நட்டையெல்லாம் எடுத்துப் பையில போட்டுட்டு வராதீங்க. அவையெல்லாம் வீட்டிலோ, வங்கி
லாக்கரிலோ பத்திரமாக இருக்கட்டும். ரொம்ப ரொம்ப அவசியமான நகைகளை மட்டும் கையில்
வைத்திருங்கள். ரொம்ப மதிப்பு மிக்க பொருட்களை ஹாஸ்டலில் கொண்டு வராமல் இருப்பது
நல்லது. அப்படியே வைத்திருந்தால் கூட அதை வார்டனோட பாதுகாப்பில் வைத்திருக்க
முடிந்தால் ரொம்ப நல்லது !
நீங்க நீங்களாகவே இருங்க. உங்க ரூம்மேட் எப்படி
வேணும்ன்னாலும் இருக்கலாம். கிழிந்த பேண்ட் போடலாம், அல்லது முழுக்க போர்த்தி
நடக்கலாம், பர்தா போடலாம் அல்லது பாவாடை போடலாம். அது அவரவர் விருப்பம். யாரையும்
கிண்டலடிப்பதோ, அவர்களைக் காப்பியடிப்பதோ வேண்டாம். நீங்க தாவணி போட்ட தீபாவளியாய்
இருக்க விரும்புவது உங்கள் விருப்பம். அடுத்தவங்களைக் காப்பியடிப்பது சில வேளைகளில்
அவர்களுக்கே பிடிக்காமல் போய்விடும் என்பதையும் மனதில் கொள்ளுங்கள். குறிப்பாக
சிலருடைய நடை உடை பாவனைகள் அவர்களுடைய மதம் சார்ந்த நம்பிக்கையாய் இருக்க வாய்ப்பு
உண்டு. நீங்கள் நீங்களாக இருந்தால், தேவையில்லாமல் பிறருடைய மனதை நீங்கள்
புண்படுத்தும் வாய்ப்பையும் தவிர்க்கலாம்!
ஹாஸ்டலில் சட்டதிட்டங்கள் இருக்கும். “சட்டம்
இருப்பதே அதை மீறுவதுக்குத் தானே” ன்னு சினிமா டயலாக் பேசி நடக்காதீங்க. சட்டங்களை
மதியுங்கள். அப்போதான் உங்களுக்கு ஏதேனும் சிக்கல் வந்தால் கூட ஹாஸ்டல் நிர்வாகம்
உங்கள் பக்கம் நிற்கும். இல்லாவிட்டால் “அவ எப்பவுமே அப்படித் தான். எந்த
சட்டதிட்டத்தையும் மதிக்கிறதில்லை” என கை கழுவி வேடிக்கை பார்க்க வாய்ப்பு உண்டு.
அதே போல சட்ட திட்டங்களை எல்லாரும் மதிக்கிறது தான் ஹாஸ்டலோட நல்ல பெயருக்கும்,
பாதுகாப்புக்கும் கூட உத்தரவாதம் என்பதைச் சொல்லத் தேவையில்லை !
அதே நேரத்தில் பல ஹாஸ்டல்கள் அட்வான்ஸ்
விஷயத்தில் சில்லறைத் தனமாக நடந்து கொள்வதும் உண்டு. எனவே அட்வான்ஸ் எவ்வளவு ?
ஹாஸ்டலைக் காலி செய்யும் விதி முறைகள் என்ன ? எந்தெந்த சூழலில் அட்வான்ஸ் பணம்
பிடிக்கப்படும் போன்ற விஷயங்களை நேரடியாகவே கேட்டுத் தெரிந்து விட்டு ஹாஸ்டலில்
சேருங்கள்.
ஹாஸ்டல்ல இருக்கும்போது பொருட்கள் வாங்கறது,
கடைக்குப் போறது போன்ற சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட ஹாஸ்டல் நிர்வாகத்திடம்
ஐடியா கேட்பது ரொம்ப நல்லது. கூட இருப்பவர்களைப் பற்றி முழுசாகத் தெரிந்து கொள்ளும்
வரை அவர்களை கண் மூடித் தனமாக நம்பாமல் இருப்பதே நல்லது !
ஹாஸ்டல்கள் ஒருவகையில் ஹோட்டல்களைப் போல எனும்
நினைப்பும் இருப்பது நல்லது. ரகசிய கேமராக்கள் போன்ற பிரச்சினைகள் அடிக்கடி
ஹாஸ்டல்களில் நிகழ்வதுண்டு. எனவே கொஞ்சம் எச்சரிக்கை உணர்வு எல்லா இடங்களிலும்
இருப்பது பயனளிக்கும்.
பெற்றோரை விட்டுத் தனியே தூரமாய்
அமர்ந்திருக்கும் ஹாஸ்டல் வாழ்க்கை “தப்பு செய்தா என்ன ?” எனும் அசட்டுத்
துணிச்சலின் கதவைத் திறக்கும். உடனே தடாலடியா உள்ளே நுழைஞ்சுடாதீங்க. மெதுவா அந்தக்
கதவை அடைத்துவிட்டு உங்க வேலையைப் பார்க்கக் கிளம்பிடுங்க. புகை பிடிக்கும்
பழக்கம், தண்ணியடிக்கும் பழக்கம் என ஆரம்பித்து எல்லா வகையான தப்புகளுக்கும்
ஹாஸ்டல் நட்பு காரணமாகிவிடக் கூடும். மற்றவங்க கிண்டலடிச்சாலும் பரவாயில்லை.
தப்புகளில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பேன் எனும் மன உறுதி தான் முக்கியம்.
இந்தச் சின்னச் சின்ன விஷயங்களை மனசுக்குள்
எழுதிக் கொண்டால், ஹாஸ்டல் வாழ்க்கை உங்களுக்கு ஹேப்பி வாழ்க்கையாய் இருக்கும்
என்பதில் சந்தேகமில்லை.
|
தவிர்க்க வேண்டிய கிரெடிட் கார்டு தவறுகள்!
தவிர்க்க வேண்டிய கிரெடிட் கார்டு தவறுகள்!
நாட்டில் கிரெடிட் கார்டுகளின் உபயோகம் குறைந்து, டெபிட்
கார்டுகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது ,
தனிநபர் கடன்’ பெறப் போகிறீர்களா?
`தனிநபர் கடன்’ (பெர்சனல் லோன்) வேண்டுமா?’ என்று கேட்டு இதுவரை உங்களுக்கு செல்பேசி அழைப்பு வரவில்லை என்றால் அதிசயம்.
அந்த மாதிரி அழைப்பின்போது, `அதெல்லாம் வேண்டாம்’ என்று பட்டென்று நீங்கள் செல்லை அணைத்திருந்தாலும், சம்மதித்திருக்கலாமோ என்று சிறு சபலம் எழுந்திருக்கலாம். பணத் தேவை இல்லாதவர் யார்?
கிரெடிட் கார்டை’ தேர்வு செய்வது எப்படி?
`கிரெடிட் கார்டு’ குறித்து பல எதிர்மறைக் கருத்துகள் இருந்தாலும், ஆத்திர அவசரத்துக்கு உதவும் அதன் சிறப்பு மறுக்க முடியாதது.
Wednesday, December 28, 2011
குடும்ப அட்டை புதுப்பித்தல்: பொதுமக்களுக்கு அரசு வேண்டுகோள்
நியாயவிலை அங்காடியில் பொருள்கள் பெற செல்லும் போது குடும்ப
அட்டைதாரர்கள், தாங்களே முன் வந்து, கேட்கும் தகவலை தெரிவித்து, குடும்ப அட்டையை
புதுப்பித்துக்கொள்ள ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்
கொண்டுள்ளது.
மக்கள் பாராட்டும் மனிதர்களில் ஒபாமா, ஹில்லரி முதலிடம்
வாஷிங்டன் : அமெரிக்கர்களால் அதிகமாக
பாராட்டப்படும் ஆண்களில் ஒபாமாவும், பெண்களில் ஹில்லரி கிளிண்டனும் முதலிடம்
பிடித்துள்ளனர்
புதன், 28 டிசம்பர், 2011
பல்சுவை
Dec
28
ஒரு பரணில் அதன் விளிம்பில் பூனை ஒன்று
யோசித்துக் கொண்டு இருந்தது. கீழே பாய்வோமா விடுவோமா என்று தான்.கீழே பாய்வதற்கு
குறித்த பூனை கவனமாக அடிமேல் அடி எடுத்து வைத்துக் கொண்டு இருந்தது. ஆறு மாசங்களே
ஆன இந்தப�...
Dec
28
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்
இவற்றின் மூலம் பல்வேறு வித்தியாசமான மாற்றங்களை சந்தித்துக் கொண்டிருக்கும்
மனிதர்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு தான்
இருக்கின்றனர்...............................................................
Dec
27
ஒரு துண்டுக் காகிதம் ஒன்றில் இருந்து
மின்சாரம் உருவாக்கும் தொழினுட்பத்தை உலகின் பிரபல மின் உபகரணங்களைத் தயாரிக்கும்
நிறுவனமான சொனி கண்டுபிடித்துள்ளது.இந்தக் கண்டு பிடிப்பின் மூலம் சொனி நிறுவனம்
தனது...
Dec
27
பிரித்தானியாவின் மேற்கு யார்க்ஷயர்
நகரில் வானில் அடையாளம் தெரியாத மேகம் ஒன்று காணப்பட்டது. இந்த மேகங்கள் இயல்பாக
பஞ்சு போன்ற வெள்ளை நிறத்தில்
காணப்பட்டது.................................................................
Dec
26
இவ்வருடம் அதிகம் விற்பனையாகிய
சாதனங்களாக டெப்லட் கணனியையும், கையடக்கத்தொலைபேசியையும் குறிப்பிடலாம்தற்போதைய
சந்தை நிலைவரத்தின் படி டெப்லட் கணனியானது மிக
வேகமாக..............................................
Dec
26
மாட்டு முக சாயலுடன் 13 வயது சிறுமி
ஆப்பிரிக்க நாடொன்றில் பிறந்துள்ளார். இச்சிறுமி பிறக்கும் போது சாதாரண குழந்தைகள்
போன்று ஆரோக்கியமாகவே பிறந்துள்ளார். இருப்பினும் சில ஆண்டுகளுக்கு
பின்னரே........................................
Dec
25
இயற்கை அதிசயங்கள் கொஞ்சி விளையாடும்
இடங்களை சொர்க்கம் என கூறுவது உண்டு. ஆனால் பாலைவன சொர்க்கம் பற்றி
கேள்விப்பட்டதுண்டா?ஐக்கிய அரபு எமிரேட்டில் தான இந்த
பாலைவன..............................................
Dec
24
தான் வெளியூருக்குச் செல்லும்போது
மனைவியின் கற்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக மனைவிக்கு ‘கற்புப் பூட்டு’
பொருத்தப்பட்ட பட்டியொன்றை அணிவித்து சென்ற நபர் ஒருவர், திரும்பிவந்தபோது அக்
கற்புப் பூட்டு த��...
Dec
24
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச்
சேர்ந்த 91 வயதான பெண்மணி ஒருவர், உலகின் மிக வயதான யோகா ஆசிரியர் என கின்னஸ் சாதனை
புத்தகத்தில்
இடம்பெற்றுள்ளார்............................................................
Dec
23
ஆப்பிரிக்க நாடான நமீபியாவில்
விண்வெளியில் இருந்து இரும்பு குண்டு ஒன்று விழுந்தது. தலைநகர் வின்ட்கோயக்கில்
இருந்து 750 கி.மீற்றர் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விழுந்த அந்த இரும்பு
குண்டு 1.1 மீற்றர் அதாவ��...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)