ஏனைய இணைப்புகள்<><> இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது.

புதன், 18 ஜனவரி, 2012

சுதந்திர தகவல்கள் இல்லாத உலகை கற்பனை செய்து கொள்ளுங்கள் - முடங்கியது விக்கிபீடியா


அமெரிக்கா அரசினால் புதிதாக ஏற்படுத்தப்படவுள்ள Protect IP Act (PIPA, the Senate bill),
Stop Online Privacy Act (SOPA, the House Bill) ஆகிய சட்ட நடைமுறைகளுக்கு தமது எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்காக பிரபல இணையத்தளமான விக்கிப்பீடியா ஆங்கிலத் தளத்தை 24 மணிநேரம் முடக்குவதாக அதிரடியாக அறிவித்தார் ஜிம்மி வேல்ஸ்.

அதன் படி தற்போது ஏதாவது ஒரு தகவலை விக்கிப்பீடியா இணையத்தளத்தில் தேடிப் சென்றால்,

சுதந்திர தகவல்கள் இல்லாத உலகை கற்பனை செய்து கொள்ளுங்கள். மனித வரலாற்றிலேயே பலர் மில்லியன் கணக்கான மணிநேரம் உருவாக்கிய உலகின் மாபெரும் தகவல் களஞ்சியமாக திகழ்கின்றது விக்கிப்பீடியா.

ஆனால் அமெரிக்க காங்கிரஸ் சுதந்திர தகவல்களை முடக்கிவிட திட்டமிடுகின்றது இந்த நடவடிக்கையை எதிர்ப்போம் என்று கறுப்புத் நிறத்தில் அறிவித்தல் வருகின்றது. விக்கிப்பிடீயாவின் இந்த முடிவினால் அத்தளத்திற்கு வருகை தரும் 25 மில்லியன் பாவனையாளர்கள் பாதிக்கபடுவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டின் ஜனவரி 18ம் திகதி முக்கியமான நாளாகும். ஏனெனில் இன்றைய தினமே வரலாற்றில் மாபெரும் இணைய ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது என sopastrike.com தெரிவிக்கின்றது. இதற்கு ஏனைய இணையத்தளங்களின் ஆதரவையும் கோருகின்றனர்.
சில விவகாரங்களில் விக்கிபீடியா சரியான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டியிருந்தாலும் நடுநிலையைத் தவறவிடுவதில்லை எனவும், "என்சைக்ளோபீடியா நடுநிலையானதுதான், ஆனால் அதற்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது அது வேடிக்கை பார்க்காது" என விக்கிப்பீடியா ஸ்தாபகர் ஜிம்மி வேல்ஸ் தெரிவித்துள்ளார்.

கூகிள் நிறுவனமும் தனது பங்கிற்கு https://www.google.com/landing/takeaction/ என்ற பக்கத்தில் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இவற்றையும் பாருங்கள்

வித்தியாசமான முறைகளில் சேவை நிறுத்தம் செய்யும் இணையத்தளங்கள்.


www.4tamilmedia.com   நன்றி

இந்த பதிவு சிவதர்சன் காரைதீவு


Blog Archive 


சமீப செய்திகள்

Labels