ஏனைய இணைப்புகள்<><> இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது.

திங்கள், 3 செப்டம்பர், 2012

அப்பாவிப் பதிவரிடம் கைவரிசை காட்டிய ப்ரபல பதிவர்!


அப்பாவிப் பதிவரிடம் கைவரிசை காட்டிய ப்ரபல பதிவர்!

Posted By Chamundeeswari Parthasarathy On 7:35 AM Under , ,
       வணக்கம் தமிழ்ப் பதிவுலகமே வணக்கம்! பதிவர் சந்திப்பு அன்னைக்கு நீங்க எல்லாம் கவனிச்சு இருக்காத ஒரு சூடான விசயம் எங்கிட்ட இருக்கு!

 என்னது? உங்களுக்கு ரொம்ப போரடிக்குதா? எல்லாப் பதிவர்களுமே இதே விசயத்த சொல்லி சொல்லி கில்லி அடிக்கிறாங்களா?


 அவங்க எப்டி வேனும்னாலும் கில்லி அடிக்கட்டும், இப்ப இந்த வில்லியோட கில்லி என்னனு பாருங்க!







       அதுதாங்க பதிவர் சந்திப்புக்கு நான் என்னவரோட வந்தேனா, சந்திப்பு முடிஞ்சு நாங்க மெரீனா பீச் போகலாமேநு ஆசை ஆசையாப் போனோம்!

 அங்க அப்டியே எம்ஜியார் சமாதி, அண்ணா சமாதி எல்லாம் பாத்துட்டு கடல் காத்து வாங்கலாமேனு அப்டியே மணல்ல உக்காந்து பேசீட்டு இருந்தோம்!




       அங்க வேற ஒரே பொண்ணுங்க ஆண்டிக கூட்டங்கூட்டமா இருந்தது என்னவருக்கு ரொம்பவே வசதியாப் போச்சு! நான் கடல் காத்து வாங்கலாம்னு சொன்னதும் ஒரு வார்த்த கூட பேசாம சைட்டிங் ஜொல்லிங் வேலையப் பயங்கர சின்சியராப் பாத்துட்டு இருந்தார்!


       சரி கொஞ்ச நேரம் காத்து வாங்கீட்டு அப்டியே கோயம்பேடு  வரலாம்னு அப்டியே காலார நடந்து வந்தோமா, திடீர்னு ஒருத்தர் சுண்டல் வித்துட்டு இருந்தாரா, நமக்கும் பீச்ல சுண்டல் சாப்டனும்னு ஆசையா இருந்துச்சா,

 “ஏங்க ஏங்க, எனக்கு சுண்டல் வாங்கித் தாங்களே” னு கேட்டேனா, சரினு அவரும் சுண்டல் விக்கரவர கூப்டு 2 சுண்டல் ஆர்டர் பண்ணினார்!

       பணம் தரலாமேனு பர்ச எடுக்கப் போன அவரு திடீர்னு பரபரப்பானார்! என்னனு நானும் அவரையே பாக்க “இல்ல என்னோட பர்ச யாரோ அடிச்சிட்டாங்க போல” என்றார்.

 “என்னது? எனக்கு அப்பவே தெரியும், ஆண்ட்டிகளயே பாத்துட்டு இருக்கும் போதே நான் டவுட்டானேன்”னு நல்லா டோஸ்!

 “சரி அத விடு, இப்ப என்ன பண்ணலாம்?”னு அவர் கேக்க,
 “அதுதாங்க தெரியல”னு நான் சொன்னேன்”!

       அப்பறம் திடீர்னு அவரு “ஏ! நம்ம ப்ரச்சன தீந்துடுச்சு!” அப்டின்னார்! “என்ன? பர்சு கெடச்சுடுச்சா?”னேன்.

 “இல்ல, அங்க ஒருத்தர் இருக்கார், அவரு பேரு கூட நீ ஏதோ ஜாக்கினு சொன்னியே! அவரு இங்கதான் இருக்காரு!”ன்னார்!

 “ஆமா, ஜாக்கி சேகர்! அவர் கண்டிப்பா நமக்கு ஹெல்ப் பண்ணுவாருங்க! வாங்க போய் கேக்கலாம்!” அப்டின்னேன்!

       “சார் வணக்கம், நாந்தான் சாமுண்டீஸ்வரி, இது எந் வீட்டுக்காரர். அப்போ கூட்டத்துல உங்ககிட்ட சரியா பேச முடியல. நீங்க எழுதர உப்புக் காத்து ரொம்ப நல்லா இருக்கு”னேன்! அவரு சின்னதா சிரிச்சுட்டு, “ரொம்ப தேங்ஸ்மா, மின்னல் வரிகள் பாலகனேஷ் உங்களப் பத்தி எங்கிட்ட சொல்லி இருக்கார். வாழ்த்துக்கள்மா”னார்! ோ தங்க்யூ சோ மச் சார் என்றேன்!

       “சார், ஒரு சின்ன உதவி” என்றுென் கணவர் தயக்கத்துடன் கேட்டார்.
 “ம்ம் சொல்லுங்க சார்” இது ஜாக்கி. “அது என்னோட பர்ச யாரோ அடிச்சிட்டாங்க, ஊருக்குப் போய் சேர மட்டும் ஒரு 500 ரூபா இருந்தா குடுக்க முடியுமா? ஊருக்குப் போனதும் திரும்ப அனுப்பி வெச்சுட்றேன்” என்று நிறுத்தினார்!

       “அது ஒன்னும் ப்ரச்சன இல்லைங்க, ஆனா ஏங்கிட்டையும் சுத்தமா பணமே இல்லீங்க. இப்பத்தான் இருந்த பணத்தப் போட்டு யாழினிக்கு பொம்ம வாங்கீட்டேன்” எம்று பொம்மையை எடுத்துக் காட்டினார்.

 சிறிது நேர யோசனைக்குப் பின், சரி நீங்க கொஞ்சம் அங்க வெயிட் பண்ணுங்க, நான் உங்களுக்கு எப்டியாவது அரேஞ்ச் பண்ணித் தறேன்” என்றார்!

       அப்போ அங்கே ஒருத்தர் வேகவேகமா ஓட்ரா மாதிரியே நடந்து வந்தார். பாத்தா நம்ம பாலகனேஷ் சார். என்னவர் “ஏ உன்னோட ஃப்ரெண்டுதான் அங்க வரார். வாயேன், நம்ம போய் அவருகிட்ட கேக்கலாம்” ன்னார்.

 “இல்ல, ஜாக்கி வேற வெயிட் பண்ண சொல்லி இருக்காரில்ல, பாக்கலாம்”  நான்!

       சரினு கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிப் பாத்தோம். ஆனா அவங்க 2 பேரும் பேசிட்டு மட்டும்தான் இருக்காங்களே தவிற, நம்ம வேல ஆகுரது மாதிரி
 தெரியலனுட்டு நாங்க அவங்க இருக்க திசை நோக்கி நகர்ந்தோம்.

 அப்பறம் எங்கள  பாலகனேஷ் சார்னால பாக்க முடியாதபடி ஜாக்கி சார் மட்டும் எங்களப் பாக்கர திசையில நின்னுட்டு எங்களப் பாத்து மொறச்சுட்டு வெயிட் பண்ண சொல்லி கண்ணால ஜாடை காட்டினார்!

      அப்பறம் நாங்களும் நின்னுட்டோம். சரி என்னதான் பண்றாருனு பாத்தா, பேசீட்டேதான் இருந்தாங்க. அப்பறம் கனேஷ் சாரும் பை சொல்லீட்டு கெளம்பீட்டார்!

      அப்டியே அலேக்கா திடீர்னு 1 பர்சு ஜாக்கி சார் கைக்கு பின்னாடி இருந்தது. அத அப்டியே எங்ககிட்ட காட்டீட்டு சிரிச்சுகிட்டே எங்கள நோக்கி வந்து “உங்க ப்ரச்சன தீந்துடுச்சு”. “என்ன சார், பாலகனேஷ் சார்கிட்ட கேட்டிங்களா?”னு நான் கேக்க, “இல்ல அவரு பர்ச அடிச்சுட்டேன்”ன்னார்.

 “ஐயோ, என்ன சார், ஏன் இப்டி பண்ணீங்க”னு கேட்டதுக்கு, “எப்டியோ உங்க ப்ராப்லம் சால்வாயிடுச்சில்ல”னு பர்சுல இருந்த 500 ரூபாவக் குடுத்துட்டு, பர்சையும் குடுத்துட்டு, “ஊருக்குப் போனதும் ஃபோண் பண்ணுங்க”னும் சொல்லீட்டு கடகடனு கெளம்பீட்டார்!.

       நான் அப்டியே தேம்பித் தேம்பி அழ ஆறம்பிச்சுட்டேன். எங்க பி.எம் கிட்ட, “என்ன 1 மனுசன் இவர்? இப்டி நமக்காக திருடி கூட உதவி செய்யிராரே” அப்டினு தேம்பித் தேம்பி அழ ஆறம்பிச்சு ஒரு கட்டத்துல மணல்ல ஒரு கொலமே தேங்கிடுச்சு, என்னோட கண்ணீராலனா பாருங்களேன்!...

       அப்பறம், கொஞ்ச கொஞ்சமா எனக்கு நினைவு திரும்ப ஆறம்பிச்சுடுச்சு. அப்டியே கொசுவத்திச் சுருள்கள் எல்லாமே முன்னோக்கி சுழலுது. அப்பறம்தான் நான் எங்க வீட்டு பெட் ரூம்ல தூங்கீட்டு இருந்தது ந்யாபகத்துக்கு வருது.

அப்பறமாத்தான் தெரியுது, நான் கண்டது கணவுண்ட்டு!

ஹிஹிஹிஹிஹிஹி........ அவ்வ்வ் நான் வாங்கின பல்ப நீங்க வாங்க வேனாமா? அதுக்குத்தான் இப்டி!

       ஆஹா... யாருப்பா அது? ஒரு பெரிய கூடைல தக்காளி அதுவும் அழுகின தக்காளி எடுத்துட்டு வரது?“ நோ சார் நோ, உங்ககிட்ட இருந்து அவருதானே பர்ச அடிச்சாரு ,சோ தக்காளிய அவருக்கே குடுத்துடுங்க! ஓகேவா?”

       சரி சரி படிக்கிற நீங்களும் பாலகனேஷ் சார் மாதிரி தக்காளி எடுக்கரதுக்குள்ள, நான் ஜூட் விடுறேன். ஆனா, அதுக்கு முன்னாடி பதிவர் சந்திப்பப் பத்தி எல்லாரும் பதிவு போடுராங்களே நம்ம மட்டும் எதுவும் போடலையேனுதான் நான் இந்த பதிவு போட்டு இருக்கேனு நெனைக்காதிங்க!

       பதிவர் சந்திப்பு அன்னைக்கு மத்திய உனவு இடைவேலையின் போது பாலகனேஷ் சாருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு லைவ் நல்லா பாக்க முடுஞ்சத சொன்னேன். அவரும், “நாங்க யார்கிட்ட கேக்கறதுனு தெரியாம முழுச்சுகிட்டு இருந்தோம், நல்ல வேல நீங்க கூப்பிட்டுட்டீங்க”னு சொன்னார். அப்போ ஒரு விசயம் சொன்னேன், “நான் எதிர்பார்த்த ஒரே ஒரு விசயம் மட்டும் நடக்கவே இல்ல சார்” னேன். “என்னம்மா அது?”ன்னார். “ஜாக்கி சேகர் நல்லாப் பேசுவார்னு நெனச்சேன், ஆனா, ஷாட் & ஸ்வீட்டா முடிச்சுட்டார்”னு சொன்னேன்!

 “தோ போனதுமே ஃபோண்ல கண்டிப்பா நீங்க பேசலாம். நான் பேச வைக்கிறேன்” அப்டினு சொன்னார்!

       சொல்லி 5 நிமிசம் கூட இருக்காது, ஒரு ஃபோண் கால். “ஹலோ சாமுண்டீஸ்வரி, பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்றது ஒரு ஆன் குரல். அப்பவே நான் கெஸ் பண்ணீட்டேன் அது ஜாக்கியாதான் இருக்கும்னு. ஆனா நம்மளுக்கே உரிய ஜாக்கிரதை உணர்வோடு, “நீங்க...” என்று இழுத்தேன். “நாந்தான் ஜாக்கி சேகர் பேசுரேன், பாலகனேஷ் உங்க நம்பர் குடுத்தார்” என்றார்.

 அப்பறம் நலம் விசாரிச்சுகிட்டோம்.

        “நீங்க எழுதீட்டு வர உப்புக்காத்து சீரீஸ் ரொம்ப நல்லா இருக்கு, ரொம்ப பவர்ஃபுல்லா எழுதுரீங்க, நானெல்லாம் இன்னைக்குத்தான் எழுத ஆறம்பிச்சு இருக்கேன், நான் சொல்ரதுக்கு எதுவுமில்ல, ஆனா சார், ஆனாலும் என்னால இத சொல்லாம இருக்க முடியல” அப்டினு நிறுத்தினேன்.

 அவரு பனிவா நன்றி சொன்னாரு. ### எப்பவுமே நான்ஸ்டாப் பேச்சுதான்! எதிராலியப் பேசவே விட மாட்டோமில்ல! அவ்வ்வ்வ்

       நீங்க அதிகம் பேசுவீங்கனு எதிர்பாத்தேன், ஆனா ஷாட் & ஸ்வீட்டா பேசிட்டிங்களே” என்றேன்!
 “இல்லமா என்ன பேசரதுனு தெரியல ப்லான் பண்ணல அதுதான்” என்றார்!

 ஒரே ஒருதடவ உங்கள ஃபேஸ்புக்ல பாத்து இருக்கேன்”ன்னார். ஆமாம் சார்! ரெக்வஸ்ட் அக்சப்ட் பண்ணீங்க” என்றேன்!

       அப்பறம் பை சொல்லி வெச்சுட்டோம்! இப்போ முதல்ல பாலகனேஷ் சாருக்கு மிக்க நன்றி சொல்றேன்! ஒரு வார்த்த சொன்னதுமே ஃபோன் நம்பர் குடுத்து பேச சொல்லிட்டாரு! அப்பறம் எவ்வளவு பிசியா இருந்தாலும் பொறுமையா நம்ம பேசும் போது கேட்டு பதில் சொல்லுவாரு! இந்த ஒரு பண்ப மட்டும் நீங்க எனக்குக் கடனா குடுத்தா..... புன்னியமாப் போகும் சார்! அவ்வ்வ்வ்வ்வ்...
என்னதான் ட்ரை பண்ணாலும் நமக்கு அதுதான் இல்லயே.... சோ கடன் அன்பை முறிக்கும்னு எல்லாம் சொல்லாம ஒழுங்கா கடன் குடுத்துடுங்க!

       அடுத்து, ஜாக்கி சார், அவருக்கு பாலகனேஷ் சார் ஃபோண் நம்பர் குடுத்ததுமே உடனே ஃபோண் பண்ணி பேசினார். அந்த நல்ல பண்புக்கு மிக்க நன்றி!

       அடுத்து அப்துல்பேசித் சார், அவரோட ப்லாக்ல இருந்துதான் லைவ் பாக்க முடிஞ்சது! அவருக்கு சிந்தனைச் சிறகுகள் வாயிலாக எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

       அடுத்தது, இவ்வளவு நாளா 2 மாசமா நான் போட்ர எல்லா மொக்கையுமே பொறுமையாப் படிச்சு ஆதரவு குடுத்துட்டு வர, இனிமேலும் குடுக்கப் போர எல்லாப் பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் மிக்க மிக்க மிக்க நன்றி!

       சரி சரி... நான் கெளம்பறேன்! பதிவு சுமாரா இருந்தா கூட பரவால்ல, அப்டியே உங்க கருத்த சொல்லுங்க,ஓட்டையும் போட்டுடுங்க! வர்ட்டுமா? டாட்டா.....


சேக்கனா M. நிஜாம்
Friday, August 31, 2012 8:09:00 AM
தலைப்பு கோழையா !? இருந்தாலும் பதிவு பயமில்லாமல் உள்ளது.

வாழ்த்துகள் !
Jackiesekar
Friday, August 31, 2012 8:16:00 AM
பாண்டிச்சேரியில் இருந்து பதிவர் சத்திப்பு லைவ்ல பார்த்த உங்க வாசகி ஒருத்தவங்க... உங்க கிட்ட பேசனும்னு சொன்னாங்க..

நீங்க கண்டிப்பா பேசனும்... நீங்க பேசனா அவுங்க ரொம்ப சந்தோஷபடுவாங்க என்று சொன்னார்..

அவுங்களுக்கு இன்னைக்கு பர்த்டே என்று என்னிடத்தில் பாலகணேஷ் சொன்னார்...

இன்னைக்கு பர்த்டே என்று சொன்னதால் உடனே போன் பண்ணி வாழ்த்து சொல்லிடலாம் என்று உங்களுக்கு போன் பண்ணினேன்...

என் மீதான மதிப்புக்கு மரியாதைக்கும் மிக்க நன்றி... நிறைய பேசி இருப்பேன்... சும்மா தலையை காட்டி விட்டு சென்று விடலாம் என்று இருந்தேன்..

காரணம் எனக்கு ஒரு புரோகிராம் ஷுட் இருந்தது... அது கேன்சல் ஆன காரணத்தால் அங்கேயே நண்பர்களுடன் கதை அடித்துக்கொண்டு இருக்கும் போது, திடிர் என்று மேடை ஏற்றிவிட்டார்கள்.. அதனால் திடு திப் என்று மேடை ஏறியதால் நான் அதிகம் பேசவில்லை..

நான் நிறைய பேசும் சுபாவம் உள்ளவன்.

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...
பட்டிகாட்டான் Jey
Friday, August 31, 2012 8:29:00 AM
[[ சரி கொஞ்ச நேரம் காத்து வாங்கீட்டு அப்டியே கோயம்பேடு வரலாம்னு அப்டியே காலார நடந்து வந்தோமா, ]]

கண்டது கனுவுன்னாலும் அதுலயும் ஒரு நியாயம் வேண்டாங்களா அம்மனி, மெரினாலேர்ந்து கோயம்பேடு வரைக்கும் எம்புட்டு தூரம் அதுவும் சென்னை ட்ராபிக்ல நடந்தோம்னு.....
திண்டுக்கல் தனபாலன்
Friday, August 31, 2012 8:34:00 AM
நல்லதொரு கனவு சகோதரி... நகைச்சுவையாக இருந்தது... மிக்க நன்றி...
பால கணேஷ்
Friday, August 31, 2012 10:13:00 AM
ஆஹா... என் பர்சில நூறு ரூபாய்க்கு மேல வெச்சுக்கறதில்லைங்கறது இந்த மொக்கை ராணிக்குத் தெரியாமப் போய்டுச்சே... அவ்வ்வ்வ்! என் பேச்சை மதித்து உடனே தன் ரசிகையுடன் பேசிய நண்பன் ஜாக்கிசேகர்தான் மிக் உயர்ந்தவர். நன்றிகள் அவருக்கே. நல்லா சுவாரஸ்யமாவே இருந்துச்சு உங்க கனவு. தொடர்ந்து நிறைய கனவு காண வாழ்த்துக்கள்மா.
 31, 2012 10:44:00 AM
அடடா கனவா இது உண்மையா இருந்தா இன்னும் நன்றாக இருந்திருக்கும் சகோ.
முரளிகண்ணன்
Friday, August 31, 2012 11:30:00 AM
செம காமெடி
பால கணேஷ்
Friday, August 31, 2012 11:31:00 AM
அடாடா... என்னோட பர்ஸ் பறிபோறதுல தென்றதுக்கு எவ்வளவு ஆசை பாருய்யா...
பால கணேஷ்
Friday, August 31, 2012 11:33:00 AM
என்னோட பர்ஸ்ல எப்பவும் நூறு ரூபாய்க்கு மேல இருக்காதுங்கறது இந்த மொக்கை மஹாராணிக்குத் தெரியாமப் போய்டுச்சே... அவ்வ்வ்வ்வ்! உங்களோட கனவு ரொம்பவே சுவாரஸ்யம். இன்னும் நிறைய கனவு காண என்னோட நல்வாழ்த்துக்கள்மா...
kovaikkavi
Friday, August 31, 2012 12:25:00 PM
நல்ல கனவு சகோதரி பாதி வரை நம்பிட்டேன் நிசமென்று.
பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.
நிரஞ்சனா
Friday, August 31, 2012 1:11:00 PM
ஹா... ஹா... சூப்பரா கனவு கண்டிருக்கீங்க. நான் நாலு நாளா ஊர்ல இல்லாததால இன்னிக்குத்தான் பாக்கறேன். அதனால கோவிச்சுக்காம என்னோட சந்தோஷம் ததும்பின பிறந்தநான் வாழ்த்துக்களை ஏத்துக்கங்க. அப்புறம்... உங்களுக்கு ‘மொக்கை மஹாராணி‘ன்னு பட்டம் கொடுத்தவருக்கு ஏதாவது ஸ்பெஷல் ‘கவனிப்பு‘ செய்வீங்களா? செஞ்சா வீடியோ எடுத்து பதிவிடவும். ஹி... ஹி... (ஏதோ நம்மாலானது)
தொழிற்களம் குழு
Friday, August 31, 2012 1:37:00 PM
நல்ல சிந்தனை ஆதிக்கம் உங்களிடம் இருக்கிறது,,,

இன்னும் சிறப்பான பதிவுகளை தொடர்ந்து பதிந்து வாருங்கள் சகோதரி,,,
Navarasan
Friday, August 31, 2012 2:00:00 PM
கோயம்பேடு வரலாம்னு அப்டியே காலார நடந்துவந்தோமா,///இந்த வாயில வட சுடுர வேலதானே இங்க வேனாங்குரது.


இவக மெரினால இறுந்து கோயம்பேடுக்கு நடந்தே வந்தாகளாம், அத நாங்க நம்பனுமாம்!
என்ன கொடும மகேஷ் இது?

அப்படி சொல்லும்போதே தெரிங்ஜிருச்சி இது நிஜம் இல்ல கனவு தான்னு!

சறி ரொம்ப கலாய்ச்சா அப்பரம் நாலைக்கு எனக்கு பிடிச்ச ஜுகல்பந்திய போடாம இருந்துர போரிங்க.
அதனால மிஸ்டர் நவரசன் சைலன்டா கெலம்புராரு!
கலாகுமரன்
Friday, August 31, 2012 3:33:00 PM
உங்கள் பாடல் கேட்டேன் ..அருமையான இனிமையான் குரல் தொடர்ந்து பல பாடல்களை பதிவு செய்யுங்கள்...வாழ்த்துக்கள்.
சதீஷ் செல்லதுரை
Friday, August 31, 2012 4:41:00 PM
நீங்க நல்லா வருவீங்க...கொஞ்சம் சந்தேகம் வந்தாலும் உங்க கணவரையும் உள்ளே இழுத்துவிட்டதினால் நம்பி படிச்சேன்.....ம் இருக்கட்டும் ஒரு நா நாங்களும் கனா காண்போம்....இத விட டெர்ரரா...
சிட்டுக்குருவி
Friday, August 31, 2012 5:32:00 PM
ஆகா செம கலாய்ப்பு..........
நான் படித்த பதிவுகளை விட இப்பதிவில் உங்கள் எழுத்து நடை புரியும் படியாக இருக்கிறது.....

வாழ்த்துக்கள் த. ம 9
ராம்ஜி_யாஹூ
Friday, August 31, 2012 6:24:00 PM
ல ள ஆகியவற்றில் சற்று கவனம் தேவை
Yogaraj Madurai
Friday, August 31, 2012 7:40:00 PM
நல்ல comedy peace அக்கா நீங்க!.



கணவுள purse தொலச்சிட்டு marina கடல் கறையிலயிருந்து, கோயம்பேடு bus stand வறை நடந்து போனதுக்கு….


நீங்க marina கடற்க்கறையில் இருந்து ECR road வழியாவே பாண்டிச்சேரிக்கே நடந்து போரமாதிரி கணவு கண்டிருக்கலாம்!.
அமர பாரதி
Friday, August 31, 2012 11:24:00 PM
This post is not at all funny and the black humor is to be condemned.
தனிமரம்
Saturday, September 01, 2012 12:08:00 AM
கமடி சூப்பர் நானும் மெரினாவில் உண்மையில் இப்படி ஆச்சோ என்று நம்பிவிட்டேன்!ஹீ
பழனி.கந்தசாமி
Saturday, September 01, 2012 2:30:00 AM
பதிவுக்கென்ன குறை, அட்டகாசமா இருக்குது.
Avargal Unmaigal
Saturday, September 01, 2012 3:44:00 AM
என்ன நான் பதிவர் திருவிழா பற்றி ஒரு மொக்கை பதிவு போடலைன்னா சாமி கண்ணை குத்திடும் என்று சொன்னதுனாலயா இந்த மொக்கை பதிவு?


உங்க மொக்கை பதிவில் இருந்து நான் கற்று கொண்டது ஜாக்கியை பார்க்க போகும் போது பர்சை யாரிடாமாவது கொடுத்துவிட்டு போகனும்......\\

மொக்கை பதிவு போடறதுலா எனக்கே போட்டியா....நான் தக்காளி எடுக்க மாட்டேன் அழுகின முட்டையைதான் எடுத்துகிட்டு வருவேன்
Chamundeeswari Parthasarathy
Saturday, September 01, 2012 6:17:00 AM
Jackiesekar sir!


நீங்க படிப்பீங்கனு சத்தியமா நான் எதிர்பாக்கல... ஆனா படிச்சதோட மட்டுமில்லாம கமெண்டும் போட்டதுக்கு மிக்க நன்றி சார்
Chamundeeswari Parthasarathy
Saturday, September 01, 2012 6:20:00 AM
பட்டிகாட்டான் Jey...


ஐயோ, நான் ஆக்சுவலா சொல்ல வந்ததே வேற...


சரி கொஞ்ச நேரம் காத்து வாங்கீட்டு அப்டியே கோயம்பேடுக்கு பஸ் பிடிக்கலாம்னு வரலாம்னு அப்டியே காலார நடந்து வந்தோமா, ]] அப்டி வந்திருக்கனும்!...


ஆனாலும் நீங்க எல்லாம் புத்திசாலினு நெனச்சேன்!... அவ்வ்வ்வ்வ்வ்


அப்பறம் கணவு என்பதே லாஜிக் இல்லா மேஜிக்தானே சார்...
மனசாட்சி! எழுதினதே தப்பு அத எப்டி எல்லாம் சமாளிக்கிறா பாரு!
அவ்வ்வ்வ்வ்வ்வ்
Chamundeeswari Parthasarathy
Saturday, September 01, 2012 6:23:00 AM
திண்டுக்கல் தனபாலன் சார்!


பதிவை ரசித்துக் கருத்திட்டமைக்கும் ஓட்டுப் போட்டமைக்கும் மிக்க நன்றி சார்
Chamundeeswari Parthasarathy
Saturday, September 01, 2012 6:29:00 AM
பாலகனேஷ் சார்...



ஆஹா... என் பர்சில நூறு ரூபாய்க்கு மேல வெச்சுக்கறதில்லைங்கறது இந்த மொக்கை ராணிக்குத் தெரியாமப் போய்டுச்சே... அவ்வ்வ்வ்!/// ஐயோ, அப்போ, நீங்க, மகா கஞ்சம் போல.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்



என் பேச்சை மதித்து உடனே தன் ரசிகையுடன் பேசிய
நண்பன் ஜாக்கிசேகர்தான் மிக் உயர்ந்தவர்./// அப்ப நீங்க குட்டையா? அவரைவிட?



நன்றிகள் அவருக்கே./// ஆனாலும் ரொம்ப தன்னடக்கம்...



நல்லா சுவாரஸ்யமாவே இருந்துச்சு உங்க கனவு. தொடர்ந்து நிறைய கனவு காண வாழ்த்துக்கள்மா./// ஆஹா, இதுக்கெல்லாம் கூடவா வாழ்த்துக்கள்? கருத்துக்கு மிக்க நன்றி சார்!

Chamundeeswari Parthasarathy
Saturday, September 01, 2012 6:31:00 AM
Sasi Kala...



கவலையே படாதீங்க, காலைல கண்ட கணவு பலிக்கும்னு சொல்லுவாங்க:(( கருத்துக்கு மிக்க நன்றி சகோ!
Chamundeeswari Parthasarathy
Saturday, September 01, 2012 6:39:00 AM
பாலகனேஷ் சார்...

அடாடா... என்னோட பர்ஸ் பறிபோறதுல தென்றதுக்கு எவ்வளவு ஆசை பாருய்யா.../// ஹா,ஹா,ஹா. அது வேற எதுவுமில்ல சார் அவங்களும் என்ன மாதிரியே ரொம்ப நல்லவங்க!:))
Chamundeeswari Parthasarathy
Saturday, September 01, 2012 6:41:00 AM
@முரளிகண்ணன்,

@kovaikkavi,



ரசித்துக் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி!
Chamundeeswari Parthasarathy
Saturday, September 01, 2012 6:43:00 AM
நிரஞ்சனா...


நான் நாலு நாளா ஊர்ல இல்லாததால இன்னிக்குத்தான் பாக்கறேன். அதனால கோவிச்சுக்காம என்னோட சந்தோஷம் ததும்பின பிறந்தநான் வாழ்த்துக்களை ஏத்துக்கங்க./// லேட்டா சொன்னாலும் வாழ்த்து வாழ்த்துதானே... இதுக்கெல்லாமா கோச்சுக்குவாங்க?


அப்புறம்... உங்களுக்கு ‘மொக்கை மஹாராணி‘ன்னு பட்டம் கொடுத்தவருக்கு ஏதாவது ஸ்பெஷல் ‘கவனிப்பு‘ செய்வீங்களா? செஞ்சா வீடியோ எடுத்து பதிவிடவும். ஹி... ஹி... (ஏதோ நம்மாலானது)/// நம்ம 2 பேருமே ச்பெசலா கவனிச்சு வீடியோ போட வேண்டியதுதான்:))
Chamundeeswari Parthasarathy
Saturday, September 01, 2012 6:44:00 AM
தொழிற்களம் குழு
...


நல்ல சிந்தனை ஆதிக்கம் உங்களிடம் இருக்கிறது,,,/// ஆஹா, இப்டி ஒரு கருத்தை நான் எதிர்பாக்கவே இல்ல! மிக்க நன்றி! தொடர்ந்து முயற்சிக்கிறேன்!
வேடந்தாங்கல் - கருண்
Saturday, September 01, 2012 9:16:00 AM
அட.. கடைசியில இது கனவா? ஹா.ஹ...ஹா..
asa asath
Saturday, September 01, 2012 10:10:00 AM
உங்கள் பதிவில் லொள்ளு கொஞ்சமாக உள்ளது மெய்யாலுமா ,என்ன கொடுமை ஹன்சிகா இது
Richard
Saturday, September 01, 2012 12:27:00 PM
கனவுல கூட மத்தவங்கள நல்ல படியா நினைக்கிறதுக்கு ஒரு நல்ல மனசு வேணும் :>) - Richard
Chamundeeswari Parthasarathy
Saturday, September 01, 2012 6:03:00 PM
நவரசன் அண்ணே!

நீங்க கேட்ட கேள்விக்கு வேற 1 கமெண்ட்டுல பதில் போட்டு இருக்கேன்!
சறி ரொம்ப கலாய்ச்சா அப்பரம் நாலைக்கு எனக்கு பிடிச்ச ஜுகல்பந்திய போடாம இருந்துர போரிங்க.
அதனால மிஸ்டர் நவரசன் சைலன்டா கெலம்புராரு!/// அந்த பயம் இருக்கட்டும்! மிக்க நன்றி!
Chamundeeswari Parthasarathy
Sunday, September 02, 2012 4:55:00 AM
கலாகுமரன்...

பாடலை ரசித்துக் கேட்டமைக்கு மிக்க நன்றிங்க...
Chamundeeswari Parthasarathy
Sunday, September 02, 2012 4:57:00 AM
சதீஷ் செல்லதுரை...

நீங்க நல்லா வருவீங்க.../// ஆஹா... இவ்வளவு நம்பிக்கையா? ரொம்ப நன்றி சகோ!

கொஞ்சம் சந்தேகம் வந்தாலும் உங்க கணவரையும் உள்ளே இழுத்துவிட்டதினால் நம்பி படிச்சேன்.....ம் இருக்கட்டும் ஒரு நா நாங்களும் கனா காண்போம்....இத
விட டெர்ரரா.../// சீக்கிறமே கணவுகண்டு பதிவு போட வாழ்த்துக்கள் சகோ!
Chamundeeswari Parthasarathy
Sunday, September 02, 2012 4:58:00 AM
சிட்டுக்குருவி....

நான் படித்த பதிவுகளை விட இப்பதிவில் உங்கள் எழுத்து நடை புரியும் படியாக இருக்கிறது...../// அப்பாடா இப்பத்தான் நான் கொஞ்சம் கொஞ்சமா முனேறீட்டு வரேன் போல... தவறுகள் இருப்பின் சுட்டுங்கள். முன்னேற வசதியா இருக்குமில்ல... கருத்துக்கும் ஓட்டுக்கும் நன்றி சகோ!
Chamundeeswari Parthasarathy
Sunday, September 02, 2012 5:00:00 AM
ராம்ஜி_யாஹூ...

ல ள ஆகியவற்றில் சற்று கவனம் தேவை ///





நிச்சயம் கவனித்துக் கொள்கிறேன்!
Chamundeeswari Parthasarathy
Sunday, September 02, 2012 5:01:00 AM
யோகராஜ்...

### கம்யூனிகேசன்ல செம வீக்! அதுதான் 1 சின்ன தப்பு நடந்துபோச்சு! ஆனா இது கணவுதானே... லாஜிக் எல்லாம் பாக்கக் கூடாது! நீ என்னவோ பெரிய புத்திசாலினு நெனச்சா, நீ என்னவிட... அவ்வ்வ்வ்வ்வ்... என்ன நீ காமெடி பீசாக்கினா, ## உங்கள காமெடி பீசாக்கிடுவோமில்ல!
Chamundeeswari Parthasarathy
Sunday, September 02, 2012 7:24:00 AM
@சேக்கனா M. நிஜாம்...


ரசித்துக் கருத்திட்டமைக்கு மிக்க நன்றிங்க!
Chamundeeswari Parthasarathy
Sunday, September 02, 2012 8:06:00 AM
தனிமரம், பழனி.கந்தசாமி சார், வேடந்தாங்கல் - கருண், asa asath



ரசித்துக் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி!
Chamundeeswari Parthasarathy
Sunday, September 02, 2012 8:07:00 AM
அமர பாரதி...

ஆஹா... இதைக் கண்டிக்கிற அளவுக்கு அப்படி என்ன தவறா எழுதிவிட்டேன்? விளக்கம் ப்லிஸ்
Chamundeeswari Parthasarathy
Sunday, September 02, 2012 8:08:00 AM
avargal unmaigal


என்ன நான் பதிவர் திருவிழா பற்றி ஒரு மொக்கை பதிவு போடலைன்னா சாமி கண்ணை குத்திடும் என்று சொன்னதுனாலயா இந்த மொக்கை பதிவு?///அவ்வ்வ்வ்வ்வ்வ்.... திங்கட்கிழமையே இந்த பதிவ போட்ரதா இருந்தேன். ஆனா ஜாக்கி சார வம்புக்கு இழுக்க கொஞ்சம் பயமா இருந்துச்சு! அப்பறம் நம்பத்தகுந்த வட்டாரங்கள்ல இருந்து அவரு தப்பா எடுத்துக்க மாட்டார்னு புதன் அன்றேதான் செய்தி கிடைத்தது... அப்பறம் வியாழன் டைப் பண்ணி வெள்லிக்கிழமை போஸ்ட் செய்தேன்! ஆனா உங்க ப்லாக்ல நான் போட்ட கமெண்ட்கும் இதுக்கும் மேட்ச்சாயிடுச்சு! சோ, அப்டியும் எடுத்துக்கலாம்!

உங்க மொக்கை பதிவில் இருந்து நான் கற்று கொண்டது ஜாக்கியை பார்க்க போகும் போது பர்சை யாரிடாமாவது கொடுத்துவிட்டு போகனும்......\\ சுத்தம்... அவர எதுக்கு சார் வம்புக்கு இழுக்கிறீங்க!

மொக்கை பதிவு போடறதுலா எனக்கே போட்டியா..../// என்னதான் இருந்தாலும் தலையோட வாலு போட்டிபோட முடியுமா? நான் தக்காளி எடுக்க மாட்டேன் அழுகின முட்டையைதான் எடுத்துகிட்டு வருவேன்/// u r always welcome:))

Chamundeeswari Parthasarathy
Sunday, September 02, 2012 8:09:00 AM
Richard

கனவுல கூட மத்தவங்கள நல்ல படியா நினைக்கிறதுக்கு ஒரு நல்ல மனசு வேணும் :>)/// அவ்வ்வ்வ்வ்வ் ரசித்துக் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி!
ஆமினா
Sunday, September 02, 2012 8:35:00 AM
கனவா????/ அவ்வ்வ்வ்வ்வ்


sindanaisiragugal thanks


sindanaisiragugal.blogspot. thanks