ஏனைய இணைப்புகள்<><> இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது.

திங்கள், 9 ஜூலை, 2012

எதிரி நீங்க தான்? (Some times for your life)


23 May 2012

எதிரி நீங்க தான்? (Some times for your life)

நம் ஒவ்வொருக்கும் வாழ்கையின் மீது தனியொரு தோற்றம் இருக்கிறது. நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் பல தரப்பட்ட பேர் பணியாற்றுகின்றனர். பல தேசத்து ஆண்கள் பெண்கள் என பன்முகத்தன்மையுடன் எங்கள் நிர்வாகம் இயங்குகிறது. அவர்களின் ஒவ்வொருக்கும் வாழ்கை பற்றி தனி தனி கண்ணோட்டங்கள், எண்ணங்கள்.. ஒரு சிலர் அவர்கள் வாழ்கையை அவர்களே சிக்கலாக மாற்றுகிறார்கள். மனித உறவு அன்புடன் தொடங்குகிறது, அன்புக்காக ஏங்குகிறது, அன்பை தேடி அலைகின்றது.

நான் சந்தித்த ஒருவருக்கு நல்ல கல்வி, கை நிறைய சம்பாத்தியம், நல்ல குடும்பம் என வாழ்கை அமைந்தாலும் அந்த  நபர்க்கு இன்னும் வாழ்கையில் திருப்தி இல்லை. அந்த நபரிடம் நான் சிறிது உரையாடினேன், அப்போது அவர் தான் இப்போது உள்ள அந்தஸ்தை விட அதிகமாக உயர வேண்டும், அதை பற்றிய கவலையில் உள்ளேன் என்றார். அவருடைய கவலைக்கு என்ன காரணம்? அடிப்படை தேவைகள் பூர்த்தியான பிறகு அடுத்து பிறதேவைகள் மற்றும் விருப்பங்கள் அவரை  ஆடம்பர வாழ்வின் தேடலுக்கு ஓட்டிக்கொண்டு செல்கிறது. பைக்கில் பயணிக்கும் ஒருவருக்கு அடுத்து கார் வாங்க ஆசை, கார் வாங்கிய பிறகு அடுத்து அதிலே அதிக சொகுசு உள்ள கார் வாங்க ஆசை, இப்படியே அவனின் மனம் கிடைத்ததை பற்றி மகிழாமல் இல்லாத ஒன்றை தேடி தேடி மனம் அமைதியை தொலைக்கின்றது.

அந்த மனிதரை போல நம் கண்கள் முன் பல நபர்கள் தங்களின் வாழ்கையில் கிடைத்த பல நல்ல விஷயங்களை நினைத்து மகிழாமல், இல்லாத ஒன்றை தேடி தேடி அவர்களின் வாழ்கை பயணம் ஏக்கத்துடன் செல்கிறது. நிறைவேறிய ஆசை, வேண்டிய வசதி, கிடைத்த அன்பு இருந்தும் இன்னும் அதிக ஆசை, அதிக ஆடம்பரம், அதிக வசதி, அதிக அன்புக்காக மனிதன் நிம்மதியை தொலைத்து கவலையில் மூழ்கிறான். வாழ்க்கை என்பது ஒரு பயணம், நம் பயணத்தில் உள்ள எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். நம்மில் பலர் வாழ்கையின் எளிய உண்மையை புரிந்துகொள்வது இல்லை. உங்களுக்கு அமைந்த வாழ்கையை நினைத்து மகிழ்ச்சியுடன் பயணியுங்கள், உங்களின் வாழ்கையில் இல்லாத ஒன்றை நினைத்து கவலைக்கொள்ளாதிர்கள்.

22 May 2012

தகவல்கள் - ஸ்வாரஸியம் ஆச்சரியம்

   தகவல்கள் - ஸ்வாரசியம் ஆச்சரியம் 

 செயற்கை மழை - இதோ

தற்போது ஜெனீவா பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சிக்குழு  முற்றிலும் மாறுபட்ட புதிய நுட்பமான முறையை கையாண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது. அது லேசர் கதிர்களை பயன்படுத்தி மேகங்களை உண்டாக்கி மழை பொழியச் செய்வது.  இதன் ஒரு பகுதியாக லேசர் கதிர்களை செலுத்தி ஆய்வகங்களிலும், வான்வெளியிலும் பரிசோதித்து வெற்றி கண்டுள்ளது.ஆய்வகத்தில், அதிக ஆற்றலை யுடைய வானிலிருந்து வரக்கூடிய, துணை அணுத்துகளான காஸ்மிக் கதிர்களை கண்டறியப் பயன்படும் மேக கலன் (கிளவுட் சேம்பர்) அல்லது அறையை உபயோகப்படுத்தினர். அதனுள் அதிக ஆற்றலுடைய துகள்களை செலுத் தும்போது,நீர்மூலக் கூறுகளில் உள்ள எலெக்ட்ரான்களை விடுபடவைக்கிறது. இதனால் அது மின்னூட்டம் பெற்ற துகள்களாகி, ஒரு மெல்லிய தூசி போல செயல்பட்டு நீர்த் திவலைகளாக மாற உதவுகிறது என்பதை கண்டுபிடித்தனர்.

இவர்களைப் போலவே சுவிஸ் ஆராய்ச்சியாளர்கள், அதிக பலம் வாய்ந்த அகச் சிவப்பு லேசர் கதிர்களை கிளவுட் சேம்பர் (மேக அறை) உள்ளே செலுத்தும்போது கலன் – 240 சென்டி கிரேடாக அதன் வெப்பம் குளிர்ந்து நீராவி மேகம் உருவாகிறது. அந்த ஆய்வில் முதலில் 50 மைக்ரோ மீட்டர் விட்டமுடைய நீர்த் துளிகள் உருவாகி றது. அதன்பின் அடுத்த 3 நொடிகளில் அது 80 மை. மீ. விட்டமுடைய நீர் துளிகளாக மாறுகிறது. மேலும் லேசர் கதிர்களை வானில் செலுத்தும்போது நீராவி குளிர்வடைந்து நீர்த் துளிகளாக மாறுகிறது. இவ்வாறு குளிர்வடைவதை இரண்டாவதாக மற்றொரு லேசரைக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு செயற்கை மழை உருவாக்குவதில் சாதனை செய்துள்ளனர்.

தகவல் -2

உங்களுக்கு புடிச்ச கலர் எதுவாக இருந்தாலும் அது இப்போ உங்க கைல...

கொரியாவிலுள்ள ஜின்சன் பார்க் என்பவர் கண்டுபிடித்திருக்கும் இந்த புதிய தொழில் நுட்ப பேனா எந்தப் பொருளிலும் உள்ள நிறத்தை ஸ்கேன் செய்து அதற்குரிய RGB அளவீடுகளை அறிந்து பேனாவில் மையைத் தானே தயாரித்துக் கொள்கிறதாம்.
இனி கவலை இல்லை, நாம விரும்பிய கலர் இப்போ நம்ம கைல...

இதோ இப்போ ஆப்பிள் கலர் உங்க கைல....
P1

 
வர்ண ஜால பேனாவின் இயந்திர தொழிநுட்பம்....
P4

 இந்த பச்சை கலர் ரெடி!!!

P2

P3

13 May 2012

தமிழீழம் - கனவா நினைவா

1948 ஆம் ஆண்டில் இலங்கைச் சிங்களப் பெரும்பான்மை அரசு பிரிட்டிஷ் அரசிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற  நாள்முதல் தமிழர்களின் மனித உரிமைகளை திட்டமிட்டே  இனவழிப்பை  இது வரை சிங்களஅரசு  நடத்திவருகிறது.  சிங்கள மொழிக்கு, சிங்களவர்கள் பின்பற்றும் பெளத்த சமயத்துக்கு சிறப்புரிமைகள் தந்து, தமிழர்களின் கல்வி வேலைவாய்புக்களை அபகரித்து, திட்டமிட்ட குடியேற்றங்களை நிகழ்த்தி, நியாமற்று முறையில் கைதுசெய்து சிறையில் அடைத்து தமிழர்களின் மனித உரிமைகளை இலங்கைச் பெரும்பான்மைச் சிங்கள அரசுகள் மீறின. இதன் உச்ச கட்டமாக இதுவரை பல லட்ச தமிழர்கள் தொகை தொகையாக கொல்லப்பட்டனர். சிங்கள அரசு கலவரங்களை ஏற்படுத்தியும், வானூர்திகளில் இருந்து கண்மூடித்தனமாக குண்டு வீசியும், எறிகணைகளை வீசியும், நேரடியாகச் சுட்டும், சித்திரவதை செய்தும் ஈழத்தமிழர்களை படுகொலை செய்தது. மானிட வரலாற்றில் நீண்ட இனப்படுகொலை இது என்றே கூறலாம்.

நெஞ்சை உருக்கும் சோகத்தின் கதையை தமிழீழம் கொண்டுள்ளது. விடியல் பிறக்காதா என்று தமிழீழம் ஏங்கி தவிக்கிறது. மீளமுடியாத சோகங்களும்  கலையாத கவலைகளும் மட்டுமே எஞ்சி நடைபிணங்களாக தமிழின மக்கள் விரக்தியுடன் ஆற்றனா துயரத்தில் வாழ்ந்து கொண்டு இருகிறார்கள். தமிழகத்தில் உள்ள தலைவர்கள் தமிழீழத்தை ஒரு அரசியல் யுக்திகாக மட்டுமே பயன்படுத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனர். தமிழீழத்தில் உள்ள தலைவர்களிடையே ஒற்றுமை இல்லாமல் இருப்பது தமிழீழ மக்களிடையே ஒரு மிகப்  பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது!

எந்த திசையில் பயணிப்பது யார் தங்களை வழிநடத்த போகிறார்கள் என்று தெரியாமல் தவிக்கும் தமிழீழ மக்களுக்கு யார் துணை?

வீடுகளை இழந்து, உறவுகளை இழந்து, உடமைகளை இழந்து நிற்கதியாக இருக்கும் அவர்களுக்கு என்ன அறுதல் கூற முடியும்?

அவர்களுக்கு ஏற்பட்ட அநீதிகளுக்கு என்ன பதில்?

மீண்டும் தமிழீழம் மலருமா?

சுதந்திர காற்றை சுவாசிக்க நினைக்கும் தமிழின சிறார்களின் ஆசை நிறைவேறுமா?
இது போன்ற கேள்விகளுக்கு உங்களிடம் விடை உள்ளதா....?

சில்க் சில்க் சில்க் - NOT A DIRTY PICTURE

ஆந்திர மாநிலத்தில் ஏலுறு என்ற கிராமத்தில் ஏழை குடும்பத்தில் விஜயலக்ஷ்மியாக பிறந்து தென்இந்தியாவை தன்னுடைய அழகாலும் கவர்ச்சியாலும் தனகென்று ஒரு இடத்தை   நிலைப்படுத்திய பிரபல நடிகை சில்க் ஸ்மிதா. ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்து 1979ல் வண்டிச்சக்ரம் என்ற தமிழ் படத்தில் அறிமுகமாகி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் கிட்டத்தட்ட 450 படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து மக்களிடம் தனகென்று ஒரு தனி பெயரை தக்கவைத்து கொண்டார்.17 வருட சினிமா வாழ்கையில் சில்க் ஸ்மிதா பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்திருக்கிறார். ஒப்பனை பெண்ணாக தன்னுடைய கலைபயனத்தை தொடங்கி  1980- 90 களில் தென் இந்திய திரையுலகை தன்னுடைய கவர்ச்சியாலும் நடிப்பாலும் தனக்கென ஒரு இடத்தை நிலைபடுத்திகொண்டார்.

தெனிந்தியா முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி போன்ற பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதிகமாக குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பினாலும் கவர்ச்சி வாய்ப்புகளே சில்க்கை தேடி வந்தது. Yamakinkarudu (1982), Khaidi (1983), Challenge (1984), Layanam (1989) remake in Hindi as Reshma Ki Jawani and Adharvam (1989) போன்ற படங்கள் சில்க்கை புகழின் உச்சிக்கு அழைத்துசென்றது. அலைகள் ஒய்வதில்லை, கோழி கூவுது போன்ற தமிழ் படங்களில் அனைவரும் ரசிக்கும்படி வகையில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்தார். சில நடிகைகள் நடிக்க தயங்கிய கதாபாத்திரங்களில் சில்க் தைரியமாக நடித்தார்.

பிரபலமான நடிகையான சில்க் ஸ்மிதா செப்டம்பர் 23,1996 தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக மாறியது. நிதி நெருக்கடி, காதல் குழப்பங்கள், மன சோர்வு போன்ற பல காரணங்கள் கூறினாலும் சில்க் ஸ்மிதாவின் தற்கொலை மர்மகதையாக உள்ளது. Dirty Pictures என்ற ஹிந்தி படம் சில்க் ஸ்மிதாவின் வாழ்கையை தழுவி எடுக்கப்பட்டது. மிகப்பெரிய வசூல் செய்தும் அந்த படத்தில் சில்க் ஸ்மிதாவின் வேடத்தில் நடித்த வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுத்தந்தது. இன்றும் சில்க்கை ரசிகர்கள் மறக்காமல் ரசிக்கிறார்கள் என்பதற்கு அது ஒரு எடுத்துக்காட்டு. திரையுலகில் சில்க் விட்டுச்சென்ற இடம் இன்றும் காலியாகவே உள்ளது. எத்தனையோ நடிகைகள் அவர் இடத்திற்கு போட்டியிட்டாலும் ரசிகர்கள் சில்கிற்கு கொடுத்த இடத்தை எவராலும் நெருங்க முடியவில்லை. எதையும் வெளிப்படையாக தைரியமாக பேசும் குணம் கொண்டவர். திரையில் நடித்தாலும் நிஜத்தில் நடிக்காதவர் அவர். யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்ற பழமொழிக்கு ஏற்ப சில்க் ஸ்மிதா இறந்த பின்னும் அவருடைய வாழ்க்கையை தழுவி எடுத்த Dirty Pictures படத்தின்  வசூலே சாட்சி..

'Being a sex symbol is a heavy load to carry, especially when one is tired, hurt and bewildered' – Silk smitha.

வியாபாரமான மருத்துவம்

ஒரு காப்பீட்டு நிறுவனதின் ஆய்வில் சராசரி இந்தியன் 12,036 ரூபாய் தனியார் மருத்துவமனையில் ஒரு நாள் தங்கி செலவு செய்கிறான் என்று கூறுகிறது. இந்தியாவில் மருத்துவம் என்பது வியாபார சந்தையாக உள்ளது. நோயாளிகளுக்கு அதிகபடியான கட்டணத்தை வசூலிக்க எந்த ஒரு தனியார் மருத்துவமனையும் தவறுவது இல்லை. பல மருத்தவமனைகள் நோயாளிகளின் அறியாமையையும், நோயின் தன்மையை பயன்படுத்தியும் அதிகப்படியான கட்டணத்தை வசூலிக்கிறது.

பெரும்பாலும் மருத்துவர்கள் பரிந்துரைகளை தங்கள் மருந்து கடைகளில் வாங்க கட்டாயபடுதுகின்றனர். விலை உயர்ந்த மருந்துகளையே அதிகமாக பரிந்துரை செய்கிறார்கள். தங்களிடம் மாட்டும் நோயாளிகளை பணம் ஈட்டும் இயந்திரமாக இன்றைய பெரும்பாலான மருத்துவர்கள் பார்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.

சரியான அனுசரிப்பும், நல்ல கவனிப்பும் போதிய சிகிச்சை வசதியும் பல அரசு மருத்துவமனையில்  இல்லாததால் ஏழை, நடுத்தர மக்கள் தனியார் மருத்துவமனையை நாடுகின்றனர்.
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற மக்களை ஊக்குவிக்க அரசு பல நல்ல  திட்டங்களை அறிவிக்க வேண்டும். 
தனியார் பள்ளிகளில் கட்டணம் நிர்ணயம் செய்தது போல் தனியார் மருத்துவமனைகளிலும் கட்டணம் நிர்ணயம் செய்தால் சிறந்ததாகும்.
அணைத்து நோயாளிகளும் நல்ல அனுசரணையுடன் போதிய கவனிப்புடன் முறையான சிகிச்சை அரசு மருத்துவமனையில் பெறுவதை தீவிரமாக அரசு கண்காணிக்க வேண்டும். சில அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை அளித்தாலும் மக்களுக்கு அதை பற்றிய  போதிய விழிப்புணர்வு இல்லை.

மருத்துவம் என்ற புனிதமான சேவை இன்று வர்த்தகமானது  நம் அனைவரின்  துரதிருஷ்டவசம். நோயாளிகள் இல்லமால் மருத்துவர்கள் இல்லை, மருத்துவர்கள் நோயாளிகளின் சிகிச்சைக்கு ஏற்ற சரியான கட்டணத்தை வசூலித்தால் சாலச்சிறந்தது. இறைவனுக்கு அடுத்தபடியாக மருத்துவர்களை மக்கள் காண்கிறார்கள், அப்படி பட்ட மக்களை அதிக கட்டணம் வசூலித்து வஞ்சிக்காமல் மருத்துவர்கள் தங்கள் சேவையை சரியான கட்டணத்துடன் வழங்கினால் மிகவும் நல்லது.

ஆள் கடத்தல் - ஒரு கண்ணோட்டம்

ஆள் கடத்தல் தற்போது அதிகம் வருவாய் கொண்ட தொழிலாக மாறியுள்ளது. குஜராத்தில் உள்ள பின்தங்கிய குக்கிராமங்களில் உறவினர்களே தங்கள் வீட்டில் உள்ள பெண்களை சுலபமான பண வருவாய்க்கு பெண்களை பல ஆண்டுகளாக  பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்துகின்றனர். பங்களாதேஷில் சில இடங்களில் பெண்களை கால்நடைகளுக்கு கொடுக்கும் கொழுப்பு ஊசி செலுத்தி பெண்களை வயாபார சந்தையில் அதிக விலைக்கு விற்கிறார்கள்.

ஒரு ஆய்வின்படி உலகில் 2.4 மில்லியன் பெண்கள் கடத்தபடுகிறார்கள். அவர்களில் 80 சதவிதம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தபடுகின்றனர். உலகில் 32 பில்லியன் வருவாய் ஆண்டுதோறும் ஆள்கடத்தல் மூலமாக  ஈட்டபடுகிறது. தென் ஆசியாவில் 1,50,000 பெண்கள் ஆண்டுதோறும் கடத்தபடுகிறார்கள்.

கடத்தப்படும் பெண்களில் அதிகம் பேர் பின்தங்கிய கிராமங்களில் இருந்தும், வீட்டுவேலைக்காக நகரத்திற்கு சென்ற பெண்களும் கணிசமான அளவில் உள்ளனர். இவர்களில் அதிகம் பேர் பெண்களால் கடத்தப்படுகின்றனர் என்பது வியப்பான உண்மை. கடத்தப்பட்ட பெண்கள் பலர் வலுகட்டாயமாக பாலியல் தொழிலிற்கு தள்ளபடுகின்றனர். அவர்களை பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடுத்திகின்றனர். கடத்தப்பட்ட பெண்கள் சிலர் கொத்தடிமைகளாக விற்கபடுகின்றனர்.

பெண்களை தெய்வமாக கருத்தும் நம் நாட்டிலும் இத்தகைய சுழல் இருப்பது நாம் வேதனையும் வெட்கப்படவேண்டிய விஷயமாகும். இதற்கு என்ன தீர்வு? அரசும் தனார்வஅமைப்புகளும் காவல்துறையும் பொதுமக்களும் இணைந்து ஆள் கடத்தலை தடுக்கவேண்டும். நாமும் இணைந்து போராடுவோம் நண்பர்களே..

வாழ்கை இனிமையானது

நம் வாழ்கை நம்முடையது; நம் சமுதாயம் நம்முடைய வாழ்கை முறையை அமைக்கிறது. நம் வாழ்கை எந்த ரீதியில் எவ்வாறு பயணிக்க வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்கவேண்டும். எது நல்லது, எது கெட்டது அன்பதை நாம் தான் முடிவு செய்யவேண்டும். பிறரின் முடிவிற்கு நம்முடைய வாழ்க்கையை விட்டு விட கூடாது, அடுத்தவர் தரும் ஆலோசனைகளை வேண்டுமானால் நாம் தீர ஆராயலாம். அந்த செயலுக்கான முடிவு நாம் தான் எடுக்க வேண்டும். மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள், என்ன பேசுவார்கள் என்று கவலைப்பட்டு வாழக்கூடாது, உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை செய்யுங்கள்.

உங்கள் முடிவுகள் அடுத்தவர்க்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவகையில் இருக்கவேண்டும்.உங்கள் மனதுக்கு பிடித்தபடி நல்ல சிந்தனையுடன், நல்ல செயலுடன் உங்கள் விருப்பத்திற்கு வாழ பழகுங்கள், உங்கள் வாழ்கை உங்களுடையது, வாழ்வது ஒரு முறை ஆனாலும் மனநிறைவோடு மனதார வாழ பழகுங்கள்.. வாழ்கை மிகவும் இனிமையானது நண்பர்களே...

அழகு முகத்தில் இல்லை நடத்தையில் இருக்கிறது.
காதல் அறிவில் இல்லை அன்பில் இருக்கிறது.

பொறுமை வார்த்தையில் இல்லை செயலில் இருக்கிறது
பிராத்தனை வரிகளில் இல்லை பக்தியில் இருக்கிறது.
வாழ்கை பிறரிடம் இல்லை நம் கையில் இருக்கிறது.

எங்கே செல்கிறது தமிழகம்?






"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
 பண்பும் பயனும் அது". 

மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே என்று கூறிய திருவள்ளுவர் வாழ்ந்த பூமி நம் தமிழ் நாடு.

இல்லறம் நல்லறமாக அமைய நம்முடைய தலைமுறையினர் நமக்கு கூறிய அறிவுரைகள் வழிகாட்டுதல்கள் ஏராளம். கூட்டு குடும்பதிற்கும், தாம்பத்திய வாழ்விற்கும் சிறந்த எடுத்துக்காட்டாய் தமிழர்கள் விளங்கினார்கள். அனால் இன்று உள்ள நிலைமை உங்களுக்கு தெரியுமா? இந்தியாவில் 2010ம் ஆண்டில் கணவன் அல்லது மனைவி இழந்தோர், விவாகரத்து ஆனவர்கள் மற்றும் பிரிந்து வாழ்பவர்கள் பட்டியலில் 8.8 சதவீதத்துடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. வியப்பாக இருந்தாலும் இது தான் இன்றைய நிலவர உண்மை.

கணவன் மனைவியிடம் பரஸ்பர புரிந்துணர்வு, விட்டுகொடுக்கும் மனப்பான்மை, பொறுமை, அன்பான அனுசரணை, தாம்பத்திய உறவில் குறைவு ஆகியவை குறைந்ததால் தான் இந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்பொழுது அதிகம் சம்பாத்தியம் கொண்ட தம்பதியர்கள் மிகுதியாக உள்ளனர். அவர்கள் குடும்பத்திற்காக அதிக நேரம் ஒதுக்காமல், வேலை மற்றும் பணம் சம்பாதிப்பதில் கூறியாக உள்ளனர்.இன்றைய இளைய சமுதாயம் காதல் என்ற பெயரில் பருவகால மோகத்தில் மயங்கி ஒருவரை ஒருவர் சரியாக புரிந்துகொள்ளாமல் திருமணம் செய்துகொண்ட பிறகு கருத்துவேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்கிறார்கள்.

பாரதி கண்ட புதுமை பெண்ணாக இன்று பல பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேறி உள்ளனர். ஆனால் ஒரு சில பெண்கள் ஆண்களை அடக்கி ஆள்வது தான் புதுமை பெண்ணியத்தின் பொருள் என்று தவறாக நினைகிறார்கள். அவர்கள் ஆணவம், திமிருடுன் கணவனை கூட மதிப்பது இல்லை. பெண்கள் வீரமாக இருக்க வேண்டும் தங்களை காப்பதில்; கணவனை அடக்கி ஆள்வது தான் வீரம் என்று தவறாக நினைகிறார்கள். அது பெண்மை இல்லை. பெண்மை என்றால் அன்பு, அடக்கம், நாணம்,பொறுமை, அரவணைப்பு கலந்தது. குடும்பத்தை அன்புடன் நிதானமாக சாதுரியமாக அனைவரும் மகிழும்படி வழிநடத்தி செல்வதில் தான் புதுமை பெண் வெற்றி அடைகிறாள்.

ஆண்களும் பெண்களுக்கு உரிய அன்புடன் சமவாய்ப்பும், மதிப்பும், மரியாதையும் கொடுக்க வேண்டும். அப்போது தான் ஆண்கள் பெண்களிடம் உண்மையான பெண்மையை அவர்கள் உணர முடியும். குடும்பம் ஒரு கோவிலாகும், அதை இனிமையாக சிறப்பாக வழிநடத்தி கணவனும் மனைவியும் செல்லவேண்டும். அன்பான ஒற்றுமையான கட்டுக்கோப்பான குடும்பத்தை மேற்கொள்ள இருவரும் முயற்சிக்க வேண்டும். வாழ்கை ஒருமுறைதான் அதை அழகாக மாற்றுவது நம் கையில் உள்ளது. வாழ்க வளமுடன்!

12 May 2012

போர் குற்றங்கள் - இனத்தின் ஒரு சாட்சி

இலங்கையில் வாடும் எனது தமிழ் இனத்தின் உடன் பிறப்புகளுக்கு இதை சமர்பிக்கிறேன்....

ஒளிவீசும் கதிரவனை காலையில் பார்க்க கண்கள் கூசும், அனால் எங்களுக்கு அநீதி செய்த இந்த மனிதர்களை பார்க்கும் போது கண்கள் கூசுகிறது. இன்னும் எங்கள் வாழ்வில் இருள் சூழ்ந்து கொண்டு இருக்கிறதே என்று நெஞ்சம் துடிக்கிறது. போர் முடிந்து இரண்டு வருடங்களாகியும்   இன்னும் நான் போர்கள குற்றவாளி போல தான் இங்கு நடத்தபடுகிறேன்.

என் இனமே அழிந்து விட்டது இன்னும் இந்த உயிர் உடலில் எதற்கு? காலையில் எழுந்தவுடன் எனது அம்மாவை கட்டிபிடித்து முத்தம் கொடுப்பேன், எப்பொழுது எங்கே தேடுவேன் எனது தாயின் அரவணைப்பையும் அந்த பாசத்தையும் இந்த இரத்த பூமியில், கூப்பிடும் தூரத்தில் கூட  இல்லை அவள். கண்ணீர் வார்த்தபடி நான் ஏக்கத்துடன் கடைசியாக என் அன்னை கன்னத்தில் முத்தமிட்டு நெகிழ்ந்ததை நினைத்து கொண்டேன்.

என்னுடன் இருந்தவர்கள் எனக்கு இப்போது   காணகனவாக இருக்கிறார்கள், அவர்களின் நினைவாக நான் மட்டுமே இருக்கிறேன். இங்கே பாடி திரியும் குயில்களின் ஓசையைவிட உயிர்களை காவு வாங்கும் குண்டின் சத்தமும் துப்பாக்கி தோட்டாக்களின் சத்தமமும்தான்  அதிகம் கேட்டேன். யாராவது எங்களுக்கு உதவ மாட்டர்களா என்று நாங்கள் இறைவனிடத்தில் தொழாத நாட்கள் இல்லை... 

எனது இனத்தின் உறவுகள் அண்டை நாட்டில் இருந்தும் எந்த பலனும் இல்லை. எல்லாம் முடிந்து விட்டது இன்று. எஞ்சியது சடலங்கள் தான் மண்ணோடு.. எனது உறவுகள் பலர் போர் என்ற பெயரில் அநியாயமாக துன்புறத்தபட்டு   கொல்லப்பட்டனர்..

நான் மாட்டும் ஏன் உயிர் பிழைத்தேன்? இனி நான் மட்டும் ஏன் உயிரோடு இருக்கவேண்டும் என  நினைத்தேன்... எனது இனம் என்னை சாட்சியாக விட்டு சென்றுள்ளது.. ஆம் நான் உயிரோடு இருந்தால் தான் என் கண்முன்னே நடந்த அணைத்து அக்ரமங்களும்,கொலை குற்றங்களும், பாலியல் வல்லுருகள், கொடூர செயல்கள் அனைத்துக்கும் சாட்சியாக என்றாவது சர்வதேச நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுப்பேன் என்று!

போர் என்ற போர்வையில் எனது இனத்தின் அப்பாவி உயிர்களை காவு வாங்கிய இரத்த வெறி பிடித்த கொடூர மனிதர்களை நீதியின் முன்னால் நிறுத்தாமல் எனது உயிர் இளைபாராது.... இன்றைய நாளாவது நீதிக்கு வழிவுகுக்கும் நேரம் வரும் என்ற நம்பிக்கையில் படுக்கையை விட்டு மனஉறுதியுடன் எழுகிறேன் இந்த நொண்டி காலுடன்... இந்த உலகத்தின் கடைசி நாள் வரை நீதி சாகாது!

யார் உண்மையான அரசியில்வாதி?

ஆங்கிலேயரை எதிர்த்து சிறைக்கு சென்றார்கள் அன்றைய அரசியில்வாதிகள்
ஊழலில் பிடிபட்டு சிறைக்கு சென்றார்கள் இன்றைய அரசியில்வாதிகள்!

ஊருக்காக உழைத்தார்கள் அன்றைய அரசியில்வாதிகள்
தங்கள் குடும்பத்திற்காக உழைக்கிறார்கள் இன்றைய அரசியில்வாதிகள்!

பொதுநலமனம் படைத்தவர்கள் அன்றைய அரசியில்வாதிகள்
சுயநலமனம் படைத்தவர்கள் இன்றைய அரசியில்வாதிகள்!

ஏழையின் சிரிப்பில் மகிழ்ந்தார்கள் அன்றைய அரசியில்வாதிகள்
ஏழையின் அழுகையில் மகிழ்கிறார்கள் இன்றைய அரசியில்வாதிகள்!

உயிர்த்தயாகம் செய்து சுதந்திரம் வாங்கித்தந்தார்கள் அன்றைய அரசியில்வாதிகள்
ஏழைகளின் வைதெறிச்சலில் சுதிந்திரவாழ்கை வாழ்கிறார்கள் இன்றைய அரசியில்வாதிகள்!

நாடும் நாட்டுமக்களும் வளம் பெற உழைத்தார்கள் அன்றைய அரசியில்வாதிகள்
வீடும் வீட்டில் உள்ளவரும் வளம் பெற உழைக்கிறார்கள் இன்றைய அரசியில்வாதிகள்!

மானம்காத்த வீரமான தலைவர்கள் அன்றைய அரசியில்வாதிகள்
மானம்கெட்ட கேவலமான தலைவர்கள் இன்றைய அரசியில்வாதிகள்!

படித்த இளைய சமுதாயம் இன்றைய அரசியலில் எடுபடவேண்டும். ஊழல் இல்லா தலைவர்களாக, இந்திய மக்களின் நலன் கருதும் சுயநலமற்ற அரசியில் தலைவர்கள் வேண்டும். மக்களும் ஊழல் எதிர்ப்பில் விழிப்புணர்வுடன் செயல்பட்டு ஊழல் இல்லா தேசமாக உருவாக்க வேண்டும்.

சுதந்திரம், குடியரசு தினங்கள் விடுமுறைக்கு மட்டுமே பிரயோஜனமானது இன்று -  என்று வறுமையில்லா, ஊழல் இல்லா தேசமாக இந்தியா மாறுமோ அன்று தான் எங்களுக்கு உண்மையான சுதந்திரமும், குடியரசும்....

இப்படிக்கு இந்திய குடிமகள்

அமைதி தழைக்கட்டும்....


இறைவன் மனிதனை படைத்தான், மனிதன் ஜாதி, மதம்,மொழி,இனம் ஒருவாக்கி பல வேற்றுமைகளை உருவாக்கினான். அதனால் இன்று மனிதர்களிடம் பலதரப்பட்ட வேறுபாடுகள், அதனால் பிரச்சனைகள், குழப்பங்கள் பல. ஒரு சூரியன், ஒரு பூமி, ஒரே காற்று இன்று அனைத்து மனிதர்களுக்கும் இறைவன் பாகுபாடு இல்லாமல் கொடுத்தான், மனிதானகிய நாம் செய்யும் எல்லா செயல்களிலும் பாகுபாடு ஏற்படுத்தி கொண்டோம். நிலையில்லா நாம் நிலையான மண்ணிற்காக சண்டைபோடுகிறோம்.

அமைதி என்பதை வேண்டும் என்றே தொலைத்து விட்டு தேடுகிறோம். நிம்மதி இல்லாமல் தவித்து மனம் கலங்கி அலைகிறோம். வேற்றுமையை கலைந்து ஒற்றுமையாக வாழ்ந்தால் நமக்கு நிம்மதி கிடைத்து மகிழ்ச்சி பொங்கும்.. மானுடம் இல்லேயேல் அழிந்து போகும் சூழ்நிலை உருவாகும். மனிதர்கள் நமக்கு எது வேண்டும் என்பதை தீர்மானம் செய்ய அறிவு கொடுத்து இருக்கிறான், அனால் நாம் அறிவை நல்ல வழியில் பயன்படுத்தாமல் தீய வழிகளில் பயன்படுத்தி நம்மையும் நம்மை சுற்றி உள்ளவரையும் அழிக்கிறோம். உலகம் அமைதி பொங்க நாம் ஒற்றுமையாக, நட்புடன் அனைவரையும் அனுசரணையுடன் பழகினால் அதுவே நாம் இறைவனுக்கு செய்யும் நன்றி ஆகும்.. அமைதி தழைக்கட்டும்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக