label ஆயிஷாவின் வாழ்க்கை கவிதைகள். Show all posts
Showing posts with label ஆயிஷாவின் வாழ்க்கை
கவிதைகள். Show all
posts
30 May 2012
அயல்நாட்டு அகதிகள்
தங்கள் சுகங்களை, ஆசைகளை தியாகம் செய்து குடும்பத்திற்காக
அல்லும் பகலும் அயல்நாட்டில் அயராது உழைக்கும் உழைப்பாளிகள் நீங்கள், அயல்நாட்டில் வாழும் அனைவருக்கும் இந்த கவிதையை
சமர்பிக்கிறேன்..
அன்புடன் ஆயிஷா பாரூக்..
அயல்நாட்டில் வேலைக்கிடைத்த
ஆனந்தசெய்தியை அகம்மகிழிந்து
ஒய்வுற்ற தந்தைக்கு ஆறுதலாக
அன்பான தாய்க்கு மனம்குளிர
பாசமான தங்கைக்கு மணமுடிக்க
குறும்பான தம்பிக்கு நல்லபடிப்புத்தர
வீட்டில்லினி வருமை தீரும்மென
கடன் வாங்கிப்போக நகையடகுவைத்து
இத்தனை கனவோட மனச்சுமையாக
விமானமேறி வாழ்வை வென்றிட
பணியில் முதல்நாள் சேர்ந்தேன்
புதியஉலகம் புதியமனிதர்கள் தெரிந்தவேலை
சிறிதுகூச்சம் மனதில் ஒருவிதபயம்
ஊரில்சொன்னதும் கம்பெனியில் சொல்வதும்
வெவ்வேறு சம்பளங்கள் நடைமுறைகள்
செய்வதறியாது புரியாமல் கையெழுத்திட்டேன்
படிவத்தில் வந்துவிட்டோம் தலைவிதியென
வீட்டிலில்லூர் கனவுமெய்பட சுகங்களைமறந்து
வேலையோடியது தினம்முறை கண்ணீருடன்
மிஞ்சியஏக்கங்களும் உறைந்த நினைவுகளும்
சோகத்தைமறைத்து மகிழ்ச்சியை பேச்சில்காட்டி
தொலைபேசியில் வாரம் ஒருமுறைப்பொழுதில்
தாய்தந்தையின் நலமும் தம்பிதங்கையின் கல்வியும்
நண்பர்கள் உற்றார் உறவினர் செய்தியும்
நாட்டுநடப்பும் நல்ல செய்திகளும் தூக்க விசாரிப்பும்
பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் செவிவழி செய்திதான்
பரிமாறி காலம்கறைந்தோட தவமிறிந்தேன்
நானும் இயந்திரம்தான் உணர்வுயில்லா
பொருளீட்டும் கருவியாக ருசியில்லா
உணவூண்டு நெருக்கடியான இடத்தில்லுறங்கி
சகநன்பருடன் சககதைகளை கேட்டு
விடியல்லொருநாள் நமக்குவருமென ஆறுதல்கூறி
தேதி ஒன்றில் சம்பளம்மனுப்பி முப்பதில் வயிர்க்காய்ந்து
ஊருக்கு செல்லும்நாளை ஆண்டுக்குறிப்பேட்டில்
தினம்மொருமுறை நோக்கி கண்னயர்ந்தேன்
ஓவ்வொருநாளும் இதேநிகழ்வென புரண்டோடி
இரண்டாண்டுகளானது விடுமுறைக்கண்டது
பூத்தகண்ணுடன் காத்துநிற்கும்
பாசகுடும்பத்திற்கு
திக்குமுக்காட வியப்பில் ஆழ்த்த புத்தாடையும்
பரிசும்
தங்கையின் திருமணத்திற்கு தங்கதாலிச்சங்கிளியும்
ராமர் வனவாசமுடிந்து நாடுதிரும்பியதுப்போல
கடன் குறைந்ததால் கவலைமறைந்த கண்களாய்
நிறைவேறிய சிலகனவுடன் பயணமானேன் தாய்நாட்டிற்கு
அயல்நாட்டின் அகதிவாழ்கையை
முடித்துக்கொண்டு..
16 May 2012
விழித்திரு மானிடா!
நீ எந்த ஜாதி என்று
கேட்டா
பூமி உன்னை
சுமக்கின்றது!
நீ எந்த
மதம் என்று பார்த்தா
நிலம் நீர்
கொடுக்கிறது!
நீ எந்த
இனம் என்று அறிந்தா
காற்று
சுவாசிக்க அனுமதிக்கிறது!
கல்விக்கும் வேலைக்கும் ஜாதியை பார்க்கிறாய்
அறிவும் செல்வமும் ஜாதியை பார்ப்பதில்லை!
பிறப்புக்கும் இறப்புக்கும் ஜாதியை பார்க்கிறாய்
ஜனனமோ மரணமோ ஜாதியை பார்ப்பதில்லை!
விளையாட்டிலும் வீரத்திலும் ஜாதியை பார்க்கிறாய்
சாதனையும் தைரியமும் ஜாதியை பார்பதில்லை!
நிறத்திற்கும் மொழிக்கும் ஜாதியை பார்க்கிறாய்
நோயோ புலமையோ ஜாதியை பார்ப்பதில்லை!
கோவிலுக்கும் கருவறைக்கும் ஜாதியை பார்க்கிறாய்
இறைவனோ தீபமோ ஜாதியை பார்பதில்லை!
பாட்டுக்கும் ஆட்டத்துக்கும் ஜாதியை பார்க்கிறாய்
இசையோ கலையோ ஜாதியை பார்ப்பதில்லை
மூடன் ஏற்படுத்திய பிளவு மனிதனுள்
கீழ் ஜாதியாம் மேல் ஜாதியாம்
மேல் ஜாதி என்றால் உனக்கு சொர்கமோ!
கீழ் ஜாதி என்றால் உனக்கு நரகமோ!
சொர்கமோ நரகமோ அவையிரண்டும்
ஜாதியோ மதமோ பார்ப்பதில்லை
உன் புண்ணியக் கணக்கையோ
நீ செய்த பாவக் கணக்கையோ
இறைவன் பார்க்கிறான்! மதிப்பிடுகிறான்.
மரமோ செடியோ கொடியோ
மிருகமோ பறவையோ நுன்னுயிரோ
ஜாதியோ மதமோ இனமோ பார்ப்பதில்லை
அறிவும் பண்பும் தெளிவும் இருந்தும்
மூடனாய் மூர்க்கனாய் மூளையிழந்து
ஜாதியை பேசி மனிதனாய் வாழ மறந்தாய்யடா!
விழித்திரு மானிடா! விழித்திரு!!!
15 May 2012
நேரம் பொன்னானது!
தேர்வு எழுதும் மாணவனுக்கு
தேர்வு நேரம் பொன்னானது!!!
பதவி போட்டியிடும் அரசியல்வாதிக்கு
வாக்கு நேரம் பொன்னானது!!!
விளையாட்டு மைதானத்தில் தடகளவீரனுக்கு
ஓடும்நேரம் பொன்னானது!!!
குழந்தை பிரசவிக்கும் கர்ப்பிணிக்கு
பிரசவ நேரம் பொன்னானது!!!
போரில் சண்டையிடும் ராணுவவீரனுக்கு
போர் நேரம் பொன்னானது!!!
விண்வெளி சோதனையில் விஞ்ஜானிகளுக்கு
சோதனை நேரம் பொன்னானது!!!
சாவின் விளிம்பில் இருக்கும் நோயாளிக்கு
சிகிச்சை நேரம் பொன்னானது!!!
குற்றவாளி கூண்டில்லுள்ள கைதிக்கு
வழக்கறிஞரின் வாதநேரம் பொன்னானது!!!
வாழ்வின் ஓவ்வறு துளியும் பொன்னானது ஆனால் நாம் நம் அவசர தேவையின் போது மட்டுமே நேரத்தின் முக்கியத்தை உணர்கிறோம். நேரம் என்றுமே பொன்னானது தான்!
நம் நேரத்தை ஆக்கபூர்வமாக செயல்படுத்துவோம் நண்பர்களே!!!
13 May 2012
தொடக்கம்
இருளில்லிருந்து வெளிச்சம் தொடங்குகிறது
பயதில்லிருந்து தைரியம் தொடங்குகிறது
நம்பிக்கையிலிருந்து வாழ்கை தொடங்குகிறது
இரவில்லிருந்து பகல் தொடங்குகிறது
எளிமையிலிருந்து புகழ் தொடங்குகிறது
ஆணவத்திலிருந்து அழிவு தொடங்குகிறது
பொறமையிலிருந்து வஞ்சம் தொடங்குகிறது
உணர்விலிருந்து ஆசை தொடங்குகிறது
சிந்தனையிலிருந்து செயல் தொடங்குகிறது
தோல்வியிலிருந்து வெற்றி தொடங்குகிறது
பயதில்லிருந்து தைரியம் தொடங்குகிறது
நம்பிக்கையிலிருந்து வாழ்கை தொடங்குகிறது
இரவில்லிருந்து பகல் தொடங்குகிறது
எளிமையிலிருந்து புகழ் தொடங்குகிறது
ஆணவத்திலிருந்து அழிவு தொடங்குகிறது
பொறமையிலிருந்து வஞ்சம் தொடங்குகிறது
உணர்விலிருந்து ஆசை தொடங்குகிறது
சிந்தனையிலிருந்து செயல் தொடங்குகிறது
தோல்வியிலிருந்து வெற்றி தொடங்குகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக