உன் சமையலறையில் நீ சமர்த்தா?...,
1. வீட்டைப் பளிச்சென்று வைத்துக் கொள்ள
யாருக்குத்தான் ஆசை இருக்காது? இதோ.. உங்கள் சமையலறையை சூப்பர் சுத்தமாகப்
பராமரிக்க டிப்ஸ்!
.........................................
2. காய்கறி, பழங்களை நறுக்கியவுடன் குப்பைகளை
உடனே குப்பைத் தொட்டியில் கொட்டி விடுங்கள். மேடையிலேயே சேர்த்து வைத்தால், அதன்
மேல் ஈ மற்றும் பூச்சிகள் மொய்த்து நம்மை அறியாமலேயே வியாதிகளை பரப்பி
விடும்.
..........................................
3. இஞ்சி, தேங்காய் மூடி, காய்கள், இட்லி மாவு
போன்றவற்றை அதன் உபயோகம் முடிந்த உடனேயே எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். அவை
கெட்டுப் போகாது என்பதுடன், மேடையும் சுத்தமாகவே இருக்கும்.
................................................
4. பால் (அ) சாம்பாரை கொதிக்கவிடும்போது வழிந்து
பர்னரில் அடைத்துக் கொள்ளும். இதை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும்.
..................................................
5. அடுப்பின் ‘நாப்’-ஐ அணைத்து, பர்னரை தடிமனான
துணியால் கழற்றுங்கள். இதைத் தண்ணீர்க் குழாயின் கீழே காட்டினால், அடைப்புகள்
நீங்கி விடும். பர்னரிலிருந்து சொட்டும் தண்ணீர் வடிந்த பிறகு, இதை எரிந்து
கொண்டிருக்கிற மற்றொரு பர்னரின் மேல் தலைகீழாக வைத்தால், நிமிடத்தில் உலர்ந்து
விடும்.
6.வாரம் ஒருமுறை, சுவரில் உள்ள ஒட்டடையை அகற்றி,
ஜன்னல் கம்பிகளைத் துடையுங்கள். சமையல் பொருட்கள் வைத்திருக்கும் டப்பாக்கள்,
பாட்டில்கள் போன்றவற்றை ஒரு உலர்ந்த துணியால் துடைத்து பிசுக்கை அகற்றுவதை
வழக்கமாக்கிக் கொண்டால், உங்கள் கிச்சன் எப்போதும் கிளாசிக்தான்.
..................................................
7. சமையல் முடித்தவுடன் கொதிக்கும் வெந்நீரை
மேடையின் மேல் விட்டு, ஒரு துணியால் நன்றாக அழுந்தத் துடையுங்கள். மேடை
பளபளக்கும்.
.......................................................
8. மாதம் ஒருமுறை கிச்சனில் இருக்கும் எக்ஸாஸ்ட்
ஃபேன், பல்புகள், கடிகாரம், மின்சார சிம்னி முதலியவற்றில் உள்ள தூசுகளை உலர்ந்த
துணியால் துடைத்துவிடுங்கள். பிறகு ஈரத்துணியால் அவற்றை சுத்தம் செய்தால்,
பளிச்சென்று இருக்கும்.
கிச்சன் மேடையிலேயே மாவு சலிப்பது, சப்பாத்தி
இடுவது, காய், கீரைகளை நறுக்குவது என்று சகலமும் செய்பவரா நீங்கள்? ஒரு பிளாஸ்டிக்
ஷீட்டை விரித்து அதன் மேல் வைத்துக் கொண்டு வேலைகளை செய்தால், மேடை சுத்தமாக
இருக்கும்.
...........................................................
9.
மீந்த குழம்பு, ரசம் போன்றவற்றை அப்படியே ‘சிங்க்’கில் கொட்டினால், அடைத்துக்
கொள்ளும். இதில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கலக்கி ஒரு பெரிய துளையுள்ள
வடிகட்டியால் வடிகட்டினால், சக்கையைத் தனியே குப்பைத் தொட்டியில் போட்டு விடலாம்.
சிங்க்கில் எதுவும் அடைக்காது.
10.சமையலறையில் கண்களைக் கவரும் வண்ணப் படங்கள்,
இயற்கைக் காட்சிகள் கொண்ட காலண்டர்கள், காய்கறிகள், பழங்களின் படங்களை ஒட்டி
வையுங்கள். முடிந்தால், நல்ல படங்கள் பதித்த டைல்ஸ்களையே சமையலறைக்கு
உபயோகியுங்கள். சுத்தத்துக்கு சுத்தம். மனசுக்கும் சந்தோஷம்!
.................................................................
11.எல்லோரும் பாத்திரங்களை கழுவி, ஈரம் போக
துடைத்துதான் அடுக்கி வைக்கிறோம்.. ஆனால், மறுபடியும் உபயோகிக்கும்போது
அப்படியேதான் பயன்படுத்துறோம். அப்படியல்லாமல், கழுவிட்டு பயன்படுத்துங்க.
முக்கியமா, பருப்பு கடையும் மத்து, கல்சட்டி, பூரிக்கட்டை, பூரிமனை...,
இப்படி
.............................................................
12. காய்கறி வெட்டுவதற்கு முன்பும், வெட்டிய
பின்பும் அறிவாள்மனை அல்லது கத்தியை கழுவிட்டு வெட்டுங்க. பயன்பாடு முடிந்ததும்
குழந்தைகள் கைகளில் படாத இடத்தில் வைக்கவும்.
13. ஈக்கள் மொய்க்கும் காலங்களில் சாப்பாட்டு
மேஜை அதிகம் ஈ நாடாமல் இருக்க வேண்டுமா? கொஞ்சம் புதினா அல்லது கறிவேப்பிலையை மேஜை
மீது போட்டு வையுங்கள். ஈக்கள் பக்கத்திலேயே வராது!
14.
ஸ்டீல் பாத்திரங்கள் கறைப்பட்டால், அரை கப் தண்ணீரில் 3 ஸ்பூன் வினிகர் கலந்து
ஊற்றி, சூடாக்கி, முழுவதும் ஆவியான பிறகு அடுப்பிலிருந்து இறக்கி கழுவுங்கள்.
பாத்திரம்
பளிச்சிடும்!..........................................................
15. வாழை இலை வாங்கி வந்து இரண்டு நாட்கள் வீட்டில் வைத்திருந்தாலே பழுத்து விடும். இலையை சுருட்டிக் கட்டி, படுக்கையாக வைக்காமல், செங்குத்தாக நிமிர்த்தி வைத்துப் பாருங்கள்.. நான்கு நாட்கள் ஆனாலும் இலை பழுக்காது!
16. புது எவர்சில்வர் பாத்திரம் வாங்கி வந்து, அதில் உள்ள ஸ்டிக்கர்ஸ் லேசில் பிரிக்க வராது. அப்படியே பிரித்தாலும் அதை ஒட்டிய பசை கறை பாத்திரத்தில் அப்பிடியே இருக்கும். அப்படி அவஸ்தை படாமலிருக்க சுலப வழி. ஸ்டிக்கர் இருக்கும் பாத்திரத்தின் மறுபக்கத்தை லேசா சூடாக்கி ஸ்டிக்கரை பிரித்தால் சுலபமா வந்துடும்.
..............................................,
17. ஃபிரிட்ஜை மாதம் ஒரு முறை, அதற்குண்டான லிக்குவிட் போட்டு துடைத்து, மீண்டும், எலுமிச்சை பழம் பிழிந்த நீரில் துடைத்து, ஈரம் காய்ந்தபின் உள்ளிருக்கும் டிரேக்களை கழுவி ஈரம் போக துடைத்து அடுக்கவும்.
...............................................
18. காய்கறிகளை வாங்கி, கழுவி ஈரம் போன பின் பிளாஸ்டிக கவரில் போட்டு தனித்தனியா வைத்தால் எடுக்கும்போது ஈசியா இருக்கும்.
.........................................................
டிஸ்கி: வீடு கட்டும்போது எல்லா இல்லத்தரசிகளும் கிச்சன் அப்பிடி வேணும், டைனிங் டேபிள் இப்படி வேணும், பாத்திரம் வேணும்ன்னு பார்த்து செய்வாங்க. ஆனால், அதை சரியா பராமரிக்காம சில மாதங்களிலேயே கிச்சன் பார்க்க சகிக்காது. சுவரில், பிசுக்கு, ஒட்டடை, பொருட்களை கலைஞ்சு இருக்கும். அப்படியில்லாம மாசம் ஒருதடவையாவது பாத்திரங்களை துடைத்து, ஒட்டடை அடித்து வைக்கனும்.
சமையலறை சுத்தமா இருந்தால்தான் சமைக்கும் உணவு சுவையாவும் ஆரோக்கியமாவும் இருக்கும்.
Tweet |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக