ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (30):
92. பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையப் பார்க்காமல் நோன்பு விடாதீர்கள் எனக் கூறிய நபி (ஸல்) அவர்கள், உங்களுக்கு மேக மூட்டமாக ஏற்பட்டால் எத்தனை நாட்களாக எண்ணிக்கொள்ளுமாறு கூறினார்கள்? முப்பது நாட்களாக எண்ணிக்கொள்ளுமாறு கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) - நூல் : புகாரி).
93. மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள் எனக் கூறிய நபி (ஸல்) அவர்கள், உங்களுக்கு மேக மூட்டமாக ஏற்பட்டால் எண்ணிக்கையை எவ்வாறு முழுமைப்படுத்துமாறு கூறினார்கள்? எண்ணிக்கையை முப்பதாக முழுமைப் படுத்துமாறு கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) - நூல் : புகாரி).
94. நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும் எனக் கூறிய நபி (ஸல்) அவர்கள், நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் எதைவிடச் சிறந்தது எனக் கூறினார்கள்? கஸ்தூரியை விடச் சிறந்த்தது எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல் : புகாரி).
Wednesday, July 06, 2011
Tuesday, June 21, 2011
Wednesday, May 25, 2011
ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (25):
77. திருப்பிக்கொடுக்கும் எண்ணமில்லாமல் கடன் வாங்கினால், அந்தக் கடனை அல்லாஹ் என்ன செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
யார் நிறைவேற்றும் எண்ணத்தில் (மக்களின் செல்வத்தை) கடன் வாங்குகிறாரோ அவருக்காக அல்லாஹ் அதை நிறைவேற்றுவான். யார் மோசடி செய்வதற்காக கடன் வாங்குகிறாரோ, அவரை அல்லாஹ் மோசடி செய்துவிடுவான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்: புகாரி).
Sunday, April 24, 2011
ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (24):
74. மறுமை நாளில் அல்லாஹ் மூன்று வகை மனிதர்களிடம் தர்க்கம் செய்வேன் என்று கூறுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறிய அந்த மூவர் யார்?
1.அல்லாஹ்வின் பெயரைக் கூறி உடன்படிக்கை செய்து பிறகு அதை முறித்தவன்.
2.சுதந்திரமான ஒரு மனிதனைக் கடத்திச் சென்று விற்று அந்த பணத்தில் சாப்பிட்டவன்.
3.ஒரு கூலி ஆளை வேலைக்கு அமர்த்தி முழு வேலையையும் வாங்கிவிட்டு அவனுடைய கூலியைக் கொடுக்காதவன்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்: புகாரி).
Tuesday, April 12, 2011
Saturday, March 26, 2011
Friday, March 18, 2011
Tuesday, March 08, 2011
Saturday, March 05, 2011
ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்புகள் - (16 லிருந்து 18 வரை):
50. அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்கள் எவைகள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? (1) அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது. (2) சூனியம் செய்வது. (3) நியாயமின்றி கொள்ளக்கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரை கொல்வது. (4) வட்டியை உண்பது. (5 ) அனாதைகளின் சொத்தை உண்பது. (6 ) போரின் போது புறமுதுகிட்டு ஓடுவது. (7 ) அப்பாவிகளான இறைநம்பிக்கை கொண்ட பெண்களின் மீது அவதூறு கூறுவது. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்: புகாரி).
ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்புகள் - (8 லிருந்து 10 வரை):
22.எந்த நான்கு செயல்கள்
ஒரு மனிதரிடம் ஒரே நாளில் ஒரு சேர நடந்துவிட்டால், அவர்
சொர்க்கத்திற்குப் போவது உறுதியாகிவிடும் என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்? (1)நோன்பு நோற்றல் (2)ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்லுதல் (3)ஏழைக்கு
உணவளித்தல்(4)நோயாளியை உடல் நலம் விசாரித்தல். (அறிவிப்பவர்:
அபூஹூரைரா (ரலி) - நூல்:
முஸ்லிம்).
Friday, February 25, 2011
ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (7):
19. யார் திரும்பி வரும் வரை சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக்கொண்டு இருக்கிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? நோயாளியை நலன் விசாரித்துக்கொண்டிருப்பவர் திரும்பி வரும் வரை சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக்கொண்டு இருக்கிறார் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி) - நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ, அஹ்மத்).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக