|
1259 |
பிரான்சின்
ஒன்பதாம் லூயி இங்கிலாந்தின் மூன்றாம் ஹென்றியும் பாரிஸ் ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டனர். இதன் படி நோர்மண்டி உட்பட ஐரோப்பாவில் உள்ள பிரெஞ்சுப்
பகுதிகளுக்கு ஹென்றி உரிமை கொண்டாடுவதில்லை எனவும் ஆங்கில புரட்சியாளர்களுக்கு லூயி
ஆதரவு வழங்குவதில்லை எனவும் முடிவாகியது. |
|
|
|
1639 |
ஜெரிமையா
ஹொரொக்ஸ் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை
அவதானித்தார். |
|
|
|
|
1791 |
உலகின்
முதலாவது ஞாயிறு இதழ் தி ஒப்சேர்வரின் முதலாவது இதழ் வெளிவந்தது. |
|
|
|
|
1829 |
ஆங்கிலேய
ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் சதி முறையை ஒழிக்க ஆளுநர் வில்லியம் பெண்டிங்க்
பிரபுவால் சட்டம் நிறைவேற்றப்பட்டது. |
|
|
|
1918 |
முதலாம்
உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய
அமெரிக்க அதிபர் வூட்ரோ வில்சன் பிரான்ஸ் சென்றார். பதவியில் உள்ள அமெரிக்க அதிபர்
ஒருவர் ஐரோப்பா சென்றது இதுவே முதற் தடவையாகும். |
|
|
|
|
1943 |
இரண்டாம்
உலகப் போர்: யூகொஸ்லாவியாவின் எதிப்புத் தலைவர் மார்ஷல் டீட்டோ "ஜனநாயக யூகொஸ்லாவிய
அரசாங்கம்" ஒன்றை தற்காலிகமாக அமைத்தார். |
|
|
|
|
1945 |
ஐக்கிய
அமெரிக்கா ஐநாவில் இணைவதற்கு ஒப்புதல் அளித்து செனட் அவை
வாக்களித்தது. |
|
|
|
|
1952 |
லண்டனை
குளிர் மேக மூட்டம் சூழ்ந்தமையால் காற்று மாசடைந்தமையால் அடுத்தடுத்த வாரங்களில்
மட்டும் 12,000 பேர் கொல்லப்பட்டனர். |
|
|
|
|
1957 |
ஐக்கிய
இராச்சியத்தில் லூவிஷாம் என்னுமிடத்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 92 பேர்
கொல்லப்பட்டனர். |
|
|
|
1958 |
பிரெஞ்சு
அதிகாரத்தின் கீழ் டொஹெமி சுயாட்சி உரிமை பெற்றது. |
|
|
|
|
1959 |
ஐக்கிய
அமெரிக்காவின் மேர்க்குரித் திட்டத்தின் கீழ் சாம் என்ற குரங்கு 55 மைல்கள் உயரம்
கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாகப் பூமி திரும்பியது. |
|
|
|
|
1967 |
வியட்நாம்
போர்: ஐக்கிய அமெரிக்கா, மற்றும் தெற்கு வியட்நாம் படைகள் மேக்கொங் டெல்ட்டா
பகுதியில் வியட் கொங் படைகளுடன் மோதனிஅர். |
|
|
|
|
1971 |
இந்தியாவுக்கும்
பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்ட கொந்தளிப்பான நிலைமையை ஆராய ஐநா பாதுகாப்பு அவை
அவசரமாகக் கூடியது. |
|
|
|
|
1971 |
பாகிஸ்தானின்
கடற்படையினரையும் கராச்சி நகரையும் இந்தியக் கடற்படையினர்
தாக்கினர். |
|
|
|
|
1976 |
ஆச்சே
விடுதலை இயக்கம் அமைக்கப்பட்டது. |
|
|
|
1977 |
மலேசியாவின்
விமானம் ஒன்று கடத்தப்பட்டு ஜோகோர் என்ற இடத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில்
100 பேர் கொல்லப்பட்டனர். |
|
|
|
1984 |
குவைத்
விமானம் ஒன்றை ஹெஸ்புல்லா அமைப்பினர் கடத்தியதில் நான்கு பயணிகள்
கொல்லப்பட்டனர். |
|
|
|
|
1991 |
டெரி
அண்டர்சன் என்ற அமெரிக்க ஊடகவியலாளர் கடத்தப்பட்டு 7 ஆண்டுகளின் பின்னர்
பெய்ரூட்டில் விடுவிக்கப்பட்டார். |
|
|
|
|
1991 |
ஐக்கிய
அமெரிக்காவின் பான் ஆம் விமான சேவை தனது சேவைகளை நிறுத்திக்
கொண்டது. |
|
|
|
|
1992 |
ஐக்கிய
அமெரிக்கா சோமாலியாவுக்கு 28,000 அமெரிக்கப் படைவீரர்களை
அனுப்பியது. |
|
|
|
2005 |
ஹொங்கொங்கில்
பல்லாயிரக்கணக்கானோர் ஜனநாயகம் வேண்டி ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர். |
|
|
|
|
2006 |
பிரான்ஸ்
தொண்டு நிறுவனத்தின் பதினேழு தமிழ் ஊழியர்கள் இலங்கை, கிழக்கு மாகாணத்தின் மூதூரில்
படுகொலை செய்யப்பட்டனர். |
|
|
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக