ஏனைய இணைப்புகள்<><> இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது.

சனி, 16 பிப்ரவரி, 2013

திமிர் பிடித்த காஜலை அறிமுகப்படுத்தியதற்காக வெட்கப்படுகிறேன்: பாரதிராஜா



திமிர் பிடித்த காஜலை அறிமுகப்படுத்தியதற்காக வெட்கப்படுகிறேன்: பாரதிராஜா
14th February 2013 9.46AM
காஜல் அகர்வால் திமிர் பிடித்தவர். அவரை அறிமுகப்படுத்தியதற்காக வெட்கப்படுகிறேன் என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.



 

நடிகை காஜல் அகர்வால் அண்மையில் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, தமிழகத்தில் நடிகைகளை மதிப்புது கிடையாது. அங்கு நடிகர்களுக்குத் தான் மதிப்பு. தெலுங்கில் தான் நடிகைகளை மதிக்கின்றனர் என்று கூறியிருந்தார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன் பிறகு நான் அவ்வாறு கூறவே இல்லை, பத்திரிக்கை தான் தவறாக எழுதிவிட்டது என்றார் காஜல். 

இந்நிலையில் அவரை தமிழில் பொம்மலாட்டம் மூலம் அறிமுகப்படுத்திய இயக்குனர் பாரதிராஜா கூறுகையில்,

அந்த பொண்ணு ரொம்பவும் திமிர் பிடித்தவர். அவர் யாரையும் மதிக்காதவர். அவரை அறிமுகப்படுத்தியதற்காக நான் வெட்கப்படுகிறேன் என்றார். 

இது குறித்து அறிந்த காஜல் பாரதிராஜாவை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் பாரதிராஜா தரப்பு பதில் அளிக்காததால் கவலையில் உள்ளாராம் காஜல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக