ஏனைய இணைப்புகள்<><> இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது.

சனி, 6 அக்டோபர், 2012

அவளின் காதல் பயணம்


அவளின் காதல் பயணம்



      ----காதல் எச்சரிக்கை-6-----

அறுபது வயதான
மனைவியை இழந்த
ஒரு வயோதிகருக்கு
வீட்டு வேலை செய்ய
அந்த ஊருக்கு
வந்தவள்தான் அவள்.

அந்த காமுக கிழவரின்
சின்னத்தனமான சில்மிஷம்
பதினைந்து வயதே ஆன 
அவள் உடலை
பாழ் படுத்தியது
அவள் உள்ளத்தை
காயப் படுத்தியது  

காணும் காளையர்கள் மீது
காதல் பார்வை பார்த்தாள்

எல்லோரிடமும் சிரிப்பாள்
எல்லோரிடமும் பழகுவாள்
எந்த வித வேறுபாடுமின்றி
எல்லோருக்கும் இடம் கொடுத்தாள்
இதயத்தில் மட்டுமின்றி இருட்டிலும்  

யாராவது ஒருவரிடம்
உண்மையான காதல்
உள்ளதா என்று தேடினாளோ?

அகப்பட்டவர்களில்
ஒருவனை மணந்தாள்
ஆறு மாதம்தான்
அவனுடன் வாழ்ந்தாள்

அன்று ஊரில் ஒரு விசேசம்
தெருவில் திரை கட்டி
அங்கே திரையிட்டார்கள்
அந்த ஏழு நாட்கள் படம்
வந்த காலகட்டம் அது.
அடுத்த நாளே
அவள் முடிவு செய்தாள்
உண்மையான காதல்
தன் புருஷனிடம் இல்லை என்று
இன்னொருவனை கட்டிக்கொண்டாள்

இவன்தான் தன் முதல் காதலன்
உண்மையான காதலன் என்று

அத்துடன் முடியவில்லை
அவள் காதல் பயணம்....

இன்று அவளுக்கு
அய்ந்து குழந்தைகள்
அவளுக்கும் தெரியாது
எந்தக் குழந்தைக்கு
எவர் தந்தை என்று?

இன்று வரை தொடர்கிறது
இனிதே அவள் காதல் பயணம்
இருமிக்கொண்டு
மெலிந்துப்போன தேகத்துடன்...

ஆனால்
அவளுக்கும் தெரியாது
அந்த கிராமத்தில்
எவருக்கும் தெரியாது

எய்ட்ஸ் என்று ஓன்று உண்டு
உயிரை எடுக்கும் நோய் என்று. 

அவளின் காதல் பயணம் 
எய்ட்ஸ் வரை போனது. 
இதுதான் காதல் என்றால்....

காதல் எச்சரிக்கை!
பாலியல் காதல்
வாழ்வை
பாழடித்து விடும்

காதல் எச்சரிக்கை!
காதலர்களே!
பாலியல்
காதல் ஜாக்கிரதை! 

                              (தொடரும்)

திருடினால் தப்பில்லை!



வம்பு தும்பு இல்லாமல்
வாழ்க்கையில் வளர
அன்னையிடமிருந்து
அன்பைத் திருடு!  

தலை நிமிர்ந்து
தரணியில் வாழ
தந்தையிடமிருந்து  
தன்னம்பிக்கையைத் திருடு!   

போற்றல் மிகுந்த
ஆற்றல் புரிந்திட   
ஆசானிடமிருந்து
அறிவைத் திருடு!

நானிலம் போற்றும்
நல்லவனாய் வாழ்ந்திட  
நண்பனிடமிருந்து
நற்பண்பைத் திருடு!

ஆரோக்கியத்துடன்
அமைதியாய் வாழ்ந்திட
இயற்கையிடமிருந்து
இனிக்கும் அழகைத் திருடு!

உயர்ந்தவர் வரிசையில்
உன்னதமாய் வாழ்ந்திட
உலகத்தில் உள்ள
உண்மைகளைத் திருடு!
 
யோவ்..பரிதி!                                       
திருடாதேனுதான்
எல்லோரும் சொல்லுவாங்க
இது என்ன புதுசா இருக்கு?
இப்ப திருடுரவங்களுக்கு சொல்லு!
     


மக்களின் மனதைத் திருடினால்  
மாபெரும் தலைவனாகலாம்
மக்களின் உரிமையை திருடினால்
மண்ணோடு மண்ணாகப் போகலாம் 

*************************************
   

அடிமையாய் இரு!



பிறக்க வைத்த
அன்னையின்
அன்புக்கு
அடிமையாய் இரு!

வாழ்வு கொடுத்த
தந்தைக்கு 
வாழும் நாளெல்லாம்
அடிமையாய் இரு!

அறியாமை
அகற்றி வைத்த
ஆசிரியருக்கு
அடிமையாய் இரு!



துடிக்கும் போது
துயர் துடைத்த
நட்புக்கு
அடிமையாய் இரு!

பெண்மையின்
உண்மையான
காதலுக்கு
அடிமையாய் இரு!

அமைதி தரும்
மரங்களுக்கு
உதவிடும்
அடிமையாய் இரு!

கவிதை பாடும்
காற்றுக்கு
களங்கம் செய்யாத
அடிமையாய் இரு!

தாகம் தீர்க்கும்
தண்ணீருக்கு
அசுத்தம் செய்யாத
அடிமையாய் இரு!

பசி தீர்க்கும்
நிலங்களுக்கு
பாதுகாக்கும்
அடிமையாய் இரு!
 

எங்கும் தமிழ்! பொங்கும் தமிழ்!




வீறு கொண்டு வாழ்ந்த இனம் தமிழரடா!-இன்று
வீதியிலே வேதனையில் அலையுதடா!
சீர் கொண்டு வாழ்ந்த இனம் தமிழரடா -இன்று
செங்குருதி சிந்தித்தான் அலையுதடா!

விதியென்று வாழ்வுதான் முடிந்திடுமோ?-செய்த
சதியிங்கு நெஞ்சை விட்டு மறைந்திடுமோ?
விதியொன்று செய்திடவே எழுந்தோமடா!-நல்
வழியொன்று கண்டிடவே வந்தோமடா!

நெருப்பிலிருந்தும் ஒரு பறவை பிறக்குமடா!-அதை
நினைக்கும்போது எமக்கு ஏது மரணமடா!
விலைபோகும் வீனர் வெற்றுக் கூட்டமடா!-அதை
களையெடுக்கும் நாம் வெற்றிக் கூட்டமடா!

விளை நிலங்கள் வறண்டு போகும் தாகமடா!-அது
பாலை நிலம் ஆகுமுன்னே தீருங்கடா!
சுரண்டித்தான் வாழ்ந்தது இங்கே போதுமடா!-இனி
சுரண்டத்தான் நாட்டில் ஏதும் இல்லையடா!

கரண்டுக்குத்தான் வழிகள் பல உள்ளதடா!-இனி
பிராண்டித்தான் உயிர்களை வதைக்கனுமாடா!  
கொலை களம் ஆகிடுமோ தமிழ்நாடடா!- அனு
உலை களம் இங்குதான் தேவையாடா?  







                       Thanks-YouTube-Uploaded by poovanthan



கிடந்தாள் வாடி காவேரி!



அன்று-
கோபம் கொண்ட அகத்தியர்
தன் கமண்டலத்தில்
அடைத்தாராம் காவேரியை...?
அது புராணகாலக் கதை  

இன்று
மோசம் செய்யும் கர்நாடகா
அணைகட்டி வைத்து
அடைக்கின்றார் காவேரியை.
இது இந்தகாலக் கதை

அண்டங்காக்கை உருவத்தில்
அன்று வந்த விநாயகர்
விடுதலை கொடுத்தார் காவேரிக்கு!

எவர் வருவாரோ இன்று?
உச்ச நீதிமன்றம் வந்து
உயிர் கொடுக்குமா தமிழருக்கு?  

அகத்தியர் என்றொரு திரைப்படத்தில்
சீர்காழியார் பாடுவார்
நடந்தாய் வாழி காவேரி! என்று
அது என்னவோ
என்காதில் விழுந்தது இப்படி.....    

கிடந்தாள் வாடி காவேரி!-சிறைபட்டு  
கிடந்தாள் வாடி காவேரி!
நாடெங்குமே செழிக்க-கன்னடர்
நன்மையெல்லாம் சிறக்க   
கிடந்தாள் வாடி காவேரி!-சிறைபட்டு
கிடந்தாள் வாடி காவேரி!

அடர்ந்த மலைத்தொடரில் அவதரித்தாள்
சிறு மனம் படைத்தோரிடம் அடங்கிவிட்டாள்
அழகு தமிழ் நிலத்துக்கு வர மறுத்தாள்-தமிழ்
நிலமெல்லாம் வறண்டு போகவைத்தாள்

அசைந்து வளைந்து நெளிந்து வரமுடியாமல்
அடைந்து கிடந்தாள் காவேரி!-சிறைபட்டு
கிடந்தாள் வாடி காவேரி!

உணவளிக்கும் உழவருக்கெல்லாம் கண்ணாக-பண்பு  
உயர்ந்த தமிழ் நாட்டு செல்லப்பென்னாக
புலவரெல்லாம் பாராட்டும் பொன்னாக-அன்று  
பொங்கிவந்த காவேரி கனவானதே!  

கிடந்தாள் வாடி காவேரி!-சிறைபட்டு  
கிடந்தாள் வாடி காவேரி!

                     Thanks-YouTube-Uploaded by sirkalis
 
 

காதல் கொலைகள்;




அதிகரித்து  வரும் காதல் கொலைகள்-
காதலிக்க மறுக்கும் பெண்களை கொலை செய்வது,திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்துவது இல்லையெனில் தீர்த்துக் கட்டுவது இது போன்ற பெண்களுக்கு எதிரான கொடூரச் செயல்கள் இந்தியா முழுதும் அதிகரித்து வருகிறது. தமிழகமும் அதற்கு விதிவிலக்கல்ல...............செய்தி



இதற்க்கு என்னதான் தீர்வு?
காதலிக்க கூடாது என்று
தடைசட்டமா போடமுடியும்?

காதல் ஒரு நோயாக
இளம் நெஞ்சங்களில்
பற்றி எரிகிறது.
அவர்களையே எரிக்கிறது

அன்று இளைஞர்களுக்கு 
அது ஒரு சோதனைக்காலம்
முப்பது வயது வரை
வேலையில்லாத் திண்டாட்டம்
வயிற்றுப் பசி தீர்ப்பதற்கே
காதல் வாழ்க்கை 
ஒரு கண்ணாமூச்சி ஆட்டம்                  
மலர்களை தேடி அலைந்து
காதல் செய்வது  வேதனை வண்டாட்டம் 

இன்று காலம் மாறிவிட்டது
அரும்பு மீசை முளைப்பதர்க்குள்
அரும்பிவிடுகிறது காதல்
பருவ வயது வருவதற்குள்
பருகிட துடிக்குது காதல்

இதுதான் காதல் என்பதா?

இந்த எரியும் காதல் தீயில்
எண்ணை ஊற்றுபவர்கள்
ஏராளம் ஏராளம் இங்கே
இணையதளங்கள்
தொலைகாட்சிகள்
திரைப்படங்கள்
காதல் கவிஞர்கள் 
இப்போது முகநூலும்
முதலிடம் பிடிக்கிறது

முதலில் காதல்
நேசமாக இருக்கிறது
பிறகு அது
வேசமாக மாறுகிறது
கடைசியில் அது
விஷமாகி விடுகிறது 
***********************************

உன் பதிவு 
காதலே! நீ ஒரு வெங்காயம் 
துண்டு பிரசுரமாகப்போட்டு 
காதலர்களிடம் கொடுப்பா! 


*******************************************



                    Thanks-YouTube-musixtube1


 

சிங்கள நாட்டு அசைவ சமையல்




கிறுக்கி வைத்த காகிதத்தை
பதிப்பகத்தாரிடம் கொடுத்தேன்

சமையல் புத்தகம் எழுதிப்பார்
சக்கைப்போடு போடும் என்றார்

சாம்பார் செய்வது எப்படி?

படித்துப்பார்த்த பதிப்பகத்தார்
உப்பு உறைப்பு இல்லையே
அசைவ சமையலுக்குத்தான்  
அடிபிடி கிராக்கி
செட்டி நாட்டு சமயலுக்கோ
செம கிராக்கி

அடுத்த நாளே
எழுதிக்கொடுத்தேன்

சிங்கள நாட்டு அசைவ சமையல்
செய்வது எப்படி?

படித்த பதிப்பகத்தார்
பேந்த பேந்த விழித்தார்

செஞ்சிக்கு வந்த சிங்கள நாட்டு
தலைமை சமையல்காரர்
சொன்னதைத்தான் எழுதிவைத்தேன்
   
அப்பாவி ஈழத் தமிழர்களை
அப்படியே வறுத்து தின்றாரே

கொத்து கொத்தாக
கொத்துக்கறிப் போட்டாரே   
அது எப்படி? என்பதைத்தான்
தொலைக்காட்சியில்
அவர் சொன்னதைத்தான் 
அப்படியே எழுதி கொடுத்தேன்

சிங்கள நாட்டு அசைவச் சமையல்
செய்வது எப்படி? என்று. 


                        Thanks-YouTube-Uploaded by tamillion1

(இப்பதிவு சில தளங்களில் சமையல் பகுதிகளில் இடம் பெற்றுள்ளது
அது என் தவறல்ல ஆயினும் வருந்துகிறேன்)  


தந்தை மகற்காற்றிய உதவிகள்.....



தந்தை
மகற்காற்றிய
உதவிகள்.....  

-சுயமரியாதை உணர்வோடு
-பகுத்தறிவு நெஞ்சில் கொண்டு
-உயர்வு தாழ்வு சாதி மறுத்து
-உயர்ந்தோரென ஆணவத்தோடு
உலவுவிடுவோரை எதிர்த்து  
-மூடநம்பிக்கை ஒழித்து
-சமத்துவத்தோடு
சமூக முன்னேற்றம் காண
-பெண்ணுரிமை பேணி

-நாத்தீகம் வழியில்    
                 
தமிழ் தேசியம் காத்து
-இட ஒதுக்கீடு வேண்டி
-அதிகார பகிர்வு கொண்டு
-அனைவருக்கும் இலவச கல்வியுடன்  
-எழுத்து சீரமைப்பு செய்து
தமிழ் வளர்ச்சி காண்பதற்கே

தள்ளாத வயதிலும்
தளராது வாழ்ந்து
எல்லோரும் வாழ்ந்திட
ஏற்றம் தந்த தந்தையே!    

இவை எம்மை
அவையத்து
முந்தி இருக்க
செய்ததாலே....

மகன்
தந்தைக்காற்றும் உதவியாக
தந்தையே! உம் பாதங்களில்
இவ்வலைப்பூ!
                  Thanks-YouTube-Uploaded by on Nov 29, 2010

பரமபதம்



உயரப்போக
இத்தனைப் படிகளா?
இதில்
ஏறிப்போக
இந்த ஆயுள் போதுமா?

                                                                                  
கீழே விழ மட்டும்
ஒரு நொடிதானா?

வாழ்க்கை இங்கே
பரமபத விளையாட்டு

நம்பிக்கை மட்டுமே தரும்
நாளும் வெற்றி விளையாட்டு

ஆனால் 

தன்னம்பிக்கை 
இல்லாதவனுக்கு  
வாழ்க்கை-

அற்ப விளையாட்டு

ஏறிப்போகும் படிகள்
உயரத்துக்கு அல்ல
படு பாதாளத்துக்கு. 

 Thanks-YouTube-Uploaded by  

 எல்லாரும் ஒருவிதத்தில் நிலாவைப் போன்றவர்கள். தங்கள் இருண்ட பக்கத்தை யாருக்கும் காட்டாமல் வைத்திருக்கிறார்கள்


 

 வெள்ளை முகத்தை  
காட்டினால்தான்.....







கரி அள்ளிப் பூசி.......... பூசி                                                                                                            
கருப்பாக்கிவிடுகிறார்கள்
சிரித்தால்தான்  
அழவைக்கிறார்களே!






ஐ-
தமிழ் எழுத்துகளில்
இது போலி எழுத்து
ஐயம்
அய்யம் ஆகும்போது
ஐ-போலிதானே?

இப்படித்தான்
இருக்கிறார்கள்
ஐ-தலைவர்கள்

அய்-தலைவர்களோ?
ஆய் தலைவர்களோ?

நிலையில்லாதவர்கள்
எப்படிவேண்டுமானாலும்
மாறுபவர்கள்

கூட்டம் கூட்டமாக
கூட்டிவைத்து
அப்பாவி மக்களை
அச்சப்படுத்தி
அலைக்கழித்து
தலைமறைவாகும்
தரித்திரத் தலைவர்கள்

அஹிம்சை வழியில்
அறப்போராட்டம் என்று
அண்ணல் காந்தியின்
அறப்போராட்டத்தை
அசிங்கப்படுத்துபவர்கள்

தொடர் உண்ணாவிரதம்
அது என்ன
தொடர் உண்ணாவிரதம்?
பசிக்கும் போது உண்டு விட்டு
பந்தலில் வந்து படுத்துக் கொள்வதா?    

இன்னும் இருக்கின்றன
ஐ-ஊடகங்கள்
காலையில் ஓன்று
எழுதுவார்கள் பேசுவார்கள்  
மாலையில் ஓன்று
எழுதுவார்கள் பேசுவார்கள்
இல்லை இவர்களிடம்
நேர்மையான நிலை
இதுதான்
நாட்டின் அவல நிலை
நாட்டு முன்னேற்றத்துக்கு
தொல்லையோ தொல்லை
 
என்னப்பா டபாக்கூரா இக்கு?
சங்கரின் ஐ படத்த பத்தி                    
சொல்லுவானு பார்த்தா
ஏதோ ஐ கொய்னு பிதத்திக்கினு.....     
************************************
காணொளி-I -- Next big Tamil film



காணாமல் போன பனைமரங்கள்


எங்க ஊரில் அன்று
காணுமிடமெல்லாம்  
பனை மரங்கள் நிற்கும்
அவை பனை மரங்கள் அல்ல
பணம் காய்க்கும் பண மரங்கள்  
கருப்பட்டி செய்வதே
தொழிலாக இருந்ததால்
வீட்டுக்கு இரண்டு
கருப்பட்டி பரண்கள் இருக்கும்

புது கருப்பட்டிகளை
பரண்களில் அடுக்கிவைத்து
புகையிட்டு பதப்படுத்திய  
பழங்கருப்பட்டிக்கு
விலை அதிகம் சுவை அதிகம்

பனை மரங்கள்
நினைவு தெரிந்த
காலம் தொட்டு
நின்று கொண்டிருக்கும்
என் நினைவில்ல
என் தாத்தா நினைவு

யார் விதைத்தது?
நெடுமரமாய் வளர்ந்து நிற்க
யார் நீர்வார்த்தது? 
யாருக்கும் தெறியாது.

ஆணி வேர் இல்லை
அய்ம்பது அடிக்கு மேல்
அண்ணாந்து பார்க்கும் உயரம்
அழகாய் வளர்ந்து நிற்கும்  

நீர் பாய்க்க வேண்டாம்
களை எடுக்க வேண்டாம்
மருந்து அடிக்க வேண்டாம்
செலவு செய்யாமல்
வரவு தரும் பனை மரங்கள்

வருடத்துக்கு மூன்று மாதங்கள்
வந்து சேர்வார்கள்
பனை ஏறும் தொழிலாளிகள்

இடுப்பில் அருவாப் பெட்டி
அதனுள் கூர் அருவாள்கள்
பாளை இடுக்கும் கடுப்புகள்
தோளில் மூட்டுக்கட்டை
அதிகாலையிலேயே ஆரம்பம்
பதநீர் இறக்கும் லாவண்யம்

ஏறுவதும் இறங்குவதும்
தொழிலும் வாழ்க்கையும்
இரண்டும் ஒன்றுதான் இவர்களுக்கு

சிலநேரங்களில்
கை தவறி விழுந்தால்
முதுகெலும்பு முறிந்துவிடும்
சிலரின் வாழ்வும் முடிந்துவிடும்

ஆபத்தான தொழில்
அதனால்தான் என்னவோ
அடுத்த தலைமுறையில்
அப்படியே அழிந்து போனது
அறிவை புகட்டி
அழித்து வைத்தது
கர்ம வீரரின் கல்வித்தொண்டு
கற்ற தலைமுறை
கடும் தொழிலை கைவிட்டது  

நெடு நெடுவேனே நின்ற
பனை மரங்களை காணவில்லை
பனை மரங்கள் இன்று
தென்னை மரங்களாக...

தென்னை மரங்களோ
வளர்ந்தும் வளராமலும்
காய்த்தும் காயக்காமலும் 
உப்பு தண்ணீர் பாசனத்தில்
தலையை சொரிந்து கொண்டு....
*********************************
காணொளி-PALMYRA TREE

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக