படரும் செடி (கொடி) ஒன்றை பார்க்கலாம். தோட்டம் அமைக்கும் போது கிச்சன்
கழிவு நீர் போக அமைத்த choke pit மீது செடி ஏதும் வைக்க முடியாது. கீழே வெறும் பாறை தான் இருக்கும். அந்த
இடத்தை படரும் செடிகள் (புடலை, அவரை, பாவற்காய்) வளர்ப்பதற்கு எதுவாக பந்தல்
அமைத்து விட்டேன்
.
இரண்டு சிமெண்ட் தூண்கள், சுவற்று பக்கத்தில் கான்க்ரீட் போட்டு இரண்டு
அலுமினியம் கம்பி தூண்கள், சில மூங்கில் கம்புகள், பந்தல் ரெடி.
இது குட்டையான புடலை ஜாதி. விதை இங்கே கோவை விவசாய பண்ணையில் வாங்கியது.
ஒரு காய் 300 முதல் 500 கிராம்
வரை இருக்கிறது. பொதுவாக ஒரு செடி என்று விடாமல், மூன்று நான்கு செடிகள் விட்டால் நிறைய
காய்கள் கிடைக்கும். போன குளிர் காலத்தில் சுத்தமாக தாக்குப்பிடிக்க முடியாமல்,
நான்கு காய்கள் காய்த்து விட்டு கருகி விட்டது. ஆனால் இப்போது சம்மரில் கலக்கலாக காய்த்துக் கொண்டிருக்கிறது.
வாரத்திற்கு இரண்டு காய்கள் தாராளமாக பறிக்க முடிகிறது.
எடுத்த சில படங்கள்
கீழே,
/thooddam thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக