அரிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும்
காண்பி
Monday, December 12, 2011
கப பித்த தோல் நோய்களில் சிறந்த மருந்து -நால்பாமராதி தைலம்-Nalpamaradhi thailam
கப பித்த தோல் நோய்களில் சிறந்த மருந்து -நால்பாமராதி தைலம்-Nalpamaradhi thailam
(ref-ஸஹஸ்ரயோகம் - தைலப்ரகரணம்)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1. மஞ்சள் – ஹரீத்ரா 260 கிராம்
2. பர்ப்பாடகம் – பர்பாடக 260 “
3. தண்ணீர் – ஜல 8.320 லிட்டர்
இவைகளைக் கொதிக்க வைத்து 2.080 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி அத்துடன்
1. நல்லெண்ணெய் – திலதைல 260 கிராம்
2. தேங்காய் எண்ணெய் – நாரிகேள தைல 260 “
ஆகியவைகளைச் சேர்த்து
1. ஆலம்பட்டை – வாதத்வக்
10 கிராம்
2. அரசம்பட்டை – அஸ்வத்தாத்வக்
10 “
3. அத்திப்பட்டை – உதும்பரத்வக்
10 “
4. இத்திப்பட்டை – ப்ளக்ஷத்வக்
10 “
5. கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக்
10 “
6. தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக் 10 “
7. நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக்
10 “
8. சந்தனம் – சந்தன
10 “
9. விளாமிச்சம் வேர் – உசீர
10 “
10. கோஷ்டம் – கோஷ்ட
10 “
11. மஞ்சட்டி – மஞ்ஜிஷ்டா
10 “
12. கிச்சிலிக்கிழங்கு – ஸட்டீ
10 “
13. அகில்கட்டை – அகரு
10 “
இவைகளை அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சிக் கரபாகத்தில் இறக்கி
வடிக்கட்டவும்.
குறிப்பு:
½ பங்கு சரக்குடன் 16 பங்கு தண்ணீர் சேர்த்து 4 பங்காகக் குறுக்கி வடிக்கட்டிய கஷாயத்துடன் தேங்காய் எண்ணெய்,
நல்லெண்ணெய் வகைக்கு 4 பங்கும், கல்க சாமான்கள் வகைக்கு 40ல் ஒரு பங்கும் சேர்த்துத் தயாரிப்பதும் உண்டு.
பச்சை மஞ்சள், பசும் பர்ப்பாடகம் இவற்றின் சாறு பிழிந்து தயாரிப்பதும்
உத்தமம்.
பயன்படுத்தும் முறை:
மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு
மட்டும்.
தீரும் நோய்கள்:
சொறி (கண்டூ), சிரங்கு (பாமா), அக்கி (விஸர்ப்ப), படை (விஸர்ச்சிகா), சிறு தோல் நோய்கள் (ஸூத்ர குஷ்டம்) போன்ற பலவித தோல் நோய்கள்
(த்வக்ரோக).
தெரிந்து கொள்ள வேண்டியவை
- தோல் நோய்களில் இந்த மருந்து நன்றாக வேலை செய்கிறது
- ஆலமரம்,அரசமரம்-போன்ற அற்புத மூலிகைகள் அடங்கிய இந்த துவர்ப்பு சுவை அதிகமுள்ள மருத்துகள் அடங்கிய இந்த மருந்து -தோல் நோய்களில் முக்கியமாக கப பித்த தோல் நோய்களில் நல்ல பலன் தரும் ..
- கரப்பானுக்கு இந்த மருந்து சிறந்த மருந்து
Post Comment
Sunday, December 04, 2011
சொறி சிரங்குக்கு நல்ல கந்தகத் தைலம்
சொறி சிரங்குக்கு நல்ல கந்தகத்
தைலம்
தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1. மிளகு – மரீச்ச
150
கிராம்
2. மஞ்சள் – ஹரீத்ரா
50 “
இவைகளை நன்கு பொடித்து 6.000 கிலோ கிராம் தேங்காய்
எண்ணெய்யில் கலந்து அத்துடன் சுத்தி செய்யாத கந்தகம் (கந்தகம்) 300 கிராம் சேர்த்துக் காய்ச்சிக்
கரபாகத்தில் இறக்கி வடிக்கட்டவும்.
பாகத்தை நிர்ணயிப்பது சிறிது
சிரமமாகையால் இதில் சற்று அதிகக் கவனம் செலுத்த வேண்டும். மூன்று அல்லது நான்கு
நாட்கள் லேசாகச் சூடுசெய்து கந்தகம் உருகி எண்ணெய்யுடன் ஒன்றுபடக்கலந்து
கருஞ்சிவப்பான நிறம் வரும்போது இறக்கி வடிக்கட்டவும்.
குறிப்பு: மிளகு,
மஞ்சள் இவைகளைச் சிறிது தண்ணீர் விட்டு அரைத்துச் சேர்த்துக் காய்ச்சுவதும்
உண்டு
பயன்படுத்தும் முறை:
வெளி உபயோகத்திற்கு மட்டும்.
தீரும் நோய்கள்:
சொறி (கண்டு), சிறங்கு (பாமா), படை (விஸர்ச்சிகா) மற்றும் வாதம், கபம் சம்பந்தமான தோல் நோய்கள்
(வாத, கபஜ
குஷ்ட).
தெரிந்து கொள்ள வேண்டியவை
- நாள்பட்ட தோல் நோய்க்கு சிறந்தது
- சொறி -சிரங்குக்கு நல்லது
Post Comment
Saturday, December 03, 2011
தோல் நோய் தீர -எரிச்சல் மாறிட -தூர்வாதி தைலம்
தோல் நோய் தீர -எரிச்சல் மாறிட -தூர்வாதி தைலம்
தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1. அருகம்புல்சாறு – தூர்வா ஸ்வரஸ
3.200 கிலோ கிராம்
2. தேங்காய் எண்ணெய் – நாரிகேள தைல 0.800 “
3. தண்ணீர் – ஜல
3.200 லிட்டர்
இவைகளை ஒன்றாகக் கலந்து அத்துடன் அதிமதுரம் (யஷ்டீ) 50 கிராம் அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சிக் கரபாகத்தில் இறக்கி
வடிகட்டவும்.
பயன்படுத்தும் முறை:
வெளி உபயோகத்திற்கு மட்டும்.
தீரும் நோய்கள்:
உடலெரிச்சல் (தாஹ), சொறி (கண்டு), சிரங்கு (பாமா), பித்தம் (பித்தாதிக்ய) சீர்கேடடைந்த தோல் நோய்கள். புண்களை வெகு விரைவில்
ஆற்றி அந்தப் பகுதிகளில் திசுக்கள் தோன்றி விரைந்து வளர்வதை
ஊக்குவிக்கிறது.
தெரிந்து கொள்ள வேண்டியவை
- அருகம் தைலம் என்றும் இதை அழைக்கலாம்
- தோல் நோய்களை ,அரிப்பை சரி செய்கிறது
- தோலில் வயதாவதால் ஏற்படும் சுருக்கம் வராமல் இருக்க -இந்த தைலத்தை தேய்த்து குளிக்கலாம்
- சித்த மருந்துகளில் மத்தன் தைலத்தோடு சேர்த்து போட ஆறாபுண்ணும் ஆறும்
Post Comment
Friday, December 02, 2011
தோல் நோய்களை சரி செய்யும் -தினேசவல்யாதி தைலம்
தோல் நோய்களை சரி செய்யும் -தினேசவல்யாதி தைலம்
(ref-ஸஹஸ்ரயோகம் - தைலப்ரகரணம்)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1. சுருள்பட்டை – தினேசவல்லீ
100 கிராம்
2. மஞ்சள் – ஹரீத்ரா
100 “
3. எருக்கன்வேர் – அர்க்கமூல
100 “
4. சரக்கொன்னைப்பட்டை – ஆரக்வதத்வக் 100 “
5. ஆலம்பட்டை – வாதத்வக்
100 “
6. அரசம்பட்டை – அஸ்வத்தாத்வக்
100 “
7. அத்திப்பட்டை – உதும்பரத்வக்
100 “
8. இத்திப்பட்டை – ப்லக்க்ஷத்வக்
100 “
9. தண்ணீர் – ஜல
12.800 லிட்டர்
இவைகளைக் கொதிக்க வைத்து 3.200 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி அதில் நல்லெண்ணெய் (திலாதைல)
800 கிராம் சேர்த்து அத்துடன் மேற்கூறிய கஷாய சாமான்களையே வகைக்கு
25 கிராம் வீதம் எடுத்துரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சிக்
கரபாகத்தில் இறக்கி வடிகட்டவும்.
குறிப்பு:
ஸம்பிரதாயத்தில் 400 கிராம் நல்லெண்ணெய்யும், 400 கிராம் தேங்காய் எண்ணெய்யும், கல்கத்திற்கு வகைக்கு 12.500 கிராம் வீதம் சரக்குகளும் சேர்க்கப்படுகின்றன.
பயன்படுத்தும் முறை:
வெளி உபயோகத்திற்கு மட்டும்.
தீரும் நோய்கள்:
தோல்நோய்கள் (சர்மரோக), நிறமாற்றம் (சரீர வர்ணபேத), சொறி (கண்டு), சிரங்கு (பாமா).
தெரிந்து கொள்ளவேண்டியவை
- கரப்பான் போன்ற தோல் வியாதிக்கும் மற்றும் உள்ள தோல் நோய்க்கும் சிறந்த மருந்து
- தோலில் ஏற்படக்கூடிய நிற மாற்றங்களை சரி செய்யும் குணம் உள்ளது
- உடலில் ஏற்படக்கூடிய அரிப்புகளுக்கு தேய்த்து குளிக்கும் மருந்தாக பயன்படுத்தலாம்
- பரவக்கூட்டிய சொறி சிரங்குகளை சரி செய்யும்
- மஞ்சள் ,ஆலமரம் ,அரசமரம் போன்றவைகளை உள்ளதால் -சிறந்த கிருமி நாசினியாக வெளிபிரயோகத்துக்கு பயன்படுத்தலாம்
- கப பித்த தோல் நோய்க்கு சிறந்த மருந்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக