ஏனைய இணைப்புகள்<><> இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது.

திங்கள், 12 டிசம்பர், 2011

ஸ்கிரீன் ஷாட் (Screen Shot) - எப்படி செய்வது?


ஸ்கிரீன் ஷாட் (Screen Shot) - எப்படி செய்வது?



அடிப்படையில் ஸ்கிரீன் ஷாட் என்பது படத்தைப் போன்ற ஒரு தோற்றம் ஆகும். ஷாட் எடுக்கும் அந்த தருணத்தில் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் எந்த காட்சியுடன் இருந்ததோ, அதன் படம் தான் நமக்கு ஸ்கிரீன் ஷாட். சரி, இதனை வேர்ட் டாகுமெண்ட்டில் எப்படிக் கொண்டு வருவது? வேர்ட் டாகுமெண்ட் மட்டுமல்ல, எக்ஸெல், பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் ஆகியவற்றிலும் ஒரு ஸ்கிரீன் ஷாட்டைக் கொண்டு வரலாம்.

ஸ்கிரீன் ஷாட்கள் நாம் விளக்க வேண்டிய காட்சிகளை மிக அழுத்தமாக பார்ப்பவர்கள் மனதில் பதியவைக்கும். மேலும் நம்பிக்கையும் ஊட்டும். முதலில் இவற்றை எப்படி எடுப்பது என்று பார்ப்போம். உங்கள் மானிட்டரில் தெரியும் முழுக் காட்சியையும் அப்படியே எடுக்க வேண்டுமாயின், கீ போர்டில் உள்ள பிரிண்ட் ஸ்கிரீன் கீயை அழுத்தவும். இது அம்புக் குறிகள் உள்ள கீகளுக்கு மேலாக உள்ள கீகளில் இடது மேலாக இருக்கும். சில கீ போர்டுகளில் எப்12 கீக்கு அடுத்து வலதுபுறமாக இருக்கும். அதன் மீது PrtScn/ Print Screen என்ற சொற்களைப் பார்க்கலாம். இதனை அழுத்திவிட்டு, எந்த புரோகிராமில் இந்த திரைக் காட்சியை இணைக்க வேண்டுமோ அங்கு சென்று பேஸ்ட் செய்தால் போதும். நீங்கள் மானிட்டரில் பார்த்த காட்சி, வேறு ஒரு புரோகிராமின் பைலில் ஒட்டப்பட்டுவிட்டதனைப் பார்க்கலாம்.

திரையில் பல புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருந்து, அவற்றில் ஒரு புரோகிராமினை மட்டும் நீங்கள் ஸ்கிரீன் ஷாட்டாக அமைக்க வேண்டும் என விரும்பினால், அந்த புரோகிராமில் கிளிக் செய்து ஆல்ட் + பிரிண்ட் ஸ்கிரீன் கீயை அழுத்தலாம். பின் மீண்டும் தேவைப்படும் புரோகிராம் பைலில் பேஸ்ட் செய்திடலாம்.இந்த வகையில் டாஸ்க் பார் மற்றும் தேவையற்ற பார்டர் சங்கதிகள் நீக்கப்பட்டு, விரும்பும் காட்சி மட்டும் ஸ்கிரீன் ஷாட் ஆக எடுக்கப்படும்.

வேர்ட், பிரசன்டேஷன் அல்லது எக்ஸெல் தொகுப்பு பைல்களில் ஸ்கிரீன் ஷாட்டினை பேஸ்ட் செய்கையில், அது வழக்கமாக ஒட்டப்படும் படங்கள் போலவே தான் செயல்படும். இவற்றை வேறு அளவில் மாற்றி அமைக்கலாம்; அதன் பிரைட்னெஸ் மற்றும் காண்ட்ராஸ்ட் அளவினையும் மாற்றலாம். கிளிப் ஆர்ட் மற்றும் கிராபிக்ஸ் படங்களில் நாம் ஏற்படுத்தும் அனைத்து எடிட்டிங் வசதிகளையும் இவற்றிலும் மேற்கொள்ளலாம்.

திங்கள், ௨ மே, ௨௦௧௧

ஷிப்ட்+ எப்5 (Shift + F5) என்ன நடக்கும்?

வேர்டில் நூற்றுக் கணக்கான ஷார்ட் கட் கீகள் உள்ளன. ஆனால் இவற்றில் மிக முக்கியம் என பலரும் கருதுவது ஷிப்ட் + எப்5 கீகள் இணைந்த ஷார்ட் கட் கீ தான். இதனை அழுத்துவதன் மூலம் அதற்கு முன் நாம் டாகுமெண்ட்டில் எங்கு எடிட் செய்தோமோ அந்த இடத்திற்கு கர்சர் தாவும். அடுத்ததாக பொதுவான ஒன்று. அது கண்ட்ரோல் + இஸட். இது அப்போது மேற்கொண்ட செயலை நீக்கும். இதனைத் திருப்பி திருப்பி அழுத்துவதன் மூலம் நாம் மேற்கொண்ட செயல்கள் அனைத்தும் பின் வரிசையில் நீக்கப்படும். ஏதேனும் நீக்கிய ஒன்றை மீண்டும் வேண்டும் என்றால் கண்ட்ரோல் + ஒய் அழுத்தினால் போதும்.

ஞாயிறு, ௨௪ ஏப்ரல், ௨௦௧௧

உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என கண்டறிய?

உங்களுடைய ஜிமெயில் முகவரி மற்றும் கடவுச்சொல்லை (பாஸ்வேர்ட்)உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? உங்களை அறியாமலேயே நீங்கள் தவறுதலாக வேறு எங்கேயாவது தொலைத்திருக்க வாய்ப்பு உள்ளது, தாவது வெளியில் கம்பியூட்டர் சென்டர்களில் ப்ரவுசிங் செய்யும் போதோ அல்லது உங்களுடைய நண்பர்களின் கணினியிலோ தவறுதலாக உங்களின் முகவரி மற்றும் கடவுச்சொல்லை விட்டு சென்றீர்கள் ஆனால் உங்களுடைய பயனர்பெயர் (யூசர்நேம்)  மற்றும் கடவுச்சொல்லை கொண்டு உங்களுடைய ஈ-மெயிலை தவறுதலாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது, அது போன்ற நிலையில் நீங்கள் உங்களுடைய பழைய கடவுச்சொல்லை மாற்றிக்கொள்ள வேண்டும். பின் செக்கியூரிட்டி பதிலையும் மாற்றிக்கொள்ள வேண்டும். நான் சொல்லவந்தது என்னவென்றால் உங்களுடைய ஜிமெயில் முகவரியை வேறு யாராவது பயன்படுத்தினால் அதனை எவ்வாறு தடுக்க வேண்டும் என்பதுதான், நீங்கள் முதலில் உங்களுடைய ஜிமெயில் முகவரியில் நுழைந்து கொண்டு கடைசியாக அடிபகுதியில் உள்ள Details என்பதை கிளிக் செய்யவும்.
 
 
கிளிக் செய்தவுடன் ஒரு விண்டோ தோன்றும் அதில் நீங்கள் கடைசியாக எப்போதெல்லாம் ஜிமெயில் அக்கவுண்டை ஒப்பன் செய்தீர்களோ அந்த நேரம் மற்றும் முகவரிகள் அனைத்தும் பட்டியலிடப்படும் அதில் நீங்கள் ஒப்பன் செய்யாத முகவரி இருந்தால் உடனே அதற்கு மேல் பாருங்கள் உங்கள் ஈ-மெயில் தற்போது வேறு எங்காவது ஒப்பன் செய்யப்பட்டிருக்கிறதா என்ற விவரத்தை காட்டும்.
உடனே Signout all other sessions என்பதை கிளிக் செய்து மற்ற இடத்தில் ஒப்பன் செய்யப்பட்டிருந்த உங்களுடைய ஈ-மெயிலை Signout  செய்ய முடியும். முன்பே சொன்னதுபோல உடனே உங்களுடைய கடவுச்சொல்லை மாற்றிக்கொள்ளவும்.
நன்றி : இரா.குமரேசன்
 

சனி, ௨௩ ஏப்ரல், ௨௦௧௧

WI-FI - ஒரு பார்வை!


(கம்பில்லா தொடர்ப்பு வசதி -WIRELESS )


இன்றைய காலக்கட்டத்தில் தகவல் பரிமாற்றம் மிக முக்கியமாக ஆகிவிட்டது  .இதில் WIRELESSசின் பங்கு அதிகரித்து.


WI -FI  விரிவாக்கம் WIRELESS FIDELITY என்பதாகும்.


 
NETHERLAND இல் 1991 ஆம் ஆண்டு NCR & AT என்ற இரண்டு நிறுவன மூலம்
உருவாக்கப்பட்டன
 WIRELESS FIDELITY என்பதாகும். WI –FI யின் தந்தையன அழைக்கப்பட்டவர் VIC HAYE’S ஆவார்.  இவர் IEEE 802.11b மற்றும் 802.11aஎன்பதர்க்கு கிழ் இதை ஆரம்பித்தார். WIFI என்பது WLAN(WIRELESS LOCAL AREA NETWOEK) என்பதர்க்கு உரியதாகும்.

நன்றி: மணிகண்டன்


வெள்ளி, ௨௨ ஏப்ரல், ௨௦௧௧

மடிகணினி (Laptop) - யை பாதுகாப்பது எப்படி?


  1. மடிகணினியை  பயணம் செய்யும் போது  அதிக நேரம் பயன்படுத்த கூடாது .
  2.  POWER DISCHARGE ஆனவுடன் கணினியில் இருந்து LOWBATTERY என்ற WARINGசெய்தி கிடைத்தவுடன் பின்புதான் நீங்கள் கணினிக்கு CHAGRE
        
    செய்ய வேண்டும் .
  3. ORINIGALCHARGER  ரை பயன்படுத்துவது நல்லது.     
  4. சிறு பிரச்சனை ஏற்பட்டால் நாமாகவே மடிகணினியை கலட்டி
         பார்ப்பது மிகவும் தவறு
    .
  5. கணினியில் இருந்து  வெப்பம் சரிவர வெளியேற வேண்டும் அல்லவா! அதனால் மடி கணினியை   சமம்மான இடத்தில் பயன்படுத்த வேண்டும்.
  6. அதிக நேரம் நம் மடியில் மடிகணினியை பயன்படுத்தகூடாது.(தோள் பாதிப்பு  வரலாம்).
  7. மடிகணினிக்கு ஏற்ற SAFETY பேக் தேவை.
  8. முன்று மாதத்துக்கு ஒரு முறை கணினியில் உள்ள இயங்குதளத்தை மாற்றுவது நல்லது .
  9. அடிக்கடி ஒரு மடிகணினியில் இருந்து மற்றோர் மடிகணினிக்கு  BATTERY யை மாற்றி கொள்ளாமல் இருந்தால் நல்லது. 
  10. மடி கணினி காணமல் போய்விடலாம் அதனால் மடி கணினியின் SEIRALNUMBER ரை குறித்து கொள்ள வேண்டும்.
  11. நீங்கள் மடிக்கணியை சில நாள்கள் பயன்படுத்த முடியாமல் சூழ்நிலை ஏற்பட்டால் (அதாவது வெளியூர் சென்றால்) மடிகணினியில் இருந்து BATTERY யை தனியாக கலட்டி வைக்க வேண்டும்.
நன்றி: திரு.மணிகண்டன்

வியாழன், ௨௧ ஏப்ரல், ௨௦௧௧

Recycle Bin!

நாம் ஒரு கோப்பை அழிக்கும்(delete) போது அது உடனடியாக அழியாமல் recycle bin-க்கு சென்றுவிடும். பின்பு நாம் recycle bin சென்று அந்த கோப்பை நிரந்தரமாக delete செய்வோம்.இல்லையென்றால் shift+delete அழுத்தி ஒரேயடியாக நிரந்தரமாக delete செய்வோம் .ஆனால் எப்போதும் shift+delete அழுத்தி கொண்டிருக்க எரிச்சலாக இருக்கும் delete செய்யும்போது recycle bin செல்லாமல் நிரந்தரமாக delete ஆனால் நன்றாக இருக்குமென்று தோன்றும். அதற்கும் ஒரு வழி இருகின்றது.Recycle bin-select செய்து right click பண்ணுங்கள் அதில் properties என்பதை click செய்யுங்கள்.கீழே உள்ள window தோன்றும்.

 

 
இதில் உள்ள Don’t Move Files டு recycle bin என்பதை select செய்து applyகொடுங்கள் .அவ்வளவுதான் இனி நீங்கள் delete செய்யும் போது அந்த files
recycle bin
செல்லாமல் நிரந்தரமாக delete ஆவதை காணலாம். ஆனால் தற்போது
இந்த முறையில்
deleteசெய்யும் files-ஐ மீட்டு எடுக்க தற்போது software’s வந்துவிட்டன.அவையெல்லாம் தற்போது இலவசமாக கிடைகிறது. அவற்றை recovery software’s என்போம். இப்படி பட்ட software’s-லும் மீட்டு எடுக்க முடியாத படி delete செய்வதற்கும் software’sஉள்ளன.
நன்றி: சாம்சங்
 




புதன், ௨௦ ஏப்ரல், ௨௦௧௧

0 அல்லது 1 பிட் (Bit) லிருந்து யோட்டா பைட் (Yotta Byte) YB வரை...

ஒரு தகவலை ஹார்ட்டிஸ்கில் USB -ல் அல்லது மெமரி கார்டில் சேமிக்க எடுத்துகொள்ளும் அளவை பைட்டில் (Byte) கூறுவோம்.
 
1பிட் என்பது பைனரி எண்ணில் 0 அல்லது 1 ஆக இருக்கும்.

 

1பிட்= 0அல்லது 1


 
4 பிட் = 1 நிப்பிள் (1nibble)
8 பிட் = 1 பைட் (1 Byte)
1024 பைட் = 1 கிலோ பைட் (KB) Kilo Byte
1024 கிலோபைட் = 1 மெகா பைட் (MB) Mega Byte
1024 மெகா பைட் = 1 ஜிகா பைட் (GB) Gega Byte
1024 ஜிகா பைட் = 1 டெரா பைட் (TB) Tera Byte
1024 டெரா பைட் = 1 பீட்டா பைட் (PB) Peta Byte
1024 பீட்டா பைட் = 1 எக்ஸா பைட் (EB) Exa Byte
1024 எக்ஸா பைட் = 1 ஜெட்டா பைட் (ZB) Zetta Byte
1024 ஜெட்டா பைட் = 1 யோட்டா பைட் (YB) Yotta Byte
நன்றி: திரு. ரெங்கராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக