Thursday, November 10, 2011
புற்றுநோய்க்கு மருந்தாகும் திராட்சை
கடவுளின் கனி என்று செல்லமாக அழைக்கப்படும் பெருமையுடையது கொடி முந்திரி எனப்படும் திராட்சைப்பழம். திராட்சைப் பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. ஊட்டச்சத்து நிறைந்த பழங்களுள் ஒன்றான திராட்சையில் வைட்டமின்கள் பி1, பி2, பி6, பி12 மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. இவைத் தவிர பாஸ்பரஸ், இரும்புச்சத்தும் அதிக அளவில் காணப்படுகின்றன.
கண்களை பாதுகாக்கும் முருங்கைப் பூ
பொதுவாக காய்களையும், கனிகளையும் உட்கொள்ளும் நாம் காய், கனி உருவாவதற்கு காரணமான பூக்களை உணவில் சேர்த்துக் கொள்வதில்லை. அப்படி நாம் ஒதுக்கிவிட்ட பூக்களுக்கு பல மருத்துவக் குணங்கள் உள்ளன. முருங்கைப் பூவைப் பயன்படுத்தினால் கண்கள் குளிர்ச்சி பெறும். உடல் உறுப்புகள் சீரான முறையில் வளர்ச்சியடையும். அதிகமான பித்தத்தை போக்கும்.
Wednesday, November 09, 2011
ரோஜாவின் மருத்துவ குணங்கள்
காதலை சொல்லும் மலர் ரோஜா. இந்த மலர் அன்பை சொல்லவும், அழகுக்காகவும் மட்டுமல்ல மருத்துவத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
35 மில்லியன் ஆண்டு காலமாக பூமியில் ரோஜா இருப்பதாக சான்றுகள் தெரிவிக்கின்றன. தோட்டப்பயிராக ரோஜாவை பயிரடத் தொடங்கி 5000 ஆண்டுகள் ஆகின்றன. முதன் முதலில் சீனாவில் தான் ரோஜா மலர் தோட்டப்பயிராக விளைவிக்கப்பட்டுள்ளது.
ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும் மிளகாய்
காரசாரமான உணவிற்கு முக்கிய காரணமாய் இருப்பது மிளகாய். நமது சமையலில் மிளகாய்க்கு சிறப்பான இடம் உண்டு. இது ஊசி மிளகாய், குண்டு மிளகாய், குடமிளகாய் என மூன்று வகைகளைக் கொண்டது. இவை காரத்தன்மையால் வேறுபடுகின்றன. குடமிளகாய் காரம் குறைந்தது. இத்தாவரத்தின் காய் சமையலுக்கும், கனிந்த கனிகள் மற்றும் விதைகள் நறுமணப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன.
சிறுநீரக கற்களை கரைக்கும் வெங்காயம்
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் உள்ள "அலைல் புரோப்பைல் டை சல்பைடு" என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.
1. வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள
Tuesday, November 08, 2011
ஞாபக சக்தியை அதிகரிக்கும் பட்டை
உணவில் வாசனை மற்றும் ருசிக்காக பட்டை, லவங்கம், ஏலம் உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இவற்றில் மருத்துவ பயன்களும் உள்ளது என்பதை அறியாதவர்களும் உண்டு.
உணவு எளிதில் செரிமானம் ஆவதற்கு இந்தப் பொருட்கள் பயன்படுகிறது என்று கூறுவார்கள்.
உடல் ஆரோக்கியத்தை காக்கும் அன்னாச்சி பழம்
இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளில் முக்கியமானவை பழங்கள். இவற்றில் ஒவ்வொன்றிலும் பல்வேறு சத்துக்கள் இருப்பதுடன் மருத்துவ குணங்கள் இருப்பதும் நமக்கு பல நன்மைகளை செய்கிறது.
அன்னாசியில் மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்கள் நிறைய உள்ளன. சமீபத்திய ஆய்வுகளில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. அன்னாசி பெரும்பாலும் வெப்பமான பகுதிகளில் பயிரிடப்படுகிறது.
மூட்டு வலியைக் குணப்படுத்தும் நொச்சி இலைகள்
உடலுக்கு உற்சாகத்தை தரும் கிவி பழம்
நஞ்சுக்கு மருந்தாக பயன்படும் திருநீர்ப் பச்சை
இளநீரின் மருத்துவ குணங்கள்
இளநீர் என்பது இயற்கையிலேயே உருவான உடலியல் இயக்கங்களுக்கு இன்றியமையாத பல தாது உப்புகள் அதிகமாக உள்ள ஒரு பானம்(Isotonic Drink). இளநீர் உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது. இளநீர் இயற்கை அளித்த இனிய பானம் மட்டுமன்று பல பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தாகவும் உள்ளது.
Monday, November 07, 2011
கடுக்காயின் மருத்துவ குணங்கள்
நோயற்ற வாழ்வு வாழவும், உடலினை உறுதி
செய்யவும் இயற்கை நமக்கு பல்வேறு வளங்களை வழங்கியுள்ளது. நமது உடலை வலிமையுறச்
செய்வதில் கடுக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
கடுக்காய் மரம் 4000 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இதில் செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன. கடுக்காயில் டேனின், ஆன்த்ரோ குயினான்கள், செபுலிக் அமிலம், ரெசின் மற்றும் எண்ணெய் ஆகியவை காணப்படுகின்றன. டேனின் தோல் பதனிடும் தொழிலில் பயன்படுகிறது.
கடுக்காய் மரம் 4000 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இதில் செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன. கடுக்காயில் டேனின், ஆன்த்ரோ குயினான்கள், செபுலிக் அமிலம், ரெசின் மற்றும் எண்ணெய் ஆகியவை காணப்படுகின்றன. டேனின் தோல் பதனிடும் தொழிலில் பயன்படுகிறது.
கொய்யாக் கனியின் மருத்துவ குணங்கள்
கொய்யாக் கனியின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கொய்யா வீட்டுத் தோட்டங்களிலும், வயல் வரப்புகளிலும் வளர்க்கப்படும் மரவகையாகும். இது இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது. இதற்கு ஜாம்பலா, கோவா, பலாம்பர் என்ற பெயர்களும் உண்டு. கொய்யாக்கனி அதிக மருத்துவக் குணம் கொண்டது. கொய்யா முக்கனியான மா, பலா, வாழை இவற்றிற்கு இணையாக வர்ணிக்கப்படும் பழமாகும்.
முள்ளங்கியின் மருத்துவ குணங்கள்
நாம் உண்ணும் உணவே சில சமயம் மருந்தாக செயல்படுகிறது. காய் வகைகளில் ஒன்றான முள்ளங்கியில் பல்வேறு பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. கோடை காலத்தில் உடலுக்கு உஷ்ணம் அதிகம் அதிகம் ஏற்படாமல் பாதுகாப்பதில் முள்ளங்கிக்கு முக்கிய பங்குண்டு.
உடல் எடையை குறைக்க உதவும் கரும்பு
நினைவுத் திறனை அதிகரிக்கும் மிளகு
பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது பழமொழி. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது.
மிளகானது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம், இரும்பு, பொஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் காணப்படுகின்றன. இவை அனைத்தும் நரம்புத் தளர்ச்சி, நரம்புக் கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது.
கற்றாழையின் மருத்துவ குணங்கள்
கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்து தன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது.
கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில் பல மருத்துவக் குணங்கள் உள்ளன.
கற்றாழை உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் சுண்டைக்காய்
நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது. சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன.
ரத்தத்தை சுத்தப்படுத்தும் அவரைக்காய்
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் பருவ கால சூழ்நிலைக்கேற்ப எந்த வகையான உணவுகளை சாப்பிட வேண்டும், அதை எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர். வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் அவரைக்காய் அரிய வகை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப்படுகிறது.
Sunday, November 06, 2011
கருவேப்பிலையின் மருத்துவ குணங்கள்
கொத்துமல்லி, புதினா போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றோம்.
ஆனால் கறிவேப்பிலை பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது என்பது பலருக்கு தெரிவதில்லை. கறிவேப்பிலை கீரை வகையை சேர்ந்தது இல்லை என்ற போதிலும் கீரைகளில் இருக்கும் அனைத்து சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக