ஏனைய இணைப்புகள்<><> இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது.

திங்கள், 26 டிசம்பர், 2011

இடப்பக்கம் தூங்குபவர்கள் மகிழ்ச்சியாக வேலை செய்தாலும், வலப்பக்கம் தூங்குபவர்கள் அதிகம் சம்பாதிக்க முற்படுகின்றனர் ?


இடப்பக்கம் தூங்குபவர்கள் மகிழ்ச்சியாக வேலை செய்தாலும், வலப்பக்கம் தூங்குபவர்கள் அதிகம் சம்பாதிக்க முற்படுகின்றனர் ?

படுக்கையில் வலது பக்கம் திரும்பி படுத்து தூங்குபவர்களைவிட, இடது பக்கம் திரும்பி தூங்குபவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியாகவும், குறைந்த மன அழுத்தத்துடன் இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஆரோக்கியமான டயட் முறை ?

உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப் போவதும் உண்டு.

கண்க‌ள் பு‌த்துண‌ர்‌ச்‌‌சியுட‌ன் இரு‌க்க ?

கண்கள்தான் உள்ளத்தைத் தெரிந்து கொள்ள உதவும் கண்ணாடிகள்.அதற்கு ஒரு காரணமாக அமைவது தூக்கம் ஒரு நாளில் எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம் சந்தோஷமோ, துக்கமோ எதுவானாலும் அதைக் கண்கள் பிரதிபலித்துவிடும்.

பாலில் தண்ணீர் அதிகமாகக் கலந்து தருவதால் அடிக்கடி குழந்தைகள் சிறுநீர் கழிக்கிறார்கள் ?

*சில குழந்தைகள் பிறந்தது முதலே அடிக்கடி சிறுநீர் கழித்தபடி இருப்பார்கள்.ஜட்டியை மாற்றிய சில நிமிடங்களிலேயே நனைத்து விடுவார்கள். இதனால், அந்த இடமே உப்புநீரில் ஊறியதுபோல் தோலுரிந்து புண்ணாகிவிடும். 

இதயத்தை பாதுகாக்க தினமும் பாதாம் பருப்பு ?

நமது உடம்பில் மூளையை தலைமை செயலகம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் இதயமே நமது உடம்பின் தலைமை செயலகம் என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள்.

இதை படித்தால் ஐஸ் வாட்டரை பயன்படுத்த யோசிப்பீங்க ?

*இப்போதெல்லாம் கிராமத்திலும்,நகர்புறங்களிலும் `பிரிட்ஜ்’ பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதனால், குளிர்ச்சியான தண்ணீர் குடிப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்துவிட்டது. காலை உணவானாலும் சரி, இரவு உணவானாலும் சரி இந்த குளிர்ச்சியான தண்ணீர்தான் பலரது தாகத்தை தணிக்கிறது.

சாப்பிட்ட உடனேயே படுக்கைக்கு செல்ல கூடாது ?

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கவழக்கங்கள் இன்றியமையாத ஒன்று.
1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும்.

கழுத்தை சுருக்கமில்லாமல் நன்றாக வைத்துக் கொள்ள ?

ஒரு பெண்ணின் கழுத்தைப் பார்த்து அவரின் வயதைச் சொல்லி விடலாம். அதற்கு காரணம் கழுத்திலே ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் கோடுகள். வழவழப்பான கழுத்தைப் பெறுவது அரிது. ஆனால் கீழ்வரும் பயிற்சிகளைச் செய்வதன் மூலம் கழுத்தை சுருக்கமில்லாமல் நன்றாக வைத்துக் கொள்ள முடியும்.

தினசரி கழுத்துப் பயிற்சி

கொழுப்பை கரைக்கும் பீஃப் (மாட்டு இறைச்சி) ?

பீஃப் (மாட்டு இறைச்சி) சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் தொடர்பாக அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில பல்கலை ஆராய்ச்சியாளர் பென்னி க்ரிஸ் எதர்டன் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது.

ஓய்வின் அவசியம் ?

பரபரப்பான இன்றைய சூழலில் காலையில் எழுந்தது முதல் நிற்க கூட நேரமில்லாமல் எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.

கடுகும், கறுவேப்பிலையும் சமையலில் சேர்க்கும் பொருள் மட்டுமல்ல ?

கடுகும், கறுவேப்பிலையும் சமையலில் சேர்க்கும் பொருள் மட்டுமல்ல அதற்கான பிரத்யேகமான மருத்துவ குணங்கள் உண்டு. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்: 

ஸ்லிம்மாக இருக்க தினசரி 2 வாழைப்பழம் ?

“தினசரி ஒரு ஆப்பிள் போதும், வைத்தியர் வேண்டாம்” என்பது ஆங்கில அறிவுரை. அந்த ஆப்பிள் நான்குக்கு ஒரு வாழைப்பழம் சமம் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
வாழைப்பழத்தின் மகத்துவம் காலம் காலமாக தெரிந்தது தான். எனினும் இப்போதைய சூழ்நிலையில் மனித ஆரோக்கியத்தில் அதன் பங்கு பற்றி இந்தியாவின் டெல்லியை சேர்ந்த உணவியல் நிபுணர்கள் சிலர் ஆய்வு நடத்தினர்.

தூங்கப் போவதற்கு முன், தூங்கிய பின் ?

தூங்கப் போவதற்கு முன், தினமும் கை, கால்கள், முகத்தை கழுவுங்கள், பற்களையும் சுத்தம் செய்யுங்கள்.
சிறிது நேரம் வாய்க்குள் தண்ணீரை வைத்து, நன்றாக வாயை கொப்பளியுங்கள்.

உடலுக்கு தேவையான வைட்டமின்களை தெரிந்து கொண்டு அதை உட்கொள்வது மிகவும் அவசியம் ?


நாம் உயிர் வாழ உடலுக்கு முக்கியமான உயிர் சத்துக்கள்(வைட்டமின்கள்) தேவைப்படுகின்றன. நாம் நம் உடலுக்கு தேவையான உயிர் சத்துக்களை தெரிந்து கொண்டு அதை உட்கொள்வது மிகவும் அவசியம்.
உடலுக்கு தேவையான உயிர் சத்துக்கள்:

மழை காலங்களில் சிறந்த உணவு எது ?

மழை காலங்களில் சிறந்த உணவு எது என்று பலருக்கு தெரியாமல் இருக்கும். எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்று குழப்பமாக இருக்கும். சிலருக்கு ஒத்துக்கொள்ளும், சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
இதை தீர்க்க சில உணவு குறிப்புகள் இதோ

குளிர் காலத்தில் செய்யவேண்டியவை ?

*தமிழகத்தில் குளிர் வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது. சிறுவர்களும் முதியவர்களும் பனியின் தாக்கத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்துவருகின்றனர். மாலை 6 மணி தொடங்கிவிட்டாலே சில்லென்று வீசும் காற்றும், இரவில் கொட்டும் பனியால் வெளியில் நடமாடுவதை பலர் தவிர்த்துவருகின்றனர். 

மூக்கு மற்றும் தொண்டை பிரச்னைகள் இருக்கும் போது, சூடா ஒரு சிக்கன் சூப் ?

மூக்கு மற்றும் தொண்டை பிரச்னைகள் இருக்கும் போது அதிக திரவம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் பழச்சாறு அருந்துவதும் முக்கியமானது. இதனால் உடலில் நீரின் அளவு பராமரிக்கப்படும். மேலும் தொண்டை, மூச்சுப் பாதை சுத்தமாக இருக்கும். பழச்சாறுகளோடு, சிக்கன் சூப் மற்றும் காய்கறி சூப் அருந்துவதும் நல்லது.

வெற்றுடம்புடன் சூரிய ஒளியில் அமர்ந்துகொண்டிருந்தால், உடம்பின் நச்சுப்பொருள்கள் அழிந்துவிடும் ?

ஆதி மனிதன் முதல் இன்றைய அறிவியல் மனிதன் வரை காலம் காலமாய் வியந்து வணங்கும் இயற்கை தெய்வம் சூரியன். உலகைக் காக்க ஒளி தருவதோடு, நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் விளங்குகிறது சூரிய சக்தி.

ஆண்களைவிட பெண்கள் மிக முக்கியமாக சாப்பிட வேண்டிய சாறு ?

கருப்பு திராட்சையில் வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து அதிகம் காணப்படுகிறது. இதில் போலிக் அமிலம் இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.
பலர் கர்ப்பகாலங்களில் சாப்பிடக்கூடாது, குழந்தை கருப்பாக பிறக்கும் என்பார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, நீங்கள் சாப்பிடுவது குழந்தைக்கும் நல்லது தாய்க்கும் நல்லது.

சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும் ?

சீதாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது.
சீதாப்பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன.

அரசியல் செய்திகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக