சிரியாவில் இதுவரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தைத் தாண்டலாம்: ஐ.நா
சிரியாவில் அதிபருக்கு எதிராக நடைபெற்று வரும் கலவரத்தில் இதுவரை 5
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை
அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.அதிபர் பஷார் அல்- அஸ்ஸாத் ஆட்சிக்கு எதிராக சிரியாவில்
கடந்த 10 மாதங்களாக பொதுமக்கள் போராட்டம் நடந்து வருகிறது. போராட்டக்காரர்களை
ஒடுக்க ராணுவத்தை பயன்படுத்தி வருகிறார் அதிபர் அல்-ஆசாத். பொதுமக்களை ராணுவம்
கொத்து கொத்தாக கொன்று குவித்து வருவதால் அங்கு வன்முறை தலைவிரித்தாடுகிறது.
இந்த நிலையில் ராணுவம் சுட்டத்தில் இதுவரை 5 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாக ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பு தலைவர் நவி பில்லாய் தெரிவித்துள்ளார். கடந்த 10 நாட்களில் மட்டும் 1000-க் கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். சிரியாவில் மனிதாபிமானத்துக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே இது குறித்து சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் புகார் தெரிவிக்கப்படும் என்றும் நவி பில்லாய் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக