ஏனைய இணைப்புகள்<><> இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது.

புதன், 14 டிசம்பர், 2011

நாய்குட்டியின் பெயர்


ஏன் பல்லி கொன்றீரய்யா

[இயற்கையின் நேனொடெக்னாலஜி தொடரில், சொல்வனம் இணைய இதழில் வெளியாகியிருக்கும் கட்டுரையின் மீள்பதிவு.] மெத்தைமடி அத்தையடி என அதன்மீது காலின் மேல் காலை மடக்கிப்போட்டு மல்லாக்க விஸ்ராந்தி தீவிரமான “வீக்கெண்டில் ஒரு உலக இலக்கியம் சமைப்போமா” யோஜனையிலிருக்கையில், விட்டத்தில் செல்லும் பல்லியை கவனித்திருக்கிறீர்களா? அதுவும் நம்மை கவனித்தபடியே “ம்க்கும், இவனாவது இலக்கியமாவது” என்றபடி தலைகீழாய் விட்டத்தில் நகரும். நாம் கவனிப்பதை அறிந்து, உற்றுப்பார்த்து ஊர்ஜிதம் செய்து, சட்டென்று டியூப்லைட் சட்டம், மின்சார ஒயரிங் குழாய் என மறைவிடத்திற்கு பின் பதுங்கும். வேறெங்காவது …
Continue reading »
Permanent link to this article: http://www.ommachi.net/archives/3422

தொட்டால் தொடுதிரை பூ மலரும்

17948-69bcf970-200
முன்னொரு காலத்தில் டயனோரா என்றொரு டிவி பிராண்ட் இருந்தது. விற்பதற்கு அங்கம் அவிழ ஆடையணிந்த அணங்கைகள் அக்கம்பக்கம் அதிர ”கீ……….ப் இன்ன்ன்ன்ன் டச்” என்று ஸ்டிரியோவில் விளம்பர ஸ்லோகம் விண்ணப்பிப்பார்கள். என்னுடன் தொடர்புகொண்டிரு என்று டிவி அன்று அரைகூவியது, மின்தொடர்புசாதனங்களின் செயல்பாட்டிற்கே இன்று இன்றியமையாத ஸ்லோகமாகிவிட்டது. கணினி சி.ஆர்.டி. திரையில் தொடங்கி, கியோஸ்க்களின் பில் போடும் மெஷின், சூதாட்ட ஸ்லாட் மெஷின்கள், வங்கி ஏ.டி.எம்.கள், பாம் பைலட், ஸ்மார்ட் ஃபோன் என அநேகமாக அனைத்து மின்திரைகளுமே இன்று …
Continue reading »
Permanent link to this article: http://www.ommachi.net/archives/3407

தாமரை இலையும் மகா நீரொட்டா பரப்புகளும்

lotus-effect-01
பணியில் பாஸ் கூறும் ஐடியாக்களை பரிசீலிக்கையில், மனையில் மனைவி செய்த புதிய பதார்த்தத்தை உண்டு உவேவக்கையில், பஸ்ஸில் வெகுஜன வாராந்திரிகளில் பளீரிடும் காரிகைகளை புரட்டுகையில், சட்டென கிரகிக்கக்கூடிய செய்திக்கோர்வையான சிறுகட்டுரையாக இன்றி, ஏன், எதற்கு, எப்படி, என்று ஒரே விஷ(ய)த்தை நீட்டிமுழக்கி முதுகுவலிக்கவைக்கும் தீவிர கட்டுரைகளை இணையத்தில் மேய்ந்து புக்மார்க்கையில், இப்படி நம் பல மேலோட்ட செயல்பாடுகளை-விளைவுகளை மேற்கோளிட, ”தாமரை இலைத் தண்ணீர் போல” என்பது நாமறிந்த வழக்கு. காவிரி நாடன் திகிரிபோன்ற ஞாயிறின் ஒளிமழையில், பாண்டிய …
Continue reading »
Permanent link to this article: http://www.ommachi.net/archives/3378

இயற்கையின் நேனொடெக்னாலஜி

வைரஸ் நுண்ணுயிர்களின் எளிய செயல்பாடுகளையே கணிணிவகை பைனரி செய்திகளாய் பாவிக்கும் நேனோபாட் எனும் நுண்ணுடுருவிகளிலிருந்து, ஆட்டோவைவிட சற்றே பெரிதான ஊர்த்தியை நேனோ என்று பெயரிடும் அளவிற்கு நேனோ என்றதும் அறிவியலாளர்களுடன் நேனு நேனு என்று வர்த்தகவித்தகர்களும் கைகோர்க்கும் நேனோ டெக்னாலஜி என்கிற அறிவியல் துறை இன்று பிரபலம். இயற்கையை அறிதலுக்கு அறிவியல்சிந்தை ஒரு உகந்தவழி என்றால், அவ்வறிதலின் வெளிப்பாடான தொழில்நுட்பங்களுக்கும் இயற்கையே முன்னோடி. நேனோ டெக்னாலஜி விஷயத்திலும் இது உண்மையே. பல நேனோ பொருட்கள், டெக்னாலஜிகள், இயற்கையில் …
Continue reading »
Permanent link to this article: http://www.ommachi.net/archives/3375

வாட்டர் பாட்டில் சூரிய விளக்குகள்

அன்றே சாலமன் சொன்னார், எண்ணையில்லாமல் திரியில்லாமல் விளக்குகள் தலைகீழாக தொங்குமென்று. இது சுமார் முப்பது வருடம் முன்னர் பட்டினத்தில் பூதம் திரைப்படத்தில், விட்டத்தில் தொங்கும் மின்சார சாண்டிலியர் விளக்குகளை வியந்து பூதமாய் அசோகன் வசனித்தது. எண்ணையின்றி, மின்சாரமின்றி வீட்டு விளக்குகள் எரியுமா? எளிய தொழில்நுட்பத்தில் தண்ணீர் பாட்டில் சூரிய விளக்குகள் செய்திருக்கிறார்கள். சில வருடங்கள் முன், நல்ல வெய்யில், ஒரு மின்வெட்டு நாளில் பிரேஸில் பொறியியலாளருக்கு, எதேர்சையான வியர்வையில் தோன்றிய கண்டுபிடிப்பு. அருகில் படம். சகாய விலையில், …
Continue reading »
Permanent link to this article: http://www.ommachi.net/archives/3372

2011 வேதியியல் நோபல் பரிசு

symmetry
2011திற்கான வேதியியல் நோபல் பரிசு இஸ்ரேல் நாட்டு பேராசிரியர் டேனியல் ஷெக்ட்மேன் (Daniel Shechtman) குவாஸி-க்ரிஸ்டல்ஸ் அல்லது குவாஸி-பீரியாடிக் க்ரிஸ்டல்ஸ், பகுதி வெளிச்சீர் படிகம், என்ற விந்தை பொருளை கண்டுபிடித்ததற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இப்பொருளையும் அதன் கண்டுபிடிப்பின் தாக்கத்தையும் புரிந்துகொள்ள சாதா படிகங்களை அறிமுகப்படுத்திக்கொள்வோம்.
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2492

2011 இயற்பியல் நோபல் பரிசு

cosmic_ev_labeledD
பந்தை தூக்கிப்போட்டு காட்ச் பிடிக்க காத்திருக்கையில் பந்து கீழே விழாமல் மேல்நோக்கியே சென்றுகொண்டிருந்தால் பேஜாராகிவிடமாட்டீர்கள்? இப்படி ஒரு நிகழ்வையே 1998இல் நம் அண்டத்திற்கே ஒட்டுமொத்தமாய் நிகழ்வதாய், 2011 இயற்பியலுக்காக நேற்று நோபல் பரிசு வென்றுள்ள விஞ்ஞானிகள் 1998இல் கண்டுபிடித்தார்கள். வென்றவர் மூவர். சௌல் பெர்ல்முட்டர், அமெரிக்க லாரன்ஸ்-பெர்க்லி நேஷனல் லபாரட்டரியின் சூப்பர்நோவா காஸ்மாலஜி பிராஜெக்ட்டின் தலைவர் மற்றும் கலிஃபோர்னியா பல்கலைகழகத்தின் அஸ்ட்ரோபிஸிக்ஸ் பேராசிரியர். பிரையன் ஷ்மிட், ஹை-ஸீ சூப்பர்நோவா ஸெர்ச் டீமின் தலைவர்; ஆஸ்திரேலியன் நேஷனல் பல்கலைகழகத்தின் …
Continue reading »
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2483

பட்டியல்கள்

lists
இணையமும் அதில் வலைப்பூக்களும் பூத்துக்குலுங்கும் காலத்திற்கு முந்தைய ஒரு பிராயத்தில் புத்தக புழுவில்லையாகினும், பூச்சியாயிருந்தேன். படித்த புத்தகங்களை ஒரு குயர் கோடுபோட்ட நோட்புக்கில் பட்டியலிட்டேன். பத்து வருடமாக பட்டியலிட்டதில், என்னிடம் உள்ள புத்தகங்கள் என்றில்லாமல், அக்கம்பக்கத்தில் ஓசியில் படித்தவை என சுமார் ஐநூறு புத்தகங்கள் தேறியது. புனைவு, வினவு, அறிவியல், அவியல், என பலசரக்கு தலைப்புகள் பட்டியலில் அடக்கம். எதற்கு இந்த சுய விளம்பரப் பட்டியல் என்று தெரியவில்லை; கேர்ள்பிரண்ட்ஸ்களிடம்கூட காட்ட எத்தனித்ததில்லை. டூ விட்டுவிடுவார்களோ என்று …
Continue reading »
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2479

டைஸன் உருளையும் மட்ரியோஷ்கா மூளையும்

matryoshka-s
இக்கட்டுரையில் தலைப்பில் உள்ள அதிசியப் பொருட்களை பற்றி அறிமுகப்படுத்திக்கொள்ளப்போகிறோம். ஏலியன்ஸ் என்ற குடையின்கீழ் தொடர்கட்டுரைகளானாலும், இக்கட்டுரையை படிக்க முன்கட்டுரைகளின் புரிதல் அவசியமில்லை. அதற்காக இந்த லாஜிக்கையே நீட்டி அடுத்த கட்டுரையை படித்துக்கொள்கிறேன் என்று இதைப்படிக்காமல் போய்விடாதீர்கள். உபயோகிக்கும் ஆற்றல் அளவை வைத்து ஒரு அறிவுசார் சமுதாயத்தை, இப்பிரபஞ்சத்தில் அது எங்கிருந்தாலும், கர்டஷாவ் அளவை வகை 1, வகை 2, வகை 3… ஒன்றினுள் அடக்கிவிடுமாறு புரிந்துகொண்டோம். இன்னமும் காணவேயில்லாத ஏலியன்ஸ் நாகரீகங்களை இப்படி வகைபடுத்துவதால் பயன் என்னவென்றால், …
Continue reading »
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2470

ஏலியன்ஸ் மேஜிக்கும் கர்டஷாவ் அளவையும்

sri-bala
பாலநாகம்மா என்று சுமார் முப்பது வருடத்திற்கு முன் தொடைவரை புரளும் சவுரி, கால்குறுகியப் புடவையில் ஸ்ரீதேவியும், முதுகுவரை நீண்ட ஜில்பா, பட்டுப்பாவாடையில் சரத்பாபுவும் நடித்துவெளிவந்த மாயாஜால ராஜா கதை படம் பார்த்திருக்கலாம். படத்தொடக்கத்தில் வில்லன் மந்திரவாதி (மனோகர்?), மந்திரக்கோலை மாயக்கண்ணாடியின் முன் ஆட்டி, உலகிலேயே அழகான பெண் யார் என்று கேட்டதும், கண்ணாடி, ஜில்தண்ணி குளத்தில் அன்றலர்ந்த தாமரையாய் சிரித்தபடியே குளிக்கும் ஸ்ரீதேவியின் முகத்தை (மட்டும்) காட்டும். கட்டுரையின் கன்னியத்தை சந்தேகிக்கும்முன், நான் இங்கு விளக்கமுற்படுவது ஸ்ரீதேவியின் …
Continue reading »
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2463

ஏலியன்ஸ் மறைமுகத் தேடலும் நுண்னூடுருவிகளும்

d-wave-orion-photo
ஏலியன்ஸ் – வளி-அறிவு-ஜீவராசிகள்– என்பவரை நேரடியாக ரேடியோ வானியல்முறையில் தேடுகிறோம். அதைப்போல மறைமுகத்தேடலும் செய்கிறோம். மறைமுகத் தேடல் பற்றி ஏன் எதற்கு எப்படி என்று அறிமுகப்படுத்திக்கொண்டுவருவதில் சென்றகட்டுரையில் விளக்கிய எக்ஸோ கிரகங்களுக்கு அடுத்து, பூமிக்கு அருகில், ஏலியன்ஸ்களுக்கான வேறு வகையான மறைமுகத் தேடல் ஒன்றை சுருக்கமாக பார்ப்போம். நேனோ ஊடுருவிகள் (ப்ரோbஸ்), வைரஸ்கள் புலப்படுகிறதா என்று தேடுவது. இதை புரிந்துகொள்ள வேறு திசையிலிருந்து அணுகுவோம். வீட்டில், அலுவலில், கணினிகளை உபயோகித்திருப்பீர்கள். என்பதுகளில் இருந்த கணினியின் திறனைக்காட்டிலும் பலமடங்கு …
Continue reading »
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2448

ஏலியன்ஸ் மறைமுகத் தேடலும் எக்ஸோ கிரகங்களும்

414858main_temp_and_size
நம் ஏலியன்ஸ் தேடலில் இரண்டு வகை; நேரடித் தேடல், மறைமுகத் தேடல். ரேடியோ வானியல் முறையில் ஏலியன்ஸ்களிடமிருந்து செய்தி சமிக்ஞைகளை தேடுவது நேரடித் தேடல். இவற்றை செட்டி (SETI) என்ன செய்கிறது என்று ஏற்கனவே அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளோம். மறைமுகத் தேடல் ஏன் எதற்கு எப்படி என்று அறிமுகப்படுத்திக்கொள்வோம். அதற்கு முதலில் நேரடித் தேடலின் ஒரு முக்கியமான தடுமாற்றத்தை புரிந்துகொள்ளவேண்டும்.
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2455

ஏலியன்ஸ் தேடலில் நம் ஊடக அலைவரிசைகள் உதவுமா?

radio-silence1
ரேடியோ வானியல் முறையில் ஏலியன்ஸ், வளி-அறிவு-ஜீவிகளின், சமிக்ஞை கிடைக்கிறதா என்று தேடுவது மற்றும் அவர்களுக்கு நாம் இன்னார் என்று செய்திச்சமிக்ஞை அனுப்புவது செட்டி (SETI) எனும் நம் ஏலியன்ஸ் தேடல்களில் நேரடி வகை (மறைமுக ஏலியன்ஸ் தேடல் உள்ளது; பிறகு பார்ப்போம்). இத்தேடல் பற்றி கேள்விப்பட்டதும் மனதில் எழும் ஒரு ஆதார சந்தேகம்: அப்படியென்றால் நம் ரேடியோ டீவி நிகழ்சிகளை ஏலியன்ஸ் கேட்டுவிடும் சாத்தியம் உள்ளதா? சொற்பமே என்று ஏற்கனவே வேறு கட்டுரையினூடே சுருக்கமாக பதிலளித்துள்ளோம். ஏன் …
Continue reading »
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2445

ஏலியன்ஸ்: ஃபெர்மி முரண்மெய், பெருவடிகட்டல் தீர்வுகள்

ஏலியன்ஸ் தேடும் படலம் தொடருகிறது. இவ்வளவு பெரிய அகண்டத்தில் விண்வெளி-அறிவு-ஜீவிகள், ஏலியன்ஸ்கள், இருக்கத்தான் சாத்தியங்கள் அதிகம். அப்படியென்றால் ஏன் ஒருவரும் இன்னமும் நமக்குத் தட்டுப்படவில்லை. ஏன் நம்மை ஒருவரும் சந்திக்கவில்லை? இப்படிக் கேட்பது ஃபெர்மி முரண்மெய் (Fermi paradox).  அதாவது, இப்படி இல்லையே என்று கேட்பதன் மூலம், ஏலியன்ஸ் இருக்க சாத்தியங்கள் அரிதுதானோ என்று புலப்படுத்துவது முரண்மெய். இதை முன்னர் விவாதித்தோம். அதேபோல, ஏன் இன்னமும் ஏலியன்ஸ் நமக்குத் தென்படவில்லை என்பதற்கான தீர்வாய் பரிந்துரைக்கப்பட்ட பெரு வடிகட்டல் …
Continue reading »
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2443

பாட்மேன் சமன்பாடு

CNy9J-s
பொழுதுபோக்கு கணிதப்ரியர்களுக்கு இந்த சிறுபதிவு. டிஸி காமிக்ஸ் சூப்பர் ஹீரோ பாட்மேன், வௌவால் மனிதன், படித்திருப்பீர்கள். திரைப்படமாய் ஏக இரைச்சலுடன், பேட்டோமொபல் ஊர்திகள், இருட்டு செட்டுகள், பக்கவாத்திய ராபின், ஜோக்கர் வில்லன் என்று கலர் கலர் காரக்டர்களுடன், வெடித்துச்சிதறும் கிராஃபிக்ஸ் கோரங்களுடன் பல பாகங்களில் கோடைவிடுமுறை கோலாகலங்களை தியேட்டரில் பார்த்திருக்கலாம் (கடைசியாக வந்தது தி டார்க் நைட் என்று நினைவு – பாட்மேன் சார், நீங்க நல்லவரா, கெட்டவரா? தெரியலியேப்பா… என்று வசனம் கூட வருமே…). அந்த …
Continue reading »
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2438
Page 1 of 1112345...10...Last »

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக