ஏனைய இணைப்புகள்<><> இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது.

சனி, 24 டிசம்பர், 2011

தெரிந்துகொள்ளுங்கள் - 56; உலக நாடுகளின் நாணயங்கள், பொதுஅறிவுத் தகவல்கள், The currencies of world countries


தெரிந்துகொள்ளுங்கள் - 56; உலக நாடுகளின் நாணயங்கள், பொதுஅறிவுத் தகவல்கள், The currencies of world countries

>> December 24, 2011




ஆப்கானிஸ்தானின் (Afghanistan) நாணயம் ஆப்கனி எ.எப்.ஸ் (Afghani-Afs; குறியீடு-AFN).

அல்பானியாவின் (Albania) நாணயம் லெக் (Lek - ALL).

அல்ஜீரியாவின் (Algeria) நாணயம் அல்ஜீரியன் தினார் (Dinar - DZD)

அன்டோராவின் (Andorra) நாணயம் யூரோ (Euro - EUR).

அங்கோலாவின் (Angola) நாணயம் க்வான்ஸா (kwanza - AOA).

ஆன்டிகுவா (Antigua) மற்றும் பர்புடாவின் (Barbuda) நாணயம்  ஈஸ்ட் கரீபியன் டாலர் (East Caribbean Dollar - XCD).

அர்ஜென்டினாவின் (Argentina) நாணயம் பிசோ (Peso - ARS).

ஆஸ்திரேலியாவின் (Australia) நாணயம் ஆஸ்திரேலியன் டாலர் (Dollar - AUD)

ஆஸ்திரியாவின் (Austria) நாணயம் யூரோ (Euro - EUR).

பஹ்மாஸின் (Bahamas) நாணயம் பஹ்மியன் டாலர் (Bahamian Dollar - BSD).

பஹ்ரைனின் (Bahrain) நாணயம் தினார் (Dinar - BHD).

பங்களாதேஷின் (Bangladesh) நாணயம் டக்கா (Taka - BDT)

பார்படோஷின் (Barbados) நாணயம் பார்பேடியன் டாலர் (Barbadian Dollar - BBD).

பெல்ஜியத்தின் (Belgium) நாணயம் யூரோ (Euro - EUR).

பெலைஸ்ஸின் (Belize) நாணயம் பெலைஸ் டாலர் (Belize Dollar - BZD)

பெனினின் (Benin) நாணயம் ஆப்ரிக்கன் பிராங்க்  (West African Franc - XOF)

பெர்முடாவின் (Bermuda) நாணயம் பெர்முடியன் டாலர் (Bermudia Dollar - BMD)

பூட்டானின் (Bhutan) நாணயம் நுஹல்ட்ரம் (Ngultram - BTN)

-தொடர்ச்சி மற்றுமொறு பதிவில்..!

Read more...

தெரிந்துகொள்ளுங்கள் - 56; பொதுஅறிவுத் தகவல்கள், General Knowledge,

>> December 12, 2011



உலகிலேயே அதிக வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).

உலகிலேயே அதிகமாக குளிரும் இடம் சைபீரியா (ரஷ்யா).

விமானம் பறக்கும் உயரத்தை அளக்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.

பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.

ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டு பிடித்துவிடும் திறண்கொண்டது.

கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.

நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை தொடர்ந்து உறக்கத்தில் இருக்க முடியும்.

மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுள்ள ஒலியைத்தான்  பொறுத்துக்கொள்ள முடியும்

சூரியன் உதிக்கும் நாடு என ஜப்பான் நாட்டினைக் குறிப்பிடுகின்றனர்.

சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம், பார்மிக் அமிலம் ஆகும்.

ஜீரோ வாட் பல்பு என்பது உண்மையில் 15 வாட்கள் கொண்டது.

பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி ஓடோமீட்டர்.

உலகின் முதல் செயற்க்கைகோளின் பெயர் ஸ்புட்னிக்-1.

கிரெடிட் கரட் வழங்கிய முதல் இந்திய வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.

மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்.

மகாத்மா காந்திதான் இந்திய தபால் தலையில் முதலில் இடம்பெற்ற இந்திய தலைவர் ஆவார்.

ஓரினச்சேர்க்கை திருமணத்தை முதலில் அனுமதித்த நாடு டென்மார்க்.

சீனா வரலாற்றாசிரியர்களின் சொர்க்கம் என அழைக்கப்படுகிறது.

Read more...

தெரிந்துகொள்ளுங்கள் - 55; பொதுஅறிவுத் தகவல்கள், General Knowledge

>> November 29, 2011



தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். (SCUBA - self Cointained Underwater Breathing Apparatus)

முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.

தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சைநீலம்சிகப்பு

பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.

சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.

காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.

அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.

கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்துகுளிர்ச்ச்சியை கொடுக்கிறது.

உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சிஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்துஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.

முதல் டிரக்டர் 1900 ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது.

முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா

Read more...

தெரிந்துகொள்ளுங்கள் - 54; பொதுஅறிவுத் தகவல்கள், General Knowledge

>> November 17, 2011



உலகில் முதன் முதலில் வன விலங்கு தடுப்புச் சட்டம் அமெரிக்காவில் தான் இயற்றப்பட்டது, இயற்றப்பட்ட ஆண்டு கி.பி.1890.

உலக சுற்றுச்சுழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5-ல் கொண்டாடப் படுகிறது, முதல் சுற்றுச்சுழல் தினம் 1973-ம் கொண்டாடபட்டது.

அக்டோபர் 1 தான் உலக இரத்ததான தினமாக கருதப்படும் நாள் ஆகும்.

இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு மார்ச்-21 தொடங்குகிறது

1969- ஆண்டுதான் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தேசிய மயமாக்கப்பட்டது.

அக்டோபர் 30 உலக சிக்கன நாள் கொண்டாடப்படுகிறது, முதல் சிக்கன நாள் 1934-ம் ஆண்டு இத்தாலி வங்கி ஒன்றால் அறிமுகம் செய்யப்பட்டது.

1993 ஆண்டு தேசிய மனித உரிமை ஆணையம் இந்தியாவில் அமைக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.

உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட்இதன் உயரம்  8848 மீட்டர்கள்.

உலகில் திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான் ஆகும்.

உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.

உலகிலேயே இரண்டு பிரதமர்களைக் கொண்ட ஒரே நாடு சான்மரீனோ.

உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.

உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர்மொரார்ஜி தேசாய்.இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.


Read more...

தெரிந்துகொள்ளுங்கள்-53; பொதுஅறிவுத் தகவல்கள் learn more, general knowledge

>> November 07, 2011



பள்ளிகளில் தினமும் காலையில் பாடும் தமிழ் தாய் வாழ்த்து மனோன்மணியம் என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது ஆகும்.

தமிழகத்தின் தேசிய பறவை புறா இது எத்தனை பேருக்கு தெரியும் என்பது எமக்கு தெரியவில்லை.

இந்திய அளவில் புகழ் பெற்ற ஜவுளி சந்தைகளில் ஒன்று தமிழகத்தின் ஈரோடு ஜவுளி சந்தை ஆகும்.

எட்டையபுரம் எட்டப்பனுக்கு மட்டும் சொந்தமானது அல்ல மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த ஊரும் அதுதான்.

மகாத்மாவின் புகழ் பெற்ற போராட்டங்களில் ஒன்றான உப்பு சத்யாகிரகத்தை தமிழகத்தில் தலைமை ஏற்று நடத்தியவர் ராஜகோபலாச்சாரி.

இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு 1950 ஆகும்.

இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை - NH 7.

உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரினாவை வடிவமைத்து அதற்க்கு மெரீனா என்று பெயர் சூட்டியவர் கிரண்ட்டப் ஆவார்.

சென்னை மெரினா கடற்கரை என்றாலே நினைவுக்கு வரும் உழைப்பாளர்கள் சிலையை செய்தவர்  டி.பி. ராய் ஆவார்.

ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்திய இசை அமைப்பாளர் என்ற பெருமையை பெற்றவர் நம் வித்யாசாகர் ஆவார்.

தமிழ்நாடு தான் இந்தியாவின் முதல் பெண் கமாண்டோ படையை உருவாக்கிய மாநிலம் என்ற பெருமையை பெறுகிறது.

ஜான் சுல்லிவன் என்பவர்தான் உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் ஆவார்.

Read more...

தெரிந்துகொள்ளுங்கள்-52; அறிந்துகொள்வோம் அமெரிக்க நாட்டின் சிறப்புகள்; American's specials.

>> November 06, 2011



அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள், 

அனைத்து துறையிலும் நவீனமயத்தையும் செயற்கைகளையும் புகுத்திய அமெரிக்கா இப்போது உணவு விசயத்தில் மட்டும் இயற்கையை நோக்கி தன் பார்வையை திருப்பியிருக்கிறது. இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி விளைவிக்கபடும் பொருட்கள் மற்றும் ரசாயன தொழிற்சாலைக் கழிவுகளால் பாதிப்புகளுக்கு உள்ளாகாத பழவகைகள், தானிய வகைகள், பால் பதனப் பொருட்கள், இறைச்சி கோழி மற்றும் முட்டை ஆகிய உணவு பொருட்களுக்கு அமெரிக்க வேளாண்துறை ஆர்கானிக்(ORGANIC) என்ற முத்திரையை பதித்து விற்பனை செய்கிறது. இதனுடைய விலை அதிகம் என்றாலும் அமெரிக்கர்கள் இந்த ஆர்கானிக் உணவு பொருட்களையே அதிகம் விரும்பி வாங்குகின்றனர்.


அமெரிக்காவில் பணிபுரிபவர்கள் தங்கள் முதலாளியைக் கூட பெயர் சொல்லி அழைக்கும் வழக்கம் தான் இருக்கிறது. இங்கு இருப்பது போல் மேலதிகாரி, தொழிலாளி, முதலாளி ஆகியோர்களுக்கிடையே எந்த ஏற்ற தாழ்வும் கிடையாது. நண்பர்களை போலவே சகஜமாய் பழகுவார்கள். அதே போல் அமெரிக்க நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பணி நேரமும் கடுமையானதாக இல்லை. கொடுக்கப்பட்ட வேலையை முடித்துவிட்டால் ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியில் செல்லலாம், எப்போது வேண்டுமானாலும் வரலாம். அவர்களுக்கு வேலை தான் முக்கியமே தவிர வேலை செய்யும் நேரம் அல்ல.

அமெரிக்காவில் பெற்றோர்கள் குழந்தைகளை அடிப்பது அந்நாட்டு சட்டப்படி குற்றமாகும். பெற்றோர் அடித்ததாக செய்தி கிடைத்தால் அடுத்த நிமிடம் அந்த வீட்டில் போலீஸ் ஆஜராகிவிடும். இந்த சட்டத்திற்கு பயந்து குழந்தைகளை அடிக்காவிட்டாலும் குழந்தைகள் ஏதேனும் தவறு செய்யும் போது வேறுவிதமாக தண்டித்து விடுகிறார்கள். அதாவது தவறு செய்த குழந்தைகளை ஒரு அறையில் சில மணி நேரம் தனியாக அமர வைத்து விடுகிறார்கள். இப்படி தனியாக அமர வைப்பதால் அக்குழந்தைகள் செய்த தவறை உணர்கிறார்கள். இத்தண்டனைக்கு “TIME OUT’ என்று பெயர். இப்படி தனிமைப்படுத்தல் மூலமாக குழந்தைகள் எதிர்காலத்தில் பெரிய அளவிலான தவறுகள் ஏதும் செய்யாமல் ஒழுக்கம் மிக்கவர்களாக வாழ்வார்கள் என்பது அமெரிக்கர்களின் பொதுவான நம்பிக்கை ஆகும்.


அமெரிக்காவில் கோடைகாலங்களில் அதிகாலை நான்கு மணிக்கே சூரியன் உதயமாகிவிடும். இந்த பகல் பொழுதை அமெரிக்கர்கள் முழுமையாக பயன் படுத்திக்கொள்ள தங்களது கடிகாரத்தில் ஒரு மணி நேரத்தை முன்னதாக திருத்தி வைத்துக் கொள்கிறார்கள். இதனால் கோடைகாலங்களில் அமெரிக்காவில் ஒரு மணி நேரம் முன்னதாகவே பகல் பொழுது துவங்கி விடுகிறது.

இன்னும் நிறைய செய்திகளை திரட்டி எழுத வேண்டும் என்று எனக்கு ஆசைதான் நேரமின்மை காரணமாக இத்தொடர் பதிவு இத்துடன் நிறைவு பெறுகிறது. இருந்தாலும் இத்தொடர் பதிவு அமெரிக்காவை பற்றி நீங்கள் அறிந்திராத பல அறிய தகவல்களை உங்களிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன், மீண்டும் உங்ககளை ஒரு சிறந்த பதிவுடன் சந்திக்கிறேன், இப்போது வணக்கத்துடன் விடைபெறுகிறேன்.

Read more...

தெரிந்துகொள்ளுங்கள் - 51; அமெரிக்காவின் சிறப்புகள், Effectiveness of the United States, Older Americans Act

>> October 31, 2011



அனைவருக்கும் வணக்கம்,

அமெரிக்காவின் சிறப்புகள் பற்றிய தொடர் பதிவின் மூன்றாம் பாகம் இது,

நம் நாடுகளில் நடப்பது போல் அதிக அளவு சாலை விபத்துகள் அமெரிக்காவில் நடப்பது இல்லை. தப்பித் தவறி விபத்து நடந்து விட்டால் அடுத்த நிமிடமே ஆம்புலன்ஸ் வந்து விடுகிறது. அதைத் தொடர்ந்து காப்ஸ் என்று சொல்லப்படும் காவலர்கள் வந்து விடுகிறார்கள். விபத்து நடந்த இடத்திற்கு வரும் காவலர்கள் அங்கு இருப்பவர்களை பார்த்து கேட்கும் முதல் கேள்வி “நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா? பயப்பட வேண்டாம் உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?.


நம்ம ஊரில் விபத்து நடந்த இடத்திற்கு வரும் காவலர்கள் முதல் கேள்வி (விபத்தில் அடி பட்டவன் உயிருக்கு போராடிக்கிட்டு இருந்தாலும் அவனை உசிப்பி கேக்கும் முதல் கேள்வி) உன்கிட்ட லைசென்ஸ் இருக்கா, இன்சூரன்ஸ் இருக்கா? ஏன்னா அப்பதானே ஏதாவது பணம் பறிக்க முடியும்.

அமெரிக்காவில் குழந்தைகளை காரில் ஏற்றி செல்வதானால் அவர்களுக்கு தனியாக சீட் இருக்க வேண்டும். பிறந்து ஓராண்டு வரையிலான குழந்தைகளை வாகனம் செல்லும் திசையை பார்த்து உட்கார வைக்க கூடாது. காரின் பின்பக்கம் பார்த்த வண்ணம் அமர்ந்திருக்க வேண்டும். நம்ம ஊரை போல குழந்தைகளை பக்கத்தில் நிறுத்திக் கொண்டோ அல்லது மடியில் வைத்துக்கொண்டோ காரில் பயணம் செய்ய கூடாது. இது போன்ற சட்டங்கள் அங்கு இருப்பதால் தான் அங்கு விபத்து நடப்பது குறைவு.


நம் நாட்டிலோ சட்டங்கள் குறைவு, அப்படியே இருந்தாலும் அவற்றை நாம் மதிப்பதில்லை. போக்குவரத்து விதிகளை நம்ம ஊர் போக்குவரத்து அதிகாரிகளே பின்பற்றுவதில்லை பின்னர் எப்படி மக்கள் பின்பற்றுவர். இந்தியாவில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு தங்கள் உயிரை பற்றியோ அல்லது அடுத்தவர் உயிரை பற்றியோ எந்த பயமும் கிடையாது. சட்டத்தை பற்றியும் பயமில்லை, போலீஸ் பற்றியும் பயமில்லை.

அமெரிக்காவை பொறுத்தவரையில் உலகத்தின் மற்ற நாடுகள் என்னென்ன வழக்கங்களை கையாள்கிறதோ அதற்க்கு நேர்மாறான வழக்கங்களை பின் பற்றுகிறது. உலகெங்கும் வாகனங்களில் ஸ்டீயரிங் வலது பக்கம் உள்ளது, இங்கு இடது பக்கம் உள்ளது. நம் நாட்டிலும் சரி உலகின் ஏனைய நாடுகளிலும் சரி சாலைகளில் இடது பக்கம் தான் செல்வது வழக்கம், ஆனால் அமெரிக்கர்கள் வலது பக்கமே செல்கிறார்கள். பூட்டுகளை பூட்டும் போது நாம் மேல் நோக்கி பூட்டுகிறோம், திறக்கும் போது கீழ் நோக்கி திறப்போம் ஆனால் அமெரிக்கர்கள் இதற்கு நேர்மாறாக பூட்டும் போது கீழ் நோக்கியும், திறக்கும் போது மேல் நோக்கியும் திறப்பார்கள். அதே போல் மின் விலக்கு தலைகீழ் மற்றம் தான் மேலே அழுத்தினால் மின் விளக்கு எறியும் கீழே அழுத்தினால் மின்விளக்கு அணையும்.

அமெரிக்காவில் அபார்ட்மெண்ட்டுகளில் வசிப்பவர்கள் தான் அதிகம், பொதுவாக அங்கு ஒரு அபார்ட்மெண்ட்டுகளில் ஆறு முதல் நூறு வீடுகள் இருக்கும். ஒரு படுக்கை அரை கொண்ட வீட்டுக்கு மாதவாடகையாக 1000 டாலர் வரை செலுத்த வேண்டியதிருக்கும். இரெண்டு படுக்கையறை என்றால் 1200-ம் மூன்று படுக்கை அரை இருந்தால் 1300-ம் சராசரியாக இருக்கும். தம்பதியருக்கு குழந்தை இல்லையென்றால் மட்டுமே ஒரு படுக்கையறை கொண்ட வீடு கிடைக்கும் ஒரு குழந்தை இருந்துவிட்டால் அந்த குழந்தைக்காக தனி படுக்கையறை கொண்ட வீட்டைத்தான் வாடகைக்கு எடுக்க முடியும். குழந்தைகள் இரவில் தனியாய்த்தான் படுத்துக்கொள்ள வேண்டும் என்பது அங்கு எழுதப்படாத ஒரு சட்டம் ஆகும்.


அமெரிக்காவில் பெரும்பாலும் பிள்ளைகள் அனைவரும் 18 வயது நிரம்பியதும் தம் பெற்றோரை விட்டு தனித்து இயங்க ஆரம்பித்து விடுகின்றனர். கூட்டு குடும்பம் என்பதோ அல்லது பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் பெண் பார்த்து திருமணம் செய்து வைப்பது என்பதோ அங்கு அபூர்வம். தமது 40 வயதுகளிலேயே பெரும்பாலான பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு அந்நியபட்டவர்களாக வாழ்கின்றனர். 60 வயதிற்கு பின்னர் பெரும்பாலான முதியவர்கள் தனிமையிலேயே வாழ்கின்றனர். இதனால் அங்கு முதியோர் நலனை பாதுகாப்பதற்கென்றே தனி சட்டம் உள்ளது. அதற்க்கு பெயர் O. A. A (Older American Act). இச்சட்டம் தனிமையில் வாழும் முதியவர்களுக்கு என்னென்ன உதவி தேவை என்பதை அரசாங்கமே அறிந்து அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்து கொடுக்க வழி வகை செய்கிறது.

அமெரிக்காவை பற்றி மேலும் சில சுவையான தகவல்களை தர காத்திருக்கிறேன் தொடர்ந்து எம்மோடு இணைந்திருங்கள், மீண்டும் ஒரு சிறந்த பதிவுடன் உங்களை சந்திக்கிறேன், இப்போது வணக்கத்துடன் விடைபெறுகிறேன்.

Read more...

தெரிந்துகொள்ளுங்கள் - 50; பொதுஅறிவுத் தகவல்கள், do you know?, general knowledge

>> October 22, 2011




நான்கு கால்கள் கொண்ட விலங்கினங்களில் பூனை, ஓட்டகம், மற்றும் ஓட்டக சிவிங்கி மிருகங்கள் மட்டுமே, வலது, வலது, இடது, இடது என நடக்கும், மற்ற மிருங்கங்கள் அனைத்தும் வலது, இடது என்று தான் நடக்கும்.

வெங்காயம் அதிகமான சாப்பிட்டால் கொழுப்பு குறையும், சாப்பிட்டபின்  சரியாக பல் துலக்காவிட்டால் உங்கள் பக்கத்தில் யாரும் நிற்க இயலாது, நீங்கள் காதலித்துக் கொண்டிருப்பவர்கள் என்றால் வெங்காயம் பக்கமே தலைவைத்து படுக்காமல் இருப்பது நல்லது.

ஒரு கடிகாரம் தயாரிக்கப்பட்டு தொழிற்சாலையிலிருந்து வெளிவரும்போது அதில் நேரம் 10:10 என்றே வைக்கப்படுகிறது, இது அமெரிக்க அதிபர் ஆபிரகாம்லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்ட நேரத்தை நினைவு படுத்தத்தான் என்றாலும், இது புன்னகையையும் குறிக்க என்ற கருத்தும் நிலவி வருகிறது.

மனிதர்கள் நீல நிறத்தை பார்க்கும் போதும் மனதில் அமைதி ஏற்படுகிறதாம். ஆகையால்தான் தியான மடங்களில் இந்த நிறம் முக்கியத்துவம் பெறுகிறது. (இந்துத்துவத்தில் உலகில் அமைதியை ஏற்படுத்தவல்ல பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் நிறம், நீலம்). மனித மூளை, 11 வகை இராசாயணத்தை நம்மை அமைதிப்படுத்த உற்பத்தி செய்து பயன்படுத்துவதாக மருத்துவத் துறை கூறுகிறது.


லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், ஒரு கையால் எழுதவும், மறு கையால் வரையவும் செய்வார்.

ஆங்கில சொற்றொடரில் 15 எழுத்து ஆங்கில எழுத்துக்கள் கொண்ட எந்த ஒரு எழுத்தும் மீண்டும் திரும்ப வராத ஒரே வார்த்தை uncopyrightable.

குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றன. இரெண்டு முதல் ஆறு வயதிற்கு உட்பட்ட காலத்தில் தான் மூட்டுகள் உருவாகி வளர்கிறது.

எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் மூக்கு கண்ணாடி அணியும் பழக்கம் கொண்டவர்கள் தான்.

வறுக்காத முந்திரி கொட்டை விஷ தன்மை உடையது.

சூயிங்கத்தை முழுங்கினால், வயிற்றில் தங்காமல், தானாக வெளியேறி விடும் ஆகையால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் சூயிங்கத்தை முழுங்கிவிட்டால் பயம் கொள்ளத் தேவையில்லை.

கண்களை கசக்கி, மீண்டும் நாம் விழிக்கும் போது நாம் உணரும் நட்சத்திரம் மற்றும் கலர்கள், பாஸ்பீன்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

Read more...

தெரிந்துகொள்ளுங்கள் - 49; அமெரிக்காவின் சிறப்புகள், Effectiveness of the United States.

>> October 20, 2011



அனைவருக்கும் வணக்கம், அமெரிக்காவின் சிறப்புகள் பற்றிய தொடர்பதிவின் இரண்டாம் பாகம் இது.

கலிபோர்னியா மாகாணத்தின் தலைநகரமான லாஸ் ஏஞ்சல்ஸ் ஒரு அழகான நகரம். சினிமா உலகத்தின் தலைநகரமாக விளங்கும் ஹாலிவுட் என்னும் கனவு நகரம் இங்குதான் அமைந்துள்ளது. இங்கு தான் புகழ் பெற்ற யுனிவர்சல் ஸ்டூடியோ உள்ளது. 420-ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த ஸ்டூடியோவில் உலகத்தையே இன்னும் சொல்லப் போனால் இந்த அண்டத்தையே அடக்கியுள்ளார்கள் என்று சொன்னால் மிகையாகாது. பொது மக்கள் உள்ளே சென்று சுற்றி பார்க்கலாம், நுழைவு கட்டணம் 45-டாலர், நம் நாட்டு மதிப்பில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ரூபாய்.


ஸ்டூடியோவை சுத்தமாக வைத்திருக்கிறார்கள். யுனிவர்சல் ஸ்டூடியோவில் குப்பைகளை போட ஆங்காங்கே கூடைகள் வைத்திருக்கிறார்கள். யாரவது இரெண்டு பேர் ஓரிடத்தில் நின்று ஏதாவது தின்பண்டங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அவர்களை நோக்கி குப்பை கூடை நகர்ந்து வந்து ‘என்னை உபயோகித்து கொள்ளுங்கள் என்று குரல் கொடுக்கும். அவர்கள் குப்பையை போட்டதும் குப்பை கூடைகள் நகர்ந்து மீண்டும் பழைய இடத்திற்கு திரும்பிவிடும். சுற்றுலா பயணிகள் இருக்கும் இடத்தை தூரத்திலிருந்து கண்காணிக்கும் துப்புரவு தொழிலாளிகள் ரிமோட் மூலம் அந்த குப்பைக் கூடைகளை இயக்குகிறார்கள்.

சான்பிரான்சிஸ்கோ நகரம், நம் குஜராத்தை போல் ஒரு பூகம்ப பூமி. 200-ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பூகம்பத்தில் அப்போது அந்நகரமே முற்றிலும் அழிந்து நாசமாகிவிட்டது. இரண்டாவது பூகம்பம் 1889-ல் ஏற்பட்டது. அதில் 1800-கட்டடங்கள் முற்றிலும் அழிந்து சேதமடைந்தன. இதனால்  இங்குள்ள மக்கள் பூகம்பத்திற்கு பயந்து கான்கிரிட் வீடுகளை அமைப்பதை தவிர்க்கிறார்கள். மரங்களை உபயோகித்து தான் வீடுகளை காட்டிக் கொள்கிறார்கள். வீடு முழுக்க மரம் என்பதால் தீக்குச்சி பற்ற வைத்தால் கூட உடனே அலாரம் அடித்து எச்சரிக்கை செய்யும் அளவிற்கு ஒவ்வொரு வீட்டிலும் சென்சார் கருவிகள் அமைத்திருக்கிறார்கள். வீடுகளில் ட்யூப்லைட் உபயோகிப்பதில்லை, எல்லாம் டேபிள் லேம்ப்தான்.


அமெரிக்க டாக்ஸி டிரைவர்களில் 99% பேர் நாணயத்தோடு நடந்து கொள்பவர்கள். அவர்கள் தங்கள் பயணிகளை ஏமாற்றுவதில்லை. நம் ஊரில் ஒரு டாக்ஸியில் ஏறிக்கொண்டு இந்த நகரில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டும் என்று சொன்னால் பெரும்பாலான டாக்ஸி டிரைவர்கள் வேண்டுமென்றே பல இடங்களை சுற்றிவிட்டு கடைசியாக நாம் குறிப்பிட்ட இடத்திற்கு வந்தது நம் கைகளில் உள்ள பணத்தை கறந்து விடுவார்கள். ஆனால் அமெரிக்காவில் நாம் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று சொன்னால் டாக்ஸி டிரைவர்கள் தங்களிடம் உள்ள ரோடு மேப்பை காட்டி இந்த வழிகளில் சென்றால் பயணக் கட்டணம் குறைவு என்று சொல்லி அறிவுறுத்திய பின்பே பயணத்தை தொடர்கிறார்கள்.

நம் நாட்டில் சாலை விதிகள் பற்றி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. அதேபோல் போதுமான பயிற்சி இல்லாமலேயே வாகனம் ஓட்டுபவர்கள் அதிகம். காரணம் இங்குள்ள R.T.O-எனப்படும் விட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணம் கொடுத்தால் போதும் உரிமம் உடனடியாய் கிடைத்துவிடும். அமெரிக்காவில் நம்மூர் R.T.O-வைப்போல D.M.V இருக்கிறது, D.M.V-என்றால் DEPARTMENT OF MOTOR VEHICLES. இங்கு ஒருவர் டிரைவிங் லைசென்ஸ் எடுக்க வேண்டுமென்றால் மோட்டார் வாகன சட்டம் என்ற புத்தகம் ஒன்றை முழுமையாய் படித்து ஒரு பரிச்சை எழுத வேண்டும்.


அந்த பரிச்சையில் தேறியவர்கள் இரெண்டு மாத காலம் டிரைவிங் ஸ்கூலில் சேர்ந்து வாகனம் ஓட்டப் பழக வேண்டும். பின்பே சோதனை ஓட்டத்திற்கு அழைக்கப்படுவார்கள். D.M.V-யின் சோதனை ஓட்டத்தில் 36-திறன்களை மதிப்பீடு செய்வார்கள். இதில் 6 - தவறுகள் இருக்கலாம் 30-ஐ நாம் சரியாய் செய்தால் மட்டுமே லைசென்ஸ் தரப்படும், நம்மூரை போல் பணம் கொடுத்து லைசென்ஸ் பெறுவதெல்லாம் இங்கு கனவிலும் நடக்காத செயல். பொதுவா அமெரிக்காவில் உள்ள போலீஸ் காரங்களுக்கு லஞ்சம் கொடுக்க நீங்க முயற்சித்தால் விசாரனையே இல்லாமல் உங்களுக்கு சங்குதான்.

தொடர்ந்து எம்மோடு இணைந்திருங்கள் எமது அடுத்த பதிவில் மேலும் சில சிறப்புகளை உங்களுக்கு சொல்ல காத்திருக்கிறேன், இப்போது வணக்கத்துடன் விடைபெறுகிறேன்.

Read more...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக